நேரம் சரியில்லையோ கால நிலை மையத்துக்கு?| Dinamalar

நேரம் சரியில்லையோ கால நிலை மையத்துக்கு?

Added : அக் 18, 2016
Share
சித்ராவும், மித்ராவும் அந்த பிரபல ஜவுளிக்கடையில் தீபாவளி பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்தனர். ஒரு பெண்ணின் மூன்று வயது குழந்தை, துணி எடுத்துக் கொண்டிருந்த தாயின் சேலையை பிடித்து இழுத்தபடி அழுது கொண்டிருந்தது.அதை பார்த்த மித்ரா, ''இப்பல்லாம் குழந்தைங்களுக்கு போதாத காலம்க்கா. கொஞ்சம் கவனமா இல்லைன்னா அவ்வளவுதான்,'' என்றாள்.''நீ சொல்றது சரிதான் மித்து...திருச்சி
நேரம் சரியில்லையோ கால நிலை மையத்துக்கு?

சித்ராவும், மித்ராவும் அந்த பிரபல ஜவுளிக்கடையில் தீபாவளி பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்தனர். ஒரு பெண்ணின் மூன்று வயது குழந்தை, துணி எடுத்துக் கொண்டிருந்த தாயின் சேலையை பிடித்து இழுத்தபடி அழுது கொண்டிருந்தது.
அதை பார்த்த மித்ரா, ''இப்பல்லாம் குழந்தைங்களுக்கு போதாத காலம்க்கா. கொஞ்சம் கவனமா இல்லைன்னா அவ்வளவுதான்,'' என்றாள்.
''நீ சொல்றது சரிதான் மித்து...திருச்சி ரோட்டுல ஒரு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு, உடம்பு சரியில்லன்னு போன வாரம் ஒன்றரை வயசு குழந்தையை பேரன்ட்ஸ் கூட்டிட்டு போயிருக்காங்க... அங்க இருந்த டாக்டர், பேரன்ட்ஸ் சம்பளம், கார் விவரம்லாம் கேட்டுருக்குறாரு,''
''ம்ம்...அப்புறம்?''
''குழந்தையை கட்டாயம் அட்மிட் செய்யணும்; 20 ஆயிரம் ரூபா செலவாகும்னு சொல்லியிருக்காரு. பேரன்ட்சுக்கு சந்தேகம் வந்துருச்சு. குழந்தையை வேற டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் பார்த்ததுல வெறும், 100 ரூபாய் செலவுல அரை மணி நேரத்துல உடம்பு சரியாயிருச்சாம். வேணும்னே பணம் பிடுங்க திட்டம் போட்ட டாக்டரை பற்றி, முகநுால்ல வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''இதே மாதிரிதான்...ஆவாரம்பாளையம் பக்கத்துல இருக்கிற 'லைன்' வீட்டுல, தனியா இருந்த ஒம்பதாங்கிளாஸ் பொண்ணுகிட்ட, ஒருத்தன் வம்பு பண்ண ட்ரை பண்ணியிருக்கான். அந்த பொண்ணு போட்ட சத்தத்தை கேட்டு, ஜனங்க ஓடி வந்து காப்பாத்தியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''அப்புறம் என்னாச்சு?''
''சரவணம்பட்டி போலீஸ்காரங்க, அந்த ரவுடிய விசாரணைக்கு கூட்டிட்டு போயி, பின்னால விட்டுட்டாங்க...பேரன்ட்ஸ் கேட்டதுக்கு, பேப்பர்ல பொண்ணு பேரு வந்துரும்னு சொல்லி மிரட்டி சமாளிச்சுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''ஆனாலும் நம்ம ரயில்வே அதிகாரிங்கள மாதிரி, யாராலயும் சமாளிக்க முடியாது மித்து,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''அப்படி என்ன சமாளிச்சுட்டாங்க?''
