சிங்கார சென்னை ஹீரோயின் நான்...நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்| Dinamalar

சிங்கார சென்னை ஹீரோயின் நான்...நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Added : நவ 04, 2016 | கருத்துகள் (2)
Share
கண்களால் கைது செய்யும் காந்த கண்ணழகி...சிரிப்பால் இளைஞர்களின் இதயத்தை சுண்டியிழுக்கும் பெண்ணழகி... தாவணி போட்ட பெண்ணழகி... மாடர்ன் டிரஸில் மயக்கும் விண்ணழகி... உண்மையை உடைத்து தமிழ் பேசும் நிஜ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் , தமிழ், மலையாளம் என பரபரப்பாக நடித்து கொண்டிருக்கும் வேளையிலும் 'தினமலர்' வாசகர்களுக்காக உதிர்த்த முத்துக்கள்... * பிறந்தது, வளர்ந்தது, படித்தது ...எல்லாமே
சிங்கார சென்னை ஹீரோயின் நான்...நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

கண்களால் கைது செய்யும் காந்த கண்ணழகி...சிரிப்பால் இளைஞர்களின் இதயத்தை சுண்டியிழுக்கும் பெண்ணழகி... தாவணி போட்ட பெண்ணழகி... மாடர்ன் டிரஸில் மயக்கும் விண்ணழகி... உண்மையை உடைத்து தமிழ் பேசும் நிஜ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் , தமிழ், மலையாளம் என பரபரப்பாக நடித்து கொண்டிருக்கும் வேளையிலும் 'தினமலர்' வாசகர்களுக்காக உதிர்த்த முத்துக்கள்... * பிறந்தது, வளர்ந்தது, படித்தது ...எல்லாமே வந்தோரை வாழ வைக்கும் சிங்கார சென்னை தான். நான் சினிமாவில் ஹீரோயினா இருப்பதற்கும் சென்னை தான் காரணம்.* சினிமா வாய்ப்பு... 'டிவி' சேனலில் 'மானாட மயிலாட' டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். அதன்மூலமா சினிமா வாய்ப்பு கிடைத் தது. 'அவர்களும் இவர்களும்' தான் என்னுடைய முதல் படம். அதன்பின் சின்ன சின்ன படங்கள் செய்தேன். கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் படமான 'அட்டக்கத்தி' யில் அமுதா கேரக்டர் பெயர் சொல்லும்படி அமைந்தது.* பிடித்த பாட்டு ... கூடை மேல கூட வச்சு ...என்ற பாடல் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் என்னை கொண்டு சென்றது. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள் எனக்கு இருக்க காரணமே இந்த பாட்டு தான்.* 'காக்கா முட்டை' அனுபவம்இரண்டு பையன்களுக்கு தாயாக நடிக்க முதலில் ரொம்ப யோசித்தேன். ஆனாலும் இயக்குனர் மணிகண்டன் மீது ஒரு நம்பிக்கை இருந்தது. எல்லாரும் நடிக்க வேண்டாம் என சொன்னாங்க. ஆனால் என் கணிப்பு சரியாகிடுச்சு.* கண்களாலே கைது பண்றீங்களாமே ...அப்படியா...( சிரிக்கிறார்) பொதுவா நடைமுறை வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் வார்த்தைகள் மூலமாக பேசுவது இல்லை . கண்களும் அதிகமா பேசிட்டுத் தான் இருக்கு. இதை சினிமாவில் காட்சிகளாக பார்க்கும் போது அழகாக தெரியும். ஆனாலும் என் கண்கள் ரொம்ப 'ஸ்பெஷலா 'இருக்குன்னு எல்லாரும் சொல்வாங்க.*பிடித்த இயக்குனர் கதை கூட கேட்காம என்ன ரோல்னாலும், இயக்குனர் மணிரத்னம் சார் படத்தில் நடிப்பேன்.*மனம் கவர்ந்த ஹீரோ எப்பவுமே ஷாருக்கான் தான். அவர் நடிச்ச எல்லா படங்களும் பார்த்துட்டேன். சமீபத்தில் வெளிவந்த எம்.எஸ்.தோனி என்ற படத்தில் நடித்த சுஷாந்த் சிங் இப்போ ரொம்ப பிடிச்சிருக்கு. நடிப்பும், பார்வையும் அவ்வளவு அழகா இருக்கு.* தமிழ்நாட்டில் யாரையும் பிடிக்காதா அய்யய்யோ...(பதட்டமாக) அப்படி எல்லாம் இல்லை . சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ரொம்ப பிடிக்கும். அவர் கூட நடிக்க ஆவலா காத்திருக்கிறேன். 'ஐ யாம் வெயிட்டிங்'... (சிரிக்கிறார்).* பழைய படத்தில் எதில் ரீமேக் செய்து நடிக்க ஆசை 'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” என்ற பாடல் இடம் பெற்ற 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தில் சுஹாசினி மேடம் நடித்த வேடத்தில் நடிக்க ஆசை. அந்த மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தற்போது குறைவாக வருது. தமிழ் சினிமாவில் ஹீரோக்களை 'லவ்' பண்ற வேலை தான் ஹீரோயின்களுக்கு அதிகமா இருக்கு.* விஜய் சேதுபதி பற்றி...பத்மினியும் பண்ணையாரும் , தர்மதுரை படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். யதார்த்தமான நடிகர், நல்ல மனிதர்.* உங்களை பற்றி கிசுகிசு ...கிசுகிசு பற்றி யோசிக்கிறதே இல்லை. அது தொடர்பாக யாரிடமும் எதுவும் கேட்பது இல்லை. 'கிசுகிசு' வந்தாலும் பிரச்னை இல்லை. பிரபலமாக இருந்தால் கிசுகிசு வரத் தான் செய்யும். படிக்க நாலு பேர் உள்ளதால் 'கிசுகிசு' எழுதுறாங்க போல். எழுதிட்டு போகட்டுமே... 'நோ பிராப்ளம்'. *சுவாதி கொலைக்கு சினிமாவும் ஒரு காரணமா ?இருக்கலாம். சினிமாவில் நல்ல விஷயமும் இருக்கு . கெட்ட விஷயமும் இருக்கு. சினிமா பாதிப்பு கண்டிப்பா இருக்கும்.*தற்போது நடிக்கும் படங்கள் தீபாவளிக்கு நான் நடித்த 'கடலை' படம் ரிலீஸ் ஆகியிருக்கு. தியேட்டர்ல போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. மலையாளத்தில் துல்கர் சல்மான் , நிவின்பாலி உடன் இரண்டு படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் அதர்வா உடன் 'ஜெமினி கணேசனும் , சுருளிராஜனும்' என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X