தித்திக்கும் சுவாதி

Updated : அக் 27, 2016 | Added : அக் 23, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
அகன்ற இமையிரண்டும் அகல் விளக்கின் பாதி... ஜொலிக்கும் தேகமென்றும் குத்துவிளக்கின் ஜாதி, சின்ன சிரிப்பில் பூக்கும் சிறிய மத்தாப்பூ, அன்ன நடையில் அசைந்தாடும் பன்னீர்பூ...அழகு புயலாய் நின்றாடும் ஜோதி, தித்திக்கும் 'சுப்பிரமணியபுரம்' சுவாதி 'தினமலர்' வாசகர்களுக்காக அளித்த அழகு பேட்டி...* நடிப்புக்கு பிரேக்... ஏன்?நிறைய படம் நடிக்கணும்னு பிரஷர் கொடுத்து சான்ஸ் தேடலை.
தித்திக்கும் சுவாதி

அகன்ற இமையிரண்டும் அகல் விளக்கின் பாதி... ஜொலிக்கும் தேகமென்றும் குத்துவிளக்கின் ஜாதி, சின்ன சிரிப்பில் பூக்கும் சிறிய மத்தாப்பூ, அன்ன நடையில் அசைந்தாடும் பன்னீர்பூ...
அழகு புயலாய் நின்றாடும் ஜோதி, தித்திக்கும் 'சுப்பிரமணியபுரம்' சுவாதி 'தினமலர்' வாசகர்களுக்காக அளித்த அழகு பேட்டி...

* நடிப்புக்கு பிரேக்... ஏன்?
நிறைய படம் நடிக்கணும்னு பிரஷர் கொடுத்து சான்ஸ் தேடலை. பிடிச்ச கேரக்டர் கிடைக்கல, அதனால கொஞ்சம் பிரேக் விட்டாச்சு.

* நீங்க ரொம்ப போல்டா ?
அப்படி எல்லாம் இல்லை, என் வேலையை நான் பார்க்குறேன். மனசுல இருக்குறத வெளிப்படையா பேசுறேன்... அவ்வளவு தான்.

* காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன்...
காமெடி கேரக்டர்களில் நடிக்க பிடிக்கும். ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க காமெடி தான் கரெக்ட் சாய்ஸ்.

* சினிமா கனவு...
ஒரு கேரக்டர்ல நடித்து முடித்த பின் தான் அது கனவு கேரக்டரா, இல்லையான்னு தெரியும். 'மாயாபஜார்' சாவித்திரி, 'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவி எல்லாம் அவங்க கனவு கேரக்டர்னு நினைச்சா நடிச்சாங்க... ஒவ்வொரு படமும், கேரக்டரும் ஒரு கனவு தான்.

* நடிப்பு தவிர...
தெலுங்கில் வெளியான 'ஜல்சா' படத்தில் இலியானாவுக்கு டப்பிங் பேசியிருக்கேன், '100 % லவ்', 'சுவாமி ரா ரா' படங்களில் பாட்டும் பாடியிருக்கேன்.

* கிளாமர் டிரஸ்சிங்...
டிரஸ்சிங் விஷயத்துல எப்பவுமே நான் கவனமா இருப்பேன். குட்டி, குட்டி டிரஸ் போடுறதெல்லாம் பிடிக்காது, பெரிய டி சர்ட், குர்தா தான் என் டிரஸ்சிங் ஸ்டைல்...

* சமீபத்தில் ரசித்த படம்...
தமிழில் மாதவன், ரித்திகா சிங் நடித்த 'இறுதி சுற்று'

* ஒரு படத்தின் வெற்றி...
சில நேரங்களில் பெரிய இயக்குனர் படம் 'பிளாப்' ஆகும், சின்ன இயக்குனர் படம் 'ஹிட்' ஆகும். சினிமாவில் வெற்றி, தோல்விகள் தீர்மானிக்க முடியாது.

* அடுத்த படம்...
கிருஷ்ணா ஹீரோவா நடிக்கும் இயக்குனர் குழந்தை வேலப்பனின் 'யாக்கை', ரிலீசுக்கு ரெடி...

* என்ன கேரக்டர் ?
இது வரை நான் நடிச்ச 'யட்சன்', 'வடகறி' மாதிரி ஜாலி கேரக்டர் இல்லை. 'கவிதா'ங்குற பொறுப்பான கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.

* மதுரை...
'சுப்பிரமணியபுரம்' படம் இங்க தானே எடுத்தாங்க... நானும் மதுரை பொண்ணு தான்.

* தீபாவளி...
என் அப்பா, அவரோட பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து 'குருஷி'ன்னு ஒரு ஆதரவற்ற பசங்களுக்கான டிரஸ்ட் வைச்சிருக்காங்க. இந்த டிரஸ்ட் பசங்களுடன் தான் ஒவ்வொரு தீபாவளியையும் நான் கொண்டாடி வருகிறேன்...
facebook.com/imswathi

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendra Babu R - Chennai,இந்தியா
07-நவ-201602:21:29 IST Report Abuse
Mahendra Babu R Sweet Swathi. The only homely girl I liked among Tamil heroines. I have seen her Telugu movie 'Astha Chamma' many times for her cute and peppy acting and the comedy genre All the best for her future projects.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X