''சமீபத்துல சேலம் ரயில்வே கோட்ட மேலாளரும், இந்தியன் ரயில்வே நிதி ஆலோசகரும் திடீர்னு, ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துருக்காங்க. கடைசி நேரத்துல இதை தெரிஞ்சுக்கிட்ட நம்மூரு அதிகாரிங்க, ரிப்பேர் ஆகி கிடந்த 'எஸ்கலேட்டரை' தற்காலிகமா சரி பண்ணி, ஆபரேட்டரையும் அப்பாயின்ட் பண்ணி சமாளிச்சுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''சூப்பர்...அப்புறம்?''
''அதே போல, நிதி ஆலோசகர் வந்தப்ப, பாசஞ்சர்ஸ் தங்கற 'ஏ.சி' ரூம்ல தற்காலிகமா கதவ மாட்டி சமாளிச்சுருக்காங்க,''
''அப்ப, யாராவது அதிகாரிங்க விசிட் அடிச்சாதான், பொறுப்பா வேலை பார்ப்பாங்கன்னு சொல்லு,'' என்று சிரித்தாள் மித்ரா.
''ரயில்வேய விடு மித்து...நம்ம கோட்டாட்சியர் ஆபீசு, இப்ப பொறுப்பு அதிகாரிகளாலதான் ஓடிட்டிருக்கு,'' என்றாள் சித்ரா.
''சி.எம்., பதவியே பொறுப்புலதானே ஓடிட்டிருக்கு...சரி, சொல்லுக்கா,'' என்றாள் மித்ரா.
''இங்க இருந்த கோட்டாட்சியர், நாலு மாசத்துக்கு முன்னால, டிரான்ஸ்பர் ஆகி போன பிறகு,
விஜயலட்சுமின்னு ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வந்தாங்க. அவங்களும் ஒரே மாசத்துல புரமோஷன்ல சென்னைக்கு போயிட்டாங்க. இப்ப மாவட்ட பிற்
படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ், பொறுப்பு கோட்டாட்சியரா இருக்காரு,'' என்றாள் சித்ரா.
''அதனால என்ன...வேலையெல்லாம் கரெக்டா நடக்குதா இல்லையா?''
''அதைதான் சொல்ல வர்றேன்....ஆறு மாசத்துல தற்கொலை கேஸ், பட்டா குடுக்கறது, நிலம் தொடர்பான கேசுக, உறுப்பு தானம், கேபிள் 'டிவி' பிரச்னைகள் உள்ளிட்ட, 200க்கும்
மேற்பட்ட கேசுக விசாரணையில கிடக்கு. தினமும் ஏகப்பட்ட ஜனங்க வந்து ஏமாந்துட்டு போறாங்க,'' என்று பதிலளித்தாள் சித்ரா.
''பக்தர்களை நம்ம கோவில் நிர்வாகிங்க ஏமாத்தறத விடவா?'' என்று மர்மமாக கேட்டாள் மித்ரா.
''இதென்ன புதுக்கதை?''
''நம்மூரு கோவில்கள்ல, விளக்கு போட நெய்ங்கற பேர்ல டால்டாவை பயன்படுத்தி ஏமாத்தறாங்க. சமீபத்துல இதை தெரிஞ்சுக்கிட்ட பக்தர்கள், ஆவின் நெய்யை வாங்கி பயன்படுத்தணும்னு கேட்கிறாங்களாம். ஆனா கோவில் நிர்வாகம் இது எதையும் கண்டுக்கறதில்லை,'' என்றாள் மித்ரா.
''வீட்டு வசதி வாரிய உயரதிகாரி போலன்னு சொல்லு,'' என்று கூறி மர்மமாக புன்னகைத்தாள் சித்ரா.
''ஏன்...அவருக்கென்னாச்சு?''
''வீட்டு வசதி வாரிய முன்னாள் மேற்பார்வையாளர், ரிட்டையர்டு ஆகி போன பிறகும், ரெகுலர் ஸ்டாப் போல டெய்லி ஆபீசுக்கு வந்துர்றாரு. ஸ்டாப், அதிகாரிங்களுக்கு ஆர்டர் போடுறாரு. வாரிய உயரதிகாரி எதையும் கண்டுக்கறதில்லைன்னு எல்லாரும் புலம்புறாங்களாம்,'' என்று முடித்தாள் சித்ரா.
