சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

365 - ம், 166- ம், இந்திய அரசியலமைப்புச் சட்டம்

Added : அக் 22, 2016
Advertisement
 365 - ம், 166- ம், இந்திய அரசியலமைப்புச் சட்டம்

ஒரு கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், தம்மால் ஆட்சி அமைக்க முடியும் என தேர்தல் மூலம் நிருபித்து, அதை ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் தெரிவிப்பார். அதன் அடிப்படையில், அந்த நபர் பிரதம மந்திரியாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.இந்நிலையில், இந்திய நிலப்பரப்புக்குள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆயுதக் கிளர்ச்சி, போர் சூழல் போன்றவை ஏற்பட்டிருக்குமானால், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளையும் சூழல் எனில் அல்லது ஏற்படக்கூடும் எனத் தோன்றினால், அந்த மந்திரி சபையின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதியானவர் சில கடப்படுகளுக்குட்பட்டு அவசரகால நடவடிக்கையாக எமர்ஜன்சியினை அறிவிப்பார்.


3 வகையான எமர்ஜன்சி

இந்திய அரசியலமைப்புச் சட்டம், அந்த எமர்ஜன்சி என்பதை மூன்று வகையாகச் சொல்கிறது. தேசிய, மாநில, பொருளாதார எமர்ஜன்சிகளே அவை.தேசிய அளவிலோ, அல்லது தேசத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமோ அந்நிலை நீடித்தால் அங்கு, நேரடி ஜனாதிபதி ஆட்சியோ ஆளுனர் ஆட்சியோ கொண்டு வரப்படும். இது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 352 விளக்குகிறது.தேசிய எமர்ஜன்சி அறிவிக்கப்பட்டதில் இருந்து, ஒரு மாதத்திற்குள் அது மத்தியின் இரு அவைகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.ஒரு மாநிலத்தின் மொத்தப் பகுதியிலோ, மாநிலத்தின் ஒரு பகுதியில் மட்டுமோ அந்நிலை நீடித்தால், அதே போல, ஜனாதிபதி ஆட்சியோ, கவர்னர் ஆட்சியோ கொண்டுவரப்படும். மாநில எமர்ஜன்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில ஆட்சியை நடத்த முடியாத சூழல் நிலவுவதாக ஜனாதிபதி நினைத்தாலோ, அல்லது அந்த மாநிலத்தில் இருந்து மாநில அரசு புகார் செய்வதின் பேரிலோ ஜனாதிபதியானவர் எமர்ஜன்ஸியை அறிவிப்பார்.


பார்லிமென்ட் ஒப்புதல் தேவை

இந்த எமர்ஜன்சி அறிவிப்பும், பாராளுமன்ற அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.இது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 356 விளக்குகிறது.பொருளாதார எமர்ஜன்சி என்பது பொருளாதார நிச்சயமின்மை எனும் சூழல் ஏற்பட்டால், அப்படி பாதிக்கப்பட்ட பகுதியில் பொருளாதார எமர்ஜன்சி அறிவிக்கப்படுவதாகும். ஜனாதிபதி அந்த அறிவிப்பை வெளியிட்ட சமயத்தில் மத்திய அமைச்சகமானது, இத்தகைய எமர்ஜன்சி அறிவிக்கப்பட்ட பகுதியில் செயல்பட வேண்டிய முறை குறித்து அறிவுறுத்தும். அந்த அறிவுறுத்தல்கள்,மாநில, ஒன்றிய பிரதேசங்களில் அரசு ஊழியர்களின் ஊதியக் குறைப்பு முதல், எவ்வையாகவும் இருக்கலாம். இது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்ட்த்தின் ஆர்டிகில் 360 விளக்குகிறது. இந்த பொருளாதார எமர்ஜன்சி இரு மாதங்கள் வரை நிலுவையில் இருக்கும். இதுவும் இரு அவைகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.அப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டதில் இருந்து ஜனாதிபதி அந்த எமர்ஜன்சி காலத்தை நிறுத்தும் வரை நிலுவையில் இருக்கும். இந்தியாவில் இதுவரை பொருளாதார எமர்ஜன்சி நிலை ஏற்பட்டதில்லை. ஆக இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி எதிர்பாராத அச்சுறுத்தும் சூழல் ஏற்படும்போது அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில் ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் சூழலே எமர்ஜன்சி.


