விவசாயிகளுக்கு இயற்கை முறையில் கீரை பயிரிடும் பயிற்சி

Added : அக் 21, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை, 16 அக்டோபர் 2016: வெள்ளியங்கிரி உழவன் அமைப்பிலுள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் கீரை பயிரிடும் வழிமுறைகளை நல்லகீரை அமைப்பினை சேர்ந்த திரு.ஜெகன்னாதன் அவர்கள் விளக்கினார். இந்நிகழ்ச்சி சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் 16-10-2016 அன்று காலை 10-30 மணி முதல் 1-30 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 100 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்த
விவசாயிகளுக்கு இயற்கை முறையில் கீரை பயிரிடும் பயிற்சி

கோவை, 16 அக்டோபர் 2016: வெள்ளியங்கிரி உழவன் அமைப்பிலுள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் கீரை பயிரிடும் வழிமுறைகளை நல்லகீரை அமைப்பினை சேர்ந்த திரு.ஜெகன்னாதன் அவர்கள் விளக்கினார். இந்நிகழ்ச்சி சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் 16-10-2016 அன்று காலை 10-30 மணி முதல் 1-30 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 100 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறிய அளவிலான நிலத்தில் 10 வகையான மூலிகை கீரைகள் உட்பட 40 வகையான கீரைகளை பயிரிடும் வழிமுறைகள் விளக்கி கூறப்பட்டது. கீரைகளில் பூச்சிகள் வராமல் தடுப்பதற்காக, பத்து வகையான மூலிகை கீரைகள் நடுவிலே பயிரிடும் முறையும் விளக்கப்பட்டது. மேலும் இயற்கை முறையில் உரம் தயாரிப்பது குறித்த விளக்கங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கீரைகளுக்கு எப்பொழுதும் ஈரப்பதம் இருக்கும் விதத்தில் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தும் முறைகளையும் விளக்கினார்.

நல்லகீரை அமைப்பானது விவசாயிகளிடம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கீரைகளை கொள்முதல் செய்து ஆன்லைனில் புக் செய்யும் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு தேவையான கீரைகளை டோர்டெலிவரி மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்த அமைப்பின் மூலம் சிறிய விவசாயிகள் பெரிய அளவில் பயன் அடைந்து வருவதோடு, பொதுமக்களுக்கும் சத்தான கீரைகள் எளிதில் கிடைக்கிறது.


வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் அமைப்பு!


ஈஷா அறக்கட்டளையின் முயற்சியால், வெள்ளியங்கிரி சுற்றுவட்டார விவசாயிகளின் நலன்காக்க, 2013ல் 250 பங்குதாரர்களுடன் துவங்கப்பட்ட இந்த உழவன் உற்பத்தியாளர் அமைப்பு, கடந்த 24 மாதங்களில் 1000 பங்குதாரர்களை கொண்ட அமைப்பாக வளர்ந்திருக்கிறது. விவசாய விளைபொருட்களை இடைத்தரகர் குறுக்கீடு இன்றி சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டு பொருட்களை உருவாக்குதல், கள உதவிகள், இடுபொருட்களுக்கான நியாயவிலைக் கடைகள், விவசாய உற்பத்திக்கான பயிற்சிகள் என பலவிதங்களில் உழவன் உற்பத்தியாளர் அமைப்பானது விவசாயிகளுக்கு உறுதுணைபுரிந்து வருகிறது.

12 பேர் கொண்ட இயக்குநர்களால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பின் பணியாளர் குழுவின் அலுவலகமானது, பூலுவப்பட்டியில் இயங்கிவருகிறது. விவசாயிகளின் விளைச்சலைப் பெருக்கவும், பருவகாலத்திற்கேற்ப தேர்வு செய்து விவசாயத்தை மேற்கொள்ளவும் இந்த அமைப்பு விவசாயிகளுக்கு வழிகாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு 8903816461

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Pu - mumbai,இந்தியா
22-அக்-201608:27:00 IST Report Abuse
Raj Pu ஆன்மீகமும் தொழில்நுட்பத்தையும் மாறிவரும் ஊழலையும் நன்கு பயன்படுத்திக்கொள்வது மக்கள் உணருதல் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X