அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க.,வுக்கு 'மாம்பழம்' கிடைப்பதில் சிக்கல்

Added : நவ 03, 2016 | கருத்துகள் (23)
Share
Advertisement
மூன்று தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர்களுக்கு, 'மாம்பழம்' சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., - பா.ம.க., போட்டியிடுகின்றன. இவற்றில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., ஆகியவை அங்கீகாரம் பெற்ற கட்சிகள். எனவே,
பா.ம.க.,வுக்கு 'மாம்பழம்' கிடைப்பதில் சிக்கல்

மூன்று தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர்களுக்கு, 'மாம்பழம்' சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., - பா.ம.க., போட்டியிடுகின்றன. இவற்றில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., ஆகியவை அங்கீகாரம் பெற்ற கட்சிகள். எனவே, அக்கட்சி வேட்பாளர்களுக்கு, அதிகாரபூர்வ சின்னம் ஒதுக்கப்பட்டு விடும். தே.மு.தி.க., அங்கீகாரத்தை இழந்தாலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை, அக்கட்சிக்குரிய சின்னம் ஒதுக்கப்படும். பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், அங்கீகாரம் இல்லாத, பதிவு பெற்ற கட்சிகளாக உள்ளன. இக்கட்சிகள், தங்கள் வேட்பாளருக்கு, கட்சி சின்னத்தை ஒதுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற வேண்டும்.இதை தாமதமாக அறிந்த, பா.ம.க., தலைமை, நேற்று தான், மூன்று தொகுதிகளில் போட்டியிடும், தங்கள் வேட்பாளர்களுக்கு, மாம்பழம் சின்னம் ஒதுக்கக் கோரி, தேர்தல் கமிஷனிடம் வந்துள்ளது. மூன்று தொகுதிகளிலும், நாளை மாலை, சின்னம் ஒதுக்கப்பட உள்ளது. அதற்குள், தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தால், அவர்களுக்கு மாம்பழம் சின்னம் கிடைக்கும்; இல்லையெனில், சுயேச்சையாக போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babugj - NY,யூ.எஸ்.ஏ
04-நவ-201622:21:42 IST Report Abuse
babugj மாம்பழம் இல்லாட்டி maaza பாட்டிலை சின்னமா கேளுங்க, free யாவே உங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்.
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
04-நவ-201617:17:40 IST Report Abuse
தமிழர்நீதி மாம்பழம் போனால் போகட்டும். மாமரத்தை வெட்டி சாலையில் சாய்ப்பததாக அல்லது மரம் வெட்டுவது போலொரு சின்னம் இருந்தா கொடுங்க. இந்த சின்னம்கள் இல்லாவிட்டால் கெளரவ கொலை கூட கொடுக்கலாம். இவ்ரு செய்த தேச தியகத்திற்கு அது அடையாளமாக இருக்கும்.
Rate this:
Cancel
GOPALSABAPATHY - chennai,இந்தியா
04-நவ-201615:42:41 IST Report Abuse
GOPALSABAPATHY மாம்பழம் இல்ல மா கொட்ட கூட கெடைக்காது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X