நின்ற லாரி மீது வேன் மோதி அய்யப்ப பக்தர்கள் 3 பேர் பலி: 11 பேர் காயம்
நின்ற லாரி மீது வேன் மோதி அய்யப்ப பக்தர்கள் 3 பேர் பலி: 11 பேர் காயம்

நின்ற லாரி மீது வேன் மோதி அய்யப்ப பக்தர்கள் 3 பேர் பலி: 11 பேர் காயம்

Added : ஜன 10, 2011 | கருத்துகள் (2) | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நின்ற டிப்பர் லாரி மீது, அய்யப்ப பக்தர்கள் வந்த வேன் மோதியதில், மூன்று பேர் இறந்தனர். கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சபரிமலை கோவிலுக்கு சென்றுவிட்டு, ஸ்வராஜ் மஸ்தா வேனில் ராமேஸ்வரம் வந்தனர். நேற்று காலை 6 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, டயர் பஞ்சராகி முண்டு கற்கள் மீது
நின்ற லாரி மீது வேன் மோதி அய்யப்ப பக்தர்கள் 3 பேர் பலி: 11 பேர் காயம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நின்ற டிப்பர் லாரி மீது, அய்யப்ப பக்தர்கள் வந்த வேன் மோதியதில், மூன்று பேர் இறந்தனர்.


கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சபரிமலை கோவிலுக்கு சென்றுவிட்டு, ஸ்வராஜ் மஸ்தா வேனில் ராமேஸ்வரம் வந்தனர். நேற்று காலை 6 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, டயர் பஞ்சராகி முண்டு கற்கள் மீது நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறம் மோதியது. வேனில், முன்னால் அமர்ந்திருந்த பாலக்காடு வட்டான்சேரியை சேர்ந்த சண்முகம் (58), ரவி (35), அனில்குமார் (9) ஆகியோர் பலத்த காயமடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். 11 பேர் காயமுற்றனர். வேன் டிரைவரான பாலக்காடு சுனிலை, கேணிக்கரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


சிகிச்சையில் தொய்வு: விபத்தில் காயமடைந்த அய்யப்ப பக்தர்களுக்கு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் போதிய டாக்டர்கள் இல்லாததால், உடனடி சிகிச்சை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது. கம்பவுண்டர் ஒருவரே சிகிச்சை அளித்துள்ளார். ஒரே நேரத்தில் 11க்கும் மேற்பட்டோர் காயத்துடன் நீண்ட நேரம் காத்திருக்க, சிலர் மயக்கமடைந்தனர். குளுக்கோஸ் ஏற்றப்பட்டவரை கூட, வார்டிற்கு கொண்டு செல்ல முடியாமல், புறநோயாளிகள் அமரும் இடத்தில் வைத்து, குளுக்கோஸ் பாட்டலை ஜன்னல் கம்பிகளில் கட்டி, தொங்கவிட்டு ஏற்றினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (2)

jaiganesh - Madurai,இந்தியா
11-ஜன-201116:07:32 IST Report Abuse
jaiganesh லாரியில் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் கனரக வாகனம்கள் ரோட்டின் ஓரத்தில் நிற்கும் பொது கண்டிப்பாக 10 மீட்டர் மற்றும் 3 மீட்டர் தொலைவில் x வடிவத்தில் ஒளிரும் தடுப்புகள் சாலையில் வைக்க பட வேண்டும் ... இது பல உயிர்களை காப்பாற்றும் ...... அரசு முறையே இதனை கட்டாயபடுத்தி கனரக வாகன ஓட்டிகளை பின்பற்ற வைகா வேண்டும் - ஜெய் கணேஷ் மதுரை
Rate this:
Cancel
Mohamed Farook - Jeddah,சவுதி அரேபியா
11-ஜன-201101:43:03 IST Report Abuse
Mohamed Farook இறைவனடி சேர்ந்த அனைத்து பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X