சென்னை: 'முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில், படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது' என, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மருத்துவமனை இயக்குனர், சத்ய பாமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதல்வருக்கு தொடர்ந்து, செயற்கை சுவாசம் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனை, தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், மூத்த இதய நோய் மருத்துவர், சுவாச மருத்துவர், நாளமில்லா
சுரப்பி மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உணவு குழுவினர் ஆலோசனைப்படி, தேவை யான ஊட்டச்சத்து, முதல்வருக்கு
வழங்கப்படுகிறது. முதல்வரின் உடல்நிலை யிலும், பேசுவதிலும், படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீடு திரும்புவது எப்போது? :
முதல்வர் ஜெயலலிதா,வீடு திரும்பும் தேதியை, விரைவில் மருத்துவமனை அறிவிக் கும்' என, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்த பின், அவர் கூறுகையில், ''மருத்துவர்களின் சிகிச்சை திருப்தி அளிப்பதாக உள்ளது.
முதல்வர் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர், எப்போது வீடு திரும்புவார் என்பதை, விரைவில் மருத்துவமனை அறிவிக்கும்,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (43)
Reply
Reply
Reply