பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'இஸ்ரேல் ராணுவம் செய்ததை
நம் ராணுவமும் செய்துள்ளது'

மண்டி: ''பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் எடுத்ததை போன்ற அதிரடி நடவடிக் கையை, நம் ராணுவம் செய்து காட்டியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

'இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது'

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள, முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கும் ஹிமாச்சல பிரதேசத்தில், மூன்று நீர்மின் திட்டங்களை, நேற்று, நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
பிரதமரான பின், முதன்முறையாக, ஹிமாச்சல பிரதேசத்துக்கு சென்றுள்ள மோடி, மண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:இந்த மாநிலம், ஒரு வீர பூமி; ராணுவத்திற்கு நிறைய வீரர்களை

அளித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'ஒரு பதவி, ஒரே சம்பளம்' முறையை, ராணுவத்தினருக்கு கொண்டு வரப்படும் என, இங்கு அறிவித்தேன்;தற்போது, அதை நிறைவேற்றி யுள்ள மகிழ்ச்சியுடன், இங்கு வந்துள்ளேன்.

எதிரி நாடுகளிலும், பயங்கரவாதிகள் மீது, 'சர்ஜிக் கல் ஸ்டிரைக்' எனப்படும், அதிரடி தாக்குதலை, இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது குறித்து இதுவரைபேசி வந்தோம்.

தற்போது, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை, நம் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்துள்ளது குறித்து, நாடு முழு வதும் பேசப்படுகிறது. எந்த நாட்டுக்கும் சளைத்தவர் கள் அல்ல என்பதை, நம் ராணுவம் நிரூபித்துள்ளது.

நாடு முழுவதும், பா.ஜ.,ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்களுக்கு, தனிச் சிறப்புகள் உள்ளன. ஒரு முதல்வரை, தண்ணீர் முதல்வர் என்கின்றனர்

மற்றொருவரை, சாலை முதல்வர் என்று கூறுகின்ற னர். இவ்வாறு, மக்களுக்கான ;திட்டங்களை போட்டி போட்டு நிறைவேற்றி வருகின்றனர். அதே நேரத் தில், ஹிமாச்சல் முதல்வர், ஊழல் வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதிலேயேகவனம்

Advertisement

செலுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
'தலித் மீதான கொடுமை தலைக்குனிய வைக்கிறது!' :

''
நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளான பின் னும்,தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமை களை எண்ணும் போது, தலைக்குனிவாக உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில், தேசிய, எஸ்.சி., மற்றும் பழங்குடியினருக்கான திட்ட துவக்க விழாவில், நேற்று பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது:

நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இருப்பினும், தலித் மக்களுக்கு எதிராக, அவ்வப்போது நிகழும் கொடுமைகளை எண்ணும் போது, வெட்கி தலைக்குனிய வேண்டி உள்ளது.

நாட்டில், தலித் மக்களுக்கு உள்ள வேட்கைகள், பிற சமூகத்தவரை விட அதிகமாக உள்ளன. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், இந்தியா வின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பணி களில், பின்தங்க மாட்டர். இவ்வாறு பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jafarulla - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-அக்-201623:01:19 IST Report Abuse

jafarullaஹிட்லர் க்கு அடுத்தபடி நம்ம மோடிதான் இன்னும் கொஞ்ச நாளில் நம்பர் 1 இடத்துக்கு வந்திடுவார்.

Rate this:
Ravi Manickam - EDMONTON ,கனடா
20-அக்-201612:58:33 IST Report Abuse

Ravi Manickamதம்பி Ismail Al Jahrah, குவைத் Surgical Strike is fake as per Pakistanis here. Can you prove them wrong with a valid docs. படி உனது கருத்தை, இதில் எங்காவது நமது ராணுவம், நமது ராணுவ வீரர்கள், நமது அரசு அல்லது இந்திய அரசு என குறிப்பிடப்படவில்லை, நமது என்னும் வார்த்தையையே உபயோகிப்பதையே தவிர்ப்பவரை என்னவென்பது, போரை உண்டாக்க, Emotional Strategy க்காக பாக், தீவிரவாத நாதாரிகள் கேட்பதையே நீயும் கேட்டால் என்னவென்பது, பாக் மக்களும் முன்னாள் இந்தியர்கள் தான், நான் வெறுப்பது பாக், தீவிரவாத நாதாரிகளைத் தான், பாக் மக்களையல்ல. 1995 முதல் நண்பர்களாகவுள்ள உமர் பாயும், சமீபத்தில் இறந்த ஹுசைன் பாயும் எனது பாக் நண்பர்கள் தான். அதுசரி,அதென்ன I'm born & brought in Chennai only. BORN & RAISED என்று பதியவும் சரியா? என்னை திட்டினாலும் தமிழில் திட்டியது பிடித்துள்ளது சரியா...

Rate this:
Ismail - Chetpet, Chennai,இந்தியா
20-அக்-201619:07:04 IST Report Abuse

Ismailரவி அண்ணா... இங்க அந்த பாகிஸ்தான் காரங்க 5 6 magazines காட்டி Surgical Strike is fake and it has never happened னு சொல்லும் போது ஒரு தமிழனாக ஒரு இந்திய பிரஜையாக எனக்கு வலித்தது. அதை இங்கே இந்த நாளிதழில் தேடவே வந்தேன். உங்களளது கருத்து எனது இந்திய அடையாளத்தை மறுப்பது போல் இருந்ததாலே நான் மறு கருத்து பதிவு செய்தேன். I'm sorry if the comments hurts யு....

Rate this:
Somiah M - chennai,இந்தியா
19-அக்-201619:53:16 IST Report Abuse

Somiah Mஇந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்னும் தலித்துகளுக்கு நடக்கும் கொடுமையை பார்த்து தலை குனிவதாக உள்ளது என்கிறார் பிரதமர் .நூற்றுக்கு நூறு உண்மை . அதே போல இந்தியாவில் சில மாநிலங்கள் தண்ணீருக்காக ஏங்கி தலித்துகளின் நிலைமையை விட மோசமான நிலையில் உள்ளனரே அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறார் ....................... ....ஏதாவது செய்யத்தான் போகிறாரா ?

Rate this:
மேலும் 87 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X