பதிவு செய்த நாள் :
இரட்டிப்பு!
எம்.பி.,க்கள் சம்பளம், சலுகைகள், ஓய்வூதியம்...
குளிர்கால கூட்ட தொடரில் மசோதா தாக்கல்?

புதுடில்லி:பார்லிமென்ட் உறுப்பினர்களின், சம்பளத்தை இரட்டிப்பாக்க, மத்திய அரசு திட்ட
மிட்டுள்ளது. இதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது; வரும், 16ல் துவங்க வுள்ள,பார்லி., குளிர்கால கூட்ட தொடரில்,
இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி.,க்கள் சம்பளம், சலுகைகள், ஓய்வூதியம்... இரட்டிப்பு!: குளிர்கால கூட்ட தொடரில் மசோதா தாக்கல்?

தற்போது லோக்சபாவில், 545 எம்.பி.,க்கள் உள்ளனர்; ஆங்கிலோ-இந்தியன் பிரிவைசேர்ந்த இரண்டு பேரை,ஜனாதிபதி, எம்.பி.,யாக நியமிக்கலாம்.

ராஜ்யசபாவில், 245 உறுப்பினர் கள் உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த, 12 பேரை, ராஜ்ய சபா எம்.பி.,யாக மத்திய அரசு நியமிக்கலாம். மொத்தம், 804 பேர், எம்.பி.,க்களாக பார்லிமென்டில் உள்ளனர்.

எம்.பி.,க்களுக்கான சம்பளம், 2010ல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது; அடிப்படை சம்பளம், 16 ஆயிரம் ரூபாயில் இருந்து,50 ஆயிரம் ரூபா யாக அப்போது உயர்த்தப்பட்டது.இதற்கிடையே 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு அமைந்த பின், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கூட்டுக்குழு


எதிர்க்கட்சிகளின் அமளிகளால் பார்லிமென்ட் கூட்டத் தொடர்கள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையில், எம்.பி.,க்களின் சம்பளத்தை

உயர்த்துவதற்கு, பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர்.

பா.ஜ., - எம்.பி., யோகி ஆதித்யநாத் தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக் குழு,சம்பளத்தை இரட்டிப் பாக்குவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்தது.

ஆனால், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் தரவில்லை; பார்லிமென்ட் முடக்கப்படும்நிலையில், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த, மோடி முன் வரவில்லை.

திட்டம்


இந்நிலையில், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த, நிதி அமைச்சகமும் தன் பரிந்துரையை அளித்துள் ளது; தற்போது இதை பிரதமர் அலுவலகம் ஏற்றுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எம்.பி.,க்கள் சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்தும் வகையில், வரும், 16ல் துவங்கும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டதொடரில்,இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சம்பளம் எவ்வளவு?


மத்திய அரசின் திட்டப்படி, எம்.பி.,க்களின், மாதாந்திர அடிப்படை சம்பளம் உள்ளிட்டவை
இரட்டிப்பாக்கப்பட உள்ளது. அதன்விபரம்:விபரம் தற்போது உயர்வுக்கு பின்
அடிப்படை சம்பளம் 50,000 1,00,000
தொகுதி செலவு 45,000 90,000
அலுவலக செலவு 45,000 90,000
மொத்த சம்பளம் 1,40,000 2,80,000
ஓய்வூதியம் 20,000 35,000
(ரூபாயில்)

இதைத் தவிர, கார்கள், வீடுகள் வாங்குவதற்கு வட்டியில்லா கடன்; பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தினப்படியை, 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.

Advertisement

இவற்றில், ஒரு சிலவற்றுக்கு மட்டுமே பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதிக்கும்...


எம்.பி.,க்கள் சம்பளத்துடன், ஜனாதிபதியின் மாத சம்பளமும் உயர்த்தப்பட உள்ளது. தற் போது, 1.5 லட்சம் ரூபாயாக உள்ள, ஜனாதிபதி யின் சம்பளம், ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. மாநில கவர்னர்களின் சம்பளத்தை, 1.10 லட்சம் ரூபாயில் இருந்து,2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.

ஒதுக்கீடு


கடந்த பட்ஜெட்டில், லோக்சபா எம்.பி.,க்களின் சம்பளத்துக்காக,295 கோடி ரூபாயும்; ராஜ்யசபா எம்.பி.,க்களின் சம்பளத்துக்காக, 122 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்தது.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan mageswary - chennai,இந்தியா
08-நவ-201615:15:55 IST Report Abuse

raghavan mageswaryஅடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டிற்கு ஊதியமே இல்லாமல் சேவை செய்யும் அரசியல்வாதிகள் தான் தேவை. சம்பளமும் கிம்பளமும் வாங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு எதற்கு ? நாட்டை காக்க எல்லையில் நின்று எல்லையில்லா பணியாற்றும் ராணுவத்தினருக்கு கொடுக்கலாமே

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
03-நவ-201622:28:54 IST Report Abuse

ezhumalaiyaanபோராட்டம் இல்லை,தர்ணா இல்லை,ஊதிய உயர்வு கேட்டு கலாட்டா,கைது ஒன்றும் இல்லை.எல்லாம் குலாகு முடிந்து விடுகிறதே எப்படி? வங்கி ஊழியர்களில் ஒருபகுதியினருக்கு 2001 லிருந்து பஞ்சப்படி பாக்கி. இதுவரை எத்தனை வேலை நிறுத்தங்கள்,தர்ணாக்கள்.அந்த ஊழியர்களுக்கு 60 வயது தாண்டி 70,ல் இருக்கிறார்கள். நீதி மன்றங்கள் தீர்ப்பளித்தாலும் இப்ப ஒப்புக்கொள்ளுவதில்லை.(சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடக மதிப்பதை போல)

Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
03-நவ-201620:52:37 IST Report Abuse

Siva Kumarஇந்த அட்டூழியத்தை எதிர்த்து யாராவது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X