ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு -- காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது;
இங்கு, பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து,ஜூலை, 9 முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு, 90க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை; பள்ளிகள் உட்பட, 70க்கும் மேற் பட்ட