வீடுகளில் காற்றாலை: பிரான்சில் புதிய புரட்சி

Updated : அக் 26, 2016 | Added : அக் 26, 2016 | கருத்துகள் (11)
Advertisement
வீடுகளில் காற்றாலை: பிரான்சில் புதிய புரட்சி

பாரீஸ் : உலகிலேயே முதல் முறையாக, வீடுகளிலேயே சிறிய அளவில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பிரான்சில் துவக்கப்பட்டுள்ளது.


மர வடிவில் காற்றாலை :

வீடுகள் மட்டுமின்றி பொது இடங்கள் உள்ளிட்டவைகளிலும் அதிக அளவில் இந்த காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. மரத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலை இயந்திரத்தில் சுழலும் தன்மை கொண்ட இலைகள் போன்ற அமைப்பு உள்ளது. இதன் சுழற்சியின் மூலம் சுமார் 3.1 கிலோவாட் வரை மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த காற்றாலை மரங்கள் சாலையோரங்கள், பூங்காக்கள் போன்றவற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது.


காற்றாலை மரத்தின் அமைப்பு :

11 மீட்டர் உயரமும், 8 மீட்டர் சுற்றளவும் கொண்ட இந்த காற்றாலை மரம் பல கிளைகளை கொண்டுள்ளது. வெள்ளை நிறத்தில் இரும்பாலான இந்த மரத்தில் 72 இலை போன்ற மின்சாரம் தயாரிக்கும் விசைப்பொறிகள் உள்ளன. இவை சத்தமின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை லேசான காற்று வீசினாலே சுழன்று, மின்சாரத்தை தயாரிக்கும் வகையிலானதாகும். இந்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை, பொதுமக்கள் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு, செப்டம்பரில் நாடு முழுவதும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.


எவ்வளவு பயன்பாடு :

ஒரு மர காற்றாலையில் இருந்து தயாரிக்கப்பட்டும் மின்சாரத்தை கொண்டு 50 வாட்ஸ் திறன் கொண்ட 15 தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த முடியும். 20 கிலோ வாட்ஸ் மின்சாரம் தேவைப்படும் 1000 சதுரடிக்கும் குறைவாக உள்ள அலுவலகத்திற்கும், 83 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கும், 71 பூங்கா விளக்குகளுக்கும், ஒரு எலக்ட்ரானிக் கார் ஒரு ஆண்டிற்கு 16,363 கி.மீ., பயணிப்பதற்கு பயன்படுத்த முடியும்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - dharmapuri,இந்தியா
26-அக்-201620:30:23 IST Report Abuse
raja கண்டுபிடிப்புகளுக்கு மேற்கத்திய நாடுகளை சாராமல் நாமே உருவாக்க வேண்டும், அவர்கள் கண்டுபிடிப்புகள் எல்லாம் அவர்கள் நாட்டுக்கு, வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் தான் இருக்கும், நம் தேவைக்கு நாம் தான் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
26-அக்-201620:02:45 IST Report Abuse
Shanu இந்தியாவிற்கு மிக தேவையானது.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
26-அக்-201619:17:09 IST Report Abuse
கதிரழகன், SSLC சரியான புருடா செய்தி இது. 15 விளக்கு அம்பது வாட்டு = 750 வாட்டு. 20 கிலோ வாட்டு = 20, 000 வாட்டு. ஏணி வெச்சாலும் எட்டாது. சும்மா கத விடுராக. இத்தினி காற்றாலை பக்கத்துல பக்கத்துல வெச்சா ஒண்ணை ஒண்ணு பாதிக்கும். முருகப்பா பாலி டெக்னீக் செஞ்ச காற்றாலை ரெண்டு போட்டாக நம்ம ஊரு பக்கம் தென்னந்தோப்புக்கு தண்ணி இறைக்க. காத்து ஒண்ணு பின்னாடி ஒண்ணு வாரா மாதிரி அடிச்சா பின்னாடி இருக்கிற ஆலை தண்ணி சரியா இறைக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X