மாணவி கர்ப்பம்: பாதிரியார் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கர்ப்பம்: பாதிரியார் கைது

Added : அக் 22, 2016 | கருத்துகள் (10)
Advertisement
மாணவி கர்ப்பம்: பாதிரியார் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கர்ப்பமாக்கிய பாதிரியாரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் முள்ளிப்பாடி ஆயர் இல்லத்தின் நிர்வாக செயலாளர் அந்தோணிகிஷோர், 32. ஆறு மாதங்களுக்கு முன்புதான் இங்கு பணிமாறுதலில் வந்தார். அதற்கு முன் ஓராண்டாக என்.பஞ்சம்பட்டி, திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் உதவி பாதிரியா ராக பணிபுரிந்தார்.
சில்மிஷ பாதிரியார் : கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழகியுள்ளார். அச்சிறுமி திண்டுக்கல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பாதிரியார், அவரை காதலிப்பதாக கூறியதால், மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து சில்மிஷ பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தார்.
சர்ச்சில் ரகளை : இதற்கிடையே என்.பஞ்சம்பட்டியில் உள்ள சர்ச்சில் பாதிரியார் சேசுராஜ், நேற்று காலை வழக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அங்கு திடீரென ஒருவர் மரக்கட்டை, அரிவாளுடன் ஆவேசமாக புகுந்து ரகளையில் ஈடுபட்டார். மின்விசிறி, பலி பீடம், நாற்காலி போன்றவற்றை சேதப்படுத்திய பின் அவர் சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன், இங்கு உதவி பாதிரியாராக இருந்த கிஷோர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார்.தற்போது மாணவி கருவுற்றதாகக் கூறப்படுவதால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர் ஒருவர் சர்ச்சில் புகுந்து ரகளை செய்துள்ளார்,” என்றனர்.
வாபஸ் வாங்க வலியுறுத்தல் : மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க ஸ்டேஷன் வந்தனர். கூடவே வந்த சிலர், மாணவியின் பெற்றோரிடம் புகாரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதிரியார் கைது செய்யப்பட உள்ளார் என்பதை அறிந்ததும் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAM KUMAR - India,இந்தியா
23-அக்-201620:04:06 IST Report Abuse
RAM KUMAR வழக்கமாக நாம் இது போன்ற தவறுகள் நடக்கும் பொழுது ஆவேசமாக பேசுவதும் பிறகு மறக்கப்படுவதும் தான் நடக்கிறது. நாம் ஒரு விஷயத்தை புரிந்து kola வேண்டும். காமம் என்பது அணைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. எனவே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை பிரச்சனை நடக்கும் பொழுதும் நான் இதை வலியுறுத்தி வருகிறேன். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சிலர் தங்கள் பிள்ளைகளை கிழவன் கிழவியாக்கி விடுகின்றனர். அவர்கள் தங்கள் காம தாகத்தை அடக்க முடியாமல் தவறான வழிகளுக்கு செல்கின்றனர். இங்கு இந்த பாதிரியார் மத அடிப்படையில் மாறி இருக்கிறார். இயேசு ஒன்றும் சந்நியாசி இல்லையே. இவர்கள் மட்டும் ஏன் இப்படி என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-அக்-201618:38:19 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ “சில மாதங்களுக்கு முன், இங்கு உதவி பாதிரியாராக இருந்த கிஷோர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார் //// பாதிரி பல இடங்களுக்கும் மாற்றப்பட்டு, போகுமிடமெங்கும் இது போன்ற சேவை செய்து கிறித்தவர்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும் என்ற அபிலாஷை வாடிகனுக்கு இருக்குமோ ????
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-அக்-201618:20:46 IST Report Abuse
Nallavan Nallavan வயது வந்த தங்கள் பெண் யாரிடமெல்லாம் பழகுகிறாள் என்று பெற்றோர் கண்காணிக்க வேண்டிய அவசியம் உண்டா, இல்லையா ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X