சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 12, 2011
Share
Advertisement
திருப்பூர்:மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார்."தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்; கடந்த 2006 ஜூன் மாதம் பணிவரன்முறை

திருப்பூர்:மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார்."தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்; கடந்த 2006 ஜூன் மாதம் பணிவரன்முறை செய்யப்பட்டு நியமனம் செய்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 2009 ஜூன் மாதம் முதல் நியமனம் செய்யப்பட்டு வரும் ஆசிரியர்களின் தர ஊதியத்தில் உள்ள வேறுபாட்டை களைய வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டார செயலாளர் ராஜேஷ்குமார், நகர செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X