வழி பிறக்குமா? கொஞ்சம் ஔி கிடைக்குமா?| Dinamalar

வழி பிறக்குமா? கொஞ்சம் ஔி கிடைக்குமா?

Updated : அக் 20, 2016 | Added : அக் 20, 2016 | கருத்துகள் (16)
Share
வழி பிறக்குமா? கொஞ்சம் ஔி கிடைக்குமா?காது கேட்காதுவாய் பேசவராதுசரியாய் நடக்கவராதுதானாய் சாப்பிட தெரியாதுபசி என்று சொல்லத்தெரியாதுபாத்ரூம் போகவும் தெரியாதுசிறிது நேரம்கூட நிற்கமுடியாதுதெளிவாய் கண்தெரியாதுமூளை வளர்ச்சி கிடையாதுஇதயம் சரியாய் செயல்படாதுஇதர உறுப்புகளும் கூட முழுமையாக கிடையாதுஇத்தனை பிரச்னைகளோடு தனக்கு பிறந்த குழந்தை அசோக்பாபுவை கடந்த 35
வழி பிறக்குமா? கொஞ்சம் ஔி கிடைக்குமா?


வழி பிறக்குமா? கொஞ்சம் ஔி கிடைக்குமா?
காது கேட்காது
வாய் பேசவராது
சரியாய் நடக்கவராது
தானாய் சாப்பிட தெரியாது

பசி என்று சொல்லத்தெரியாது
பாத்ரூம் போகவும் தெரியாது


சிறிது நேரம்கூட நிற்கமுடியாது

தெளிவாய் கண்தெரியாது

மூளை வளர்ச்சி கிடையாது
இதயம் சரியாய் செயல்படாது

இதர உறுப்புகளும் கூட முழுமையாக கிடையாது

இத்தனை பிரச்னைகளோடு தனக்கு பிறந்த குழந்தை அசோக்பாபுவை கடந்த 35 வருடங்களாக பராமரித்து பாதுகாத்து குறையாத தாயன்பை செலுத்திவருபவர்தான் திருப்பூர் ஜோதியம்மா

திருச்சி துறையூரில் வசதியாக வாழ்ந்த குடும்பத்தை சேர்ந்தவரான ஜோதி-சந்திரசேகர் தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு மகன்.

ஒரே மகன் பிறந்த சந்தோஷத்தில் அவனுக்கு அசோக்பாபு என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.ஆனால் பிறந்த பதினாறாவது நாளே மருத்துவர்கள் பையன் 'நார்மலாக' இருக்கமாட்டான் அவனைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையே என்று சொல்லிவிட்டனர்.

அடுத்த இடியாக தொழில் நொடித்துப்போய் சாப்பாட்டிற்கே சிரமமான நிலை ஏற்பட்டது பெத்த பிள்ளைகள் பசி பட்டினியோடு இருப்பதை பார்க்க சகிக்கமுடியாமல் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்தார் ஜோதி.

திருப்பூர் போனால் பிழைத்துக்கொள்ளலாம் என்று சிலர் சொல்ல அந்த நம்பிக்கையோடு கையில் இருந்த காசிற்கு டிக்கெட் எடுத்து திருப்பூர் வந்துவிட்டார்.

திருப்பூர் வந்து திக்கும் தெரியாமல் திசையும் தெரியாமல் தவித்தவருக்கு நெய்கடை வைத்து வியாபாரம் செய்த கோபால்சாமியும் அவரது மகன் தண்டபாணியும் ஆதரவு காட்டியிருக்கின்றனர்.வீட்டு வேலையும் கொடுத்து குடியிருக்க வீடும் கொடுத்தனர்.

வீட்டு வேலை மூலம் கிடைத்த ஊதியம் மற்றும் கணவர் செக்யூரிட்டியாக பார்த்து கொடுத்த சம்பளத்தை வைத்தே மூன்று பெண் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.

இருபத்தைந்து வருடங்கள் ஒடிவிட்ட நிலையில்...