சுப்பிரமணியன்சுவாமி கடிதம்

சமீபத்தில், தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது நாம் அறிந்த்தே.அதை ஒட்டி மாநில அரசு செயல்பட முடியாமல் திண்டாடுவதாகவும், இந்த சூழலைப் பயன்படுத்தி, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, கன்யாகுமரி பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதமும், இன்னபிற தீவிரவாத செயல்களும் தமிழகத்தில் தலை தூக்குவதாகவும், இதற்கு திராவிடர் கழக ஆதரவும் இருப்பதாகவும், இன்னும் இருக்கும் எல் டி டி ஈ நபர்களும், நக்ஸலைட்டுகளும், தமிழக மாநிலத்திற்கு சட்ட ஒழுங்குப் பிரச்சனையை தோற்றுவிக்கலாம் எனவும் இந்த காரணங்களால், அவசரகால நிலை பிரகடனமாக AFSPA ன் கீழ் தமிழகத்தைக் கொண்டுவர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட வேண்டும்,” என பி ஜே பி தலைவர் சுப்ரமணியம் சுவாமி, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் (Union Home Minister) - க்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். அத்தோடு தமிழக முதலமைச்சர் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனையும், முதலமைச்சர் இன்னும் சிறிது காலம் மருத்துவ சிகிச்சையின் கீழ் இருக்க வேண்டும் எனச் சொன்னதையும் சேர்த்துக் குறிப்பிட்ட சுப்ரமணிய சுவாமி, தமிழகத்தில் மாநில எமர்ஜன்சி (ஆர்டிகில் 356) அறிவிக்கப்படுதல் மிக அவசரத் தேவை எனவும் குறிப்பிட்டார். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 356-க்கான விளக்கத்தையும், தமிழக அரசியல் சூழலையும் கணக்கில் கொண்டு பார்த்தால், தமிழகத்தில் அதன் தேவை இருக்கவில்லை என்பதை நாம் அறிய முடிகிறது. பெரிய அச்சுறுத்தல்களோ, நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் ஆயுதப் போராட்டங்களோ, போர் சூழலோ எதுவும் தமிழகத்தில் இப்போதைக்கு இல்லை. எனவே மாநில எமர்ஜன்சியின் தேவை இப்போதைக்கு இல்லை.


கவர்னரின் அதிகாரங்கள்

ஆனால், சமீபத்திய செய்தியின்படி, தமிழக அரசு இயந்திரத்தை தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் இயக்குவதாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த துறைகளை ஆளுநர், வேறு அமைச்சர்களிடம் அளித்ததாகவும் அறிகிறோம்.இதன் பொருள் தமிழகத்தில், மாநில எமர்ஜன்சி வந்த்தாகப் பொருள் அல்ல.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி ஆறு, ஆளுநர் (ஆர்டிகில் 153-162), மந்திரி சபை (ஆர்டிகில் 163-164), Conduct of Government Business (அர்டிகில் 166-167) பற்றி விளக்குகிறது. ஒரு மாநிலத்தில் தேவையான சூழல்களில், ஆளுநருக்கு என சில அதிகாரங்களை இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஆர்டிகில் 166 அளிக்கிறது. அதன்படியே இப்போது தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், ஆர்டிகில் 160, தேவையான சூழல்களில், இந்திய ஜனாதிபதியானவர், ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு சில அதிகாரங்களை அளிக்கலாம் எனச் சொல்கிறது என்றாலும், இன்றைய சூழலில், ஆர்டிகில் 166 - ந் படியே தமிழகத்தில் ஆளுநர் மாநில அரச நடவடிக்கைகளை கவனிக்கிறார்.


166வது ஷரத்து கூறுவதென்ன?

ஆர்டிகில் 166 (This Constitution of India 1949), Conduct of business of the Government of a State பற்றி சொல்கிறது.166. Conduct of business of the Government of a State(1) All executive action of the Government of a State shall be expressed to be taken in the name of the Governor(2) Orders and other instruments made and executed in the name of the Governor shall be authenticated in such manner as may be specified in rules to be made by the Governor, and the validity of an order on instruction which is so authenticated shall not be called in question on the ground that it is not an order or instrument made or executed by the Governor(3) The Governor shall make rules for the more convenient transaction of the business of the Government of the State, and for the allocation among Ministers of the said business in so far as it is not business with respect to which the Governor is by or under this Constitution required to act in his discretion.ஆளுநருக்கு ஒரு ஜனாதிபதிக்கு உள்ள அனைத்து அதிகாரமும் உண்டு எனினும், ஆளுநருக்கு, டிப்லொமேடிக், மிலிடரி, எமர்ஜன்சி அதிகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு இருப்பது போல கிடையாது. தற்போது ஆளுநர் அவருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்த அதிகாரங்களில் ஒன்றான எக்ஸிக்யூடிவ் அதிகாரத்தின்படி தமிழக அரசு செயல்பாடுகளாக துறை மாற்றங்களைச் செய்துவருகிறார். அரச செயல்பாடுகளை கவனிக்கிறார். இதன் அடிப்படையிலேயே முதலமைச்சரின் அதிகாரத்தின் கீழ் உள்ள சில துறைகளை அமைச்சர்களிடம் அளித்துள்ளார். இந்த அதிகாரத்தின் படி ஆளுநர் நேரடியாகவே செயல்படலாம். அந்த செயல்பாடுகளை தாமே நேரடியாகவோ, அவரது அதிகாரத்தின் கீழ் உள்ள அதிகாரிகளின் மூலமோ செயல்படுத்தலாம். செய்யப்படும் அரச நடவடிக்கைகள் அனைத்தும் ஆளுநரின் பெயரிலேயே செய்யப்படும் என ஆர்டிகில் 162 சொல்கிறது.ஆளுநரின் இந்த அதிகாரம் முழுமுற்றான சுய அதிகாரம் அல்ல. கடப்பாடுகளுக்குட்பட்டதே.
- ஹன்ஸா ஹன்ஸா (வழக்கறிஞர்)9994949195legally.hansa68@gmail.com

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X