திருப்பூர்:பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் பணியிடங்கள், அதிகளவு காலியாக இருப்பதால், பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பது கேள்விக்குறியாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 16 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில், அவிநாசி, குன்னத்தூர், மடத்துக்குளம், குளத்துப்பாளையம், மூலனூர், கன்னிவாடி ஆகியன, தேர்வு நிலை பேரூராட்சிகள். மற்றவை, முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை பேரூராட்சிகள். பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து, பணிகளை கண்காணிக்க ஏதுவாக, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது.மாவட்டம் உருவான நாளில் இருந்தே, மாவட்டத்துக்கான பேரூ ராட்சி உதவி இயக்குனர் யாரும் நியமிக்கப்படவில்லை. அலுவலகம் இயங்கி வந்தாலும், ஈரோடு மாவட்ட உதவி இயக்குனரே, கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார். ஈரோடு மாவட்டத்தில், 42 பேரூராட்சிகள் இருப்பதால், பணிச்சுமை காரணமாக, உதவி இயக்குனருக்கான பொறுப்புகளை, இங்குள்ள பேரூராட்சி செயல் இயக்குனர்களில் ஒருவரே, கூடுதலாக கவனித்து வருகிறார்.
பேரூராட்சிகளில், மக்கள் பிரதிநிதிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, பணிகளை செய்ய முடியாத அளவுக்கு, செயல் அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மொத்தம் உள்ள, 16 பேரூராட்சிகளில், ஆறு பேரூராட்சி கள், மற்ற செயல் அலுவலர்களிடம் கூடுதல் சுமையாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள், பதவியில் இருந்ததால், ஒவ்வொரு பேரூராட்சியிலும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, தனி அலுவலர்களின் கீழ் உள்ளது.தமிழக அரசு, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், தனி அலுவலராக செயல்படுவார் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், திருப்பூர் மாவட் டத்தில் உள்ள, ஆறு பேரூராட்சிகளுக்கு மட்டும், ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர், தனி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். மற்ற, 10 பேரூராட்சிகளுக்கு, அருகில் உள்ள, தேர்வு நிலை பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களே நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ளனர்.
உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் பணியிடங்கள், அதிகளவு காலியாக இருப்பதால், பேரூராட்சி மக்களின் அடிப்படை வசதிகளை சீராக செய்து தருவது கேள் விக்குறியாக உள்ளது. ஊராட்சிகளை, மாவட்ட நிர்வாகம் நேரடியாக கண்காணிக்கின்றன. நகராட்சி, மாநகராட்சியை, அதிகாரம் பொருந்தியவர்கள் நிர்வகிக்கின்றனர். இடையே உள்ள பேரூராட்சிகளில், சீராக கண்காணித்து நிர்வாகம் செய்ய போதிய அதிகாரிகளும் இல்லை.எனவே, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில், மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE