92 வயது தி.மு.க., தலைவர் கருணாநிதி சுகவீனம்! | 92 வயது தி.மு.க., தலைவர் கருணாநிதி சுகவீனம்: கட்சியினர் சந்திக்க வர வேண்டாம் என குடும்பத்தினர் தடை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., தலைவர் கருணாநிதி, சுகவீனம், கட்சியினர் சந்திக்க வர வேண்டாம், குடும்பத்தினர் தடை,கட்சி தலைவர், ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 10 நாட்களாக, காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை காரணமாக, உடம்பில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனை டாக்டர்கள், வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சுகவீனம், கட்சியினர் சந்திக்க வர வேண்டாம், குடும்பத்தினர் தடை,கட்சி தலைவர், ஸ்டாலின் ஆலோசனை

92 ஆகும் அவரை, கட்சியினர் யாரும் சந்திக்க வர வேண்டாம் என, குடும்பத்தினர் அறிவுறுத்தி யுள்ளனர்; அறிவாலயத்தில் பிற கட்சி தலைவர் களுடன், பொருளாளர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த ஓரிரு வாரமாக, கருணாநிதி, கட்சி அலுவலகமான அறிவாலயம் செல்லவில்லை. இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்த நேர் காணல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. மூன்று தொகுதி வேட்பாளர்களும், கருணாநிதி யை சந்திக்க

விருப்பம் தெரிவித்தனர்; அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், காவிரி பிரச்னை தொடர்பாக, அறிவால யத்தில் நடந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம் மற்றும் நேற்று நடந்த, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திலும், கருணாநிதி பங்கேற்கவில்லை. இதற்கு காரணம், அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக் குறைவு தான் என்பது, இப்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:

கருணாநிதிக்கு,சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அது தொடர்பாக, சிகிச்சை பெற்றார். அந்த மருந்தில் ஏற்பட்ட, 'அலர்ஜி' காரணமாக, கை, கால்களில் கொப்பளங்கள் உருவாகியுள்ளன.

கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால் தலைமையில், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவரது உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, கொப்பளங் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

கோபாலபுரம் வீட்டில் உள்ள கருணாநிதியை, அவரது மகள் கனிமொழி கவனித்து வருகிறார்; கட்சி விவகாரங்களை, ஸ்டாலின் கவனித்து வருகிறார்.

யாரும் வராதீர்!

தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:கருணாநிதி, வழக்கமாக உட் கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில், ஒவ்வாமை ஏற்பட்டுள் ளது; அதனால், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள், மேலும் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்கு மாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே, கட்சியினர் கருணாநிதியை காண வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (203)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
28-அக்-201606:06:41 IST Report Abuse

Amirthalingam Sinniahஅங்கேயும் சசிகலா இருக்கிறாரா ?

Rate this:
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
26-அக்-201623:40:40 IST Report Abuse

X. Rosario Rajkumarபார்வையாளர்கள் மூலமாகவும் கிருமிகள் தொற்றக்கூடும். மேலும் ஒய்வு தேவை. நலம்பெற இறைவனை வேண்டுவோம்.

Rate this:
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
27-அக்-201611:43:24 IST Report Abuse

Durai Ramamurthyஇறைவனையே செருப்பால் அடிக்க விரும்பும் கூட்டத்தினர், இதை பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட செயலாக கருதிவிடப்போகிறார்கள்....

Rate this:
Amma_Priyan - Bangalore,இந்தியா
26-அக்-201621:48:46 IST Report Abuse

Amma_Priyanaamai

Rate this:
மேலும் 199 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X