அப்போது அங்கு வந்த கடை மேற்பார்வையாளர், ''ஏய்...பன்னீரு, அங்க என்ன வேலை உனக்கு? கஸ்டமரை முதல்ல கவனிப்பியா...,'' என்று சேல்ஸ்மேனை வேலை வாங்கினார்.
''உனக்கு தெரியுமா மித்து, நம்ம சி.இ.ஓ., - டி.இ.இ.ஓ.,க்கு எதிரா சங்கங்கள்லாம் வரிசையா புகார் தட்டி விடறதால, சங்க நிர்வாகிங்க பட்டியல் தயாரிச்சு கண்காணிக்க, ரகசிய டீம் போட்ருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''என்கிட்டயும் ஒரு எஜூகேஷன் மேட்டர் இருக்கு. கவர்மென்ட் ஸ்கூல்கள்ல, விர்ச்சுவல் கிளாஸ்ரூம் திட்டம் ரெடி. சி.எம்., திறந்து வைக்கறதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தாங்க. அவங்க 'சிக்கா' இருக்கறதால, திட்டத்தை துவக்காமலே 'டீச்' பண்ண, கல்வித்துறை அதிகாரிங்க உத்தரவு போட்டுட்டாங்க. எல்லாம் புது அமைச்சரோட தைரியமான முடிவுதான் காரணம்னு பேசிக்கறாங்க,''- பேசியபடி கடையின் கீழே வந்த சித்ராவும் மித்ராவும், வாங்கிய சேலைக்கு கல்லாவில் பணம் கொடுத்து விட்டு வெளியேறினர். தீபாவளி பர்ச்சேஸ் கூட்டம் தெருவில் ஜே ஜே என்றிருந்தது.
''தீபாவளி நெருங்கிருச்சு. புதுத்துணி, புதுப்பொருள் வாங்க ஜனங்க குடும்பம், குடும்பமா போறாங்க. ஆனா நம்மூர் அமைதிக்காக, இங்க வந்து தங்கியிருக்கற ரெண்டாயிரம் வெளியூர் போலீஸ்காரங்கதான் பாவம். பண்டிகை டைம்ல குடும்பத்தோட சந்தோஷமா இருக்க முடியாம கஷ்டப்படுறாங்க. உயரதிகாரிங்க இதை உணர்றாங்களா இல்ல, இதுலயும் கல் மனசோட இருக்காங்களான்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.
''வேகமா நட... மழை வர்ற மாதிரியிருக்கு,'' என்றாள் சித்ரா.
''மழைன்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. அக்ரி யுனிவர்சிட்டில காலநிலை முன்னறிவுப்பு துறைல, சீனியர் சயின்டிஸ்டுங்க யாருமே இல்லையாமே? ரெண்டு வருஷத்துல, ஒட்டுமொத்த டீமையே துாக்கிட்டாங்களாமா?'' என்றாள் மித்ரா.
''என்ன மித்து சொல்றே? பல்கலை தானியங்கி வானிலை ஆராய்ச்சி குழு பிரிவுல வேலை பார்க்கறதா ஜெகநாதன், கீதாலட்சுமி, சத்தியமூர்த்தி, ராஜவேல், வெங்கடாசலம், பன்னீர்செல்வம் பேரு, போட்டோல்லாம் இணையதளத்துல போட்ருக்காங்களே...,''
அதற்கு மித்ரா, ''அதுல இன்னும் 'அப்டேட்' செய்யாம இருக்காங்க. அவங்கள்லாம் மாறுதலாகி போய் பல மாசமாச்சு,'' என்றாள் மித்ரா.
''மாற்றம் ஒண்ணுதான் மாறாததுன்னு சும்மாவா சொன்னாங்க... நம்ம தபால் துறையை சீக்கிரமே கூட்டுறவு பண்டகசாலையா மாத்திருவாங்க போல..,'' என்றாள் சித்ரா.
''ஏன் அப்படி சொல்றேக்கா?''
