'நிடி ஆயோக்' வெளியிட்ட, வேளாண் வர்த்தகத் துக்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில், தமிழகம், 25ம் இடத்திற்கு தள்ளப்பட்டது, பெரும் சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது. 'பின்னடைவில் இருந்து தமிழகம் முன்னேறும்' என, அதிகாரி கள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.
மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, 1950ல், மத்திய திட்டக்குழு அமைக்கப் பட்டது. மத்தியில், பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மத்திய திட்டக்குழுவை கலைத்து, 'நிடி ஆயோக்' என்ற, அமைப்பை உருவாக்கியது. நாட்டின் வளர்ச்சிக்கு, வழி காட்டுவதே இதன் நோக்கம்.பிடித்துள்ளன. மூன்றாம் இடத்தை ராஜஸ்தான் பெற்றுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங் களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள், ஏழு, எட்டு, ஒன்பதாம் இடங்களை பிடித்துள்ளன.இப்பட்டியலில், தமிழகத்திற்கு, 25வது இடம் கிடைத்துள்ளது, விவசாயிகள், சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 2011க்கு முன் வரை வேளாண் உற்பத்தி குறைந்திருந்தது. அதன்பின், வேளாண் நிலங்கள் விற்பனைக்கு, அரசு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்தது.
வேளாண் துறை யில், இரண்டாம் பசுமை புரட்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தோட்டக்கலை துறையில், இருமடங்கு உற்பத்தி; மும்மடங்கு லாபம் என்ற திட்டமும் அமலானது.
அதிகரிப்பு:
இத்திட்டங்களால்,
மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்கின. தற்போது,
தமிழகத்தில், வேளாண் உற்பத்தி அதி கரித்துள்ளது. இதற்காக, மத்திய அரசு,
'கிரிஷி கர்மான்' உள்ளிட்ட, பல விருதுகளை
வழங்கியுள்ளது. அடுத்த கட்டமாக, வேளாண் விளைப்பொருட்கள் சந்தைப்படுத்துதலை, விரிவாக்கும் பணிகள் நடக்கின்றன.
இதற்காக, ஒழுங்குமுறை விற்பனை கூடம், சிறப்பு வணிக வளாகங்கள், சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், பழுக்க வைக்கும் கூடங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத் தாண்டில், தமிழகம் வேளாண் வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (35)
Reply
Reply
Reply