பொது செய்தி

இந்தியா

அறிக்கை சரியானதே: பொது கணக்கு குழு திட்டவட்டம்

Updated : ஜன 10, 2011 | Added : ஜன 10, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தாங்கள் செய்த அறிக்கை சரியானதே என பொது கணக்கு குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய பொது கணக்கு குழு தனது அறிக்கையில், அரசிற்கு 1,76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியிருந்தது. இதனைதொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியால் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். தகவல் தொடர்பு துறை
CAG, report,  2G spectrum,அறிக்கை,பொது கணக்கு குழு

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தாங்கள் செய்த அறிக்கை சரியானதே என பொது கணக்கு குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய பொது கணக்கு குழு தனது அறிக்கையில், அரசிற்கு 1,76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியிருந்தது. இதனைதொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியால் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். தகவல் தொடர்பு துறை கபில் சிபலிடம் அளிக்கப்பட்டது.


கபில் சிபல் கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், பொது கணக்கு குழு அளித்த அறிக்கை தவறு எனவும், அரசிற்கு 1,76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படவில்லை எனவும் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொது கணக்கு குழு தனது அறிக்கையின் உறுதியாக உள்ளது.


இது தொடர்பாக பேட்டியளித்த பொது கணக்கு குழுவின் செய்தி தொடர்பாளர், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தாங்கள் அளித்த அறிக்கை 100 சதவீதம் சரியானதே என கூறினார்.


மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் மீண்டும் நோட்டீஸ்: இதனிடேயே, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி சுப்ரமணியன் சுவாமிதொடர்ந்த வழக்கில்மனுக்களை விசாரித்த சுப்ரீம்கோர்ட் மத்திய அரசு, 11 மெ?பைல் போன் நிறுவனங்கள் மற்றும் டிராய் அமைப்பு ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தெ?டர்பாக மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிறுவனங்களை காப்பாற்ற மத்திய அமைச்சர் கபில் சிபல் முயற்சி செய்வதாக கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajaguru - chennai,இந்தியா
10-ஜன-201120:42:01 IST Report Abuse
rajaguru cac is still having confident to prove the spectrum corruption. but the govt denies.that means they want to hide or by threatening the officials to agree with them.now the judgement is in the publics hand.coming assembly election in tn dmk&congress alighns is going defeat.
Rate this:
Cancel
Dhandapani - Cuddalore,இந்தியா
10-ஜன-201118:44:40 IST Report Abuse
Dhandapani கபில் சிபல் அவர்களே, தாங்கள் கூறுவதுதான் உண்மை என்றால் பிரதமரிடம் சொல்லி உடனடியாக ராஜாவை மீண்டும் மந்திரியாகிவிடுங்கள். பாவம், எவ்வளவு அப்பழுக்கற்றவர் அவர்!
Rate this:
Cancel
paavapattajanam - chennai,இந்தியா
10-ஜன-201118:14:20 IST Report Abuse
paavapattajanam Central Government can decide to offer MINISTER for HUMOUR to Mr KAPIL SIBAL because these days he just speaks and most of the times it is treated as piece of COMEDY. He can be asked to entertain people of INDIA with various impossible statements. He forgets that INDIA is not just politicians, it comprises crores of crores of INTELLECTUALS who can take better decisions and make better statements than KS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X