அதற்கு சித்ரா, ''ஆமாண்டி...போஸ்ட் ஆபீசுல இப்ப ஸ்டாம்ப் விற்பனையாகுதோ இல்லையோ பிரிட்ஜ், போன், சபரிமலை பிரசாதம், கங்கா தீர்த்தம்னு விற்பனை பட்டைய கெளப்புதாம். இப்ப வேற மத்திய நுகர்வோர் அமைச்சகம், 'ஸ்டாக்'ல இருக்குற பழைய பருப்பு வகைகளை, போஸ்ட் ஆபீஸ் மூலமா விற்பனை செய்ய திட்டம் போட்டிருக்காங்களாம். இதை பத்தி யாராவது கேட்டா, 'தீபாவளி டைம்ல பருப்பு பற்றாக்குறை வந்துடக்கூடாது பாருங்க' ன்னு சிரிச்சு சமாளிக்கறாங்களாம்,'' என்றாள்.
''அப்ப சீக்கிரமே பேர மாத்திருவாங்க...ஸ்டாப்லாம் என்ன சொல்றாங்க?'' என்று கேட்டாள் மித்ரா.
''தபால் பட்டுவாடா செய்யவே ஆளில்லாம இருக்கோம். இதுல அதை வித்துக்குடுங்க, இதை வித்துக்குடுங்கன்னு வேற டார்ச்சர் பண்றாங்களேன்னு புலம்பறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அவங்க மட்டுமா...நம்ம ஏர்போர்ட்டுல வந்திறங்குற ஜனங்களும்தான் புலம்பறாங்க,'' என்று தாவினாள் மித்ரா.
''டீட்டெயில்ஸ் ப்ளீஸ்...,''
''ப்ரீபெய்டு டாக்சி' திட்டம் இருந்தும், கூடுதல் காசு வசூலிக்கற சில டாக்சி டிரைவருங்க, பாசஞ்சர்சுக்கு குடைச்சல் குடுக்கறாங்களாம். ஏர்போர்ட் ஊழியருங்க சிலபேரும் இதுக்கு உடந்தையா இருக்கறதுதான் கொடுமை. ஏர்போர்ட் நிர்வாகம் எப்படி இதை அனுமதிக்குதுன்னு தெரியலையேன்னு, பாசஞ்சர்ஸ் புலம்பறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''இன்னொரு மேட்டர் கேள்விப்பட்டேன் மித்து...நம்ம ஜி.எச்.சுல வண்டி திருட்டு உச்சத்துல இருக்காமே,'' என்று கேட்டாள் சித்ரா.
''கரெக்ட்தான்க்கா...சில சமயங்கள்ல டாக்டர்களோட மொபைல் போன், லேப்டாப்பையும் லவட்டிக்கிட்டு போயிருது திருட்டு கும்பல்,'' என்றாள் மித்ரா.
''ஆஸ்பத்திரியில தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கே''- அப்பாவியாய் கேட்டாள் சித்ரா.
''அட, நீ வேற... அது போலீஸ் ஸ்டேஷன் இல்ல; போலீஸ் ஸ்டேஷன் மாதிரி. அங்க இருக்கற போலீகாரங்களுக்கு வசூல் பண்றதுக்கே நேரம் பத்தலை. இதெல்லாம் எங்க கவனிக்க போறாங்க,'' என்றாள் மித்ரா.
''வசூல் பண்ணுனவங்களதான் மாத்திட்டாங்களே?'' என்றாள் சித்ரா.
''யாரு புதுசா வந்தாலும் அவங்க மாறிடுவாங்க. அதிலும் இப்ப இருக்கற ஒரு போலீஸ்காரர் கறார் வசூல் பார்ட்டி. யாரா இருந்தாலும், வசூல் பண்ணாம விடமாட்டார்,'' என, கண்ணடித்தாள் சித்ரா.
அப்போது அருகில் டூவீலரில் போய் கொண்டிருந்த ஒருவர், வண்டியை ஓரம் கட்டி மொபைல் போனில், ''ஆமாங்க... சின்னப்பராஜூ பெயருக்கு தான் பதிவு செய்யணும். பாக்கிய நேர்ல சொல்றேன்,'' என சத்தமாக யாருடனோ பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X