வறுமையிலும் நேர்மையாக எளிமையாக வாழ்ந்த ஜோதியம்மாவிற்கு இப்போது அடுத்தடுத்த பிரச்னைகள்.

அறுபது வயதான நிலையில் முதுகுதண்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஜோதியம்மாவிற்கு வீட்டு வேலைகளை குனிந்து நிமிர்ந்து முன்பு போல வேலை செய்யமுடியாததால் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.

எழுபது வயதான கணவரது முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவரும் வீட்டில் சும்மாதான் இருக்கிறார்.

மாற்றுத்திறனாளியான மனவளர்ச்சி குறைந்த மகனுக்கு அரசு தரும் நிவாரண உதவி 1500 ரூபாயை மட்டுமே வைத்து வாழ்க்கையை நகர்த்தவேண்டிய சூழ்நிலை.

அடுத்து என்ன செய்வது என்று அறியாத சூழ்நிலையில் மாவட்ட கலெக்டரை பார்த்து நாங்கள் வாழ வழிகாட்டுங்கள் என்று கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.

அப்போது அங்கு இருந்த திருப்பூர் தினமலர் நிருபர் மூர்த்தியின் கண்களில் இவர்கள் பட செய்தியாக்கினார்.

செய்தியை கேள்விப்பட்டு சிங்கப்பூரில் இருந்து மோகன்ராஜ் நண்பர் மூலமாக கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டார் அவரைத் தொடர்ந்து பலரும் உதவ நாற்பாதாயிரம் ரூபாய் தேறியது.

அடுத்தடுத்து பல பிரச்னைகள் வந்தாலும் பொதுமக்கள் கொடுத்த நாற்பாதாயிரம் ரூபாயை அவர் தொடவே இல்லை, மக்கள் மனதார கொடுத்தது, அதை அவர்கள் விருப்பப்படி ஒரு தொழில் துவங்கமட்டுமே உபயோகப்படுத்துவேன் என்று உறுதியான கொள்கையோடு இருக்கிறார்.

இப்போது ஜோதியம்மாவிற்கு சேலத்தை சேர்ந்தவர் ஒரு மெஷின் தருவதாக சொல்லியுள்ளார் அந்த மெஷினில் ஈரமாவு மட்டுமின்றி மிளகாய்த்துாள் போன்றவையும் அரைத்துக்கொள்ளலாம் ஆகவே அந்த மெஷின் வந்தால் அதைவைத்து சின்னதாய் தொழில் செய்து பிழைத்துக்கொள்வேன் என்கிறார்.அதன் விலை எழுபதாயிரம் ரூபாய் இன்னும் முப்பதாயிரம் ரூபாய் அதிகம் தேவைப்படுகிறது.

இந்த மெஷினை இயக்குவதற்கு த்ரீ பேஸ் கரண்ட் வசதியோடு கூட கூடிய சிறிய கடை ஒன்று குறைந்த வாடகைக்கு வேண்டும் அல்லது அது சம்பந்தபட்ட அலுவலர்களின் ஆலோசனை வேண்டும், இது எதையுமே செய்யவேண்டாம் இருக்கிற ரூபாயை வைத்து பெட்டிக்கடை போட்டு பிழைத்துக்கொள் என்றால் அதற்கும் தயராக இருக்கிறார் ஆனால் அதற்கும் என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமல் உள்ளார்.

எவ்வளவோ பிரச்னைகள் கவலைகள் இருந்தபோதும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு இரும்பு மனுஷியாக, முப்பத்தைந்து மனவளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி மகனுக்கு கரும்பு மனுஷியாக,கவுரவத்தோடு வாழவேண்டும் என்ற துடிப்புமட்டும் ஜோதியம்மாவிடம் இருக்கிறது ஆனால் அதை செயல்படுத்துவதற்கான வழிதெரியாமல் விழிக்கிறார்,தெரிந்தவர்கள் வழிகாட்டலாம்...அவரது தொடர்பு எண்:9600420574.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X