அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அறக்கட்டளையில் மகனுக்கு பதவி
அழகிரி கோரிக்கை; ஸ்டாலின் எதிர்ப்பு

'முரசொலி அறக்கட்டளையில், தன் மகன் தயாநிதிக்கு பதவி வழங்க வேண்டும்' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் முறையிட்டுள் ளார். இதற்கு, ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறக்கட்டளையில் மகனுக்கு பதவி அழகிரி கோரிக்கை; ஸ்டாலின் எதிர்ப்பு

இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:


உடல்நலம் பாதிக்கப்பட்டதால், தி.மு.க.,

தலைவர் கருணாநிதி, சில நாட்களாக, கோபாலபுரம் வீட்டில் தங்கி சிகிச்சை பெறுகிறார். அவரை, சில நாட்களுக்குள், இரு முறை அழகிரியும், அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதியும் சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது,இடைத்தேர்தலுக்கு பின், தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை வழங்குவதாக, அழகிரியிடம் கருணாநிதி கூறியுள்ளார்.

அதற்கு அழகிரி, 'எனக்கு கட்சியில் பதவி அளிப்பது இருக்கட்டும்; முரசொலி அறக்கட்டளை நிர்வாகி யாக வசதியாக, என் மகன் தயாநிதிக்கு, தி.மு.க., அறக்கட்டளையின் உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும்' என, கோரியுள்ளார்.

இந்த தகவல், ஸ்டாலினுக்கு எட்டியதும்,நேற்று முன்தினம் இரவு, கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற அவர், 'சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைய பாடுபட்டவர் அழகிரி. கட்சிக்கு எதிராக செயல்படும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக் கும் எந்த பதவியும் வழங்க முடியாது; அவர்களை,

Advertisement

கட்சியில் இணைக்க விட மாட்டேன்' என, கருணாநிதியிடம் ஆவேசமாக கூறியுள்ளார்.

அவரை சமாதானப்படுத்த, கருணாநிதியின் மகள் செல்வி முற்பட்டுள்ளார். அது, பலன் அளிக்காததால், குடும்பத்தினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sardar papparayudu - nasik,இந்தியா
08-நவ-201611:22:02 IST Report Abuse

sardar papparayuduஆப்பிரிக்க தமிழர்கள் அமரர் வ.உ.சிக்கு , அவர் வறுமையில் வாடுவதினை கண்டு திரட்டிய நிதி , இந்திய பெரிய தலைவர் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு இடம் பெயர்ந்தபோது அவர் மூலமாக அனுப்பி வைத்தனர் அது கடைசி வரையில் வஉசிக்கு அளிக்கப்படவே இல்லை .1930 களிலேயே பொது பணத்தினை இம்மாதிரி கையாண்டுள்ளனர் என்றால் ????

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
08-நவ-201604:18:05 IST Report Abuse

மதுரை விருமாண்டிஅறக்கட்டளை? தக்காளி.. கொள்ளையடித்த பணக்கட்டளை..

Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
07-நவ-201621:46:44 IST Report Abuse

Siva Kumarஎல்லா சொத்தையும் ஒரே ஆளுக்கா தாரை வாக்க போகிறார்? பசங்களுக்கு பிரிச்சு கொடுத்தால், போற வழிக்கு கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்.

Rate this:
மேலும் 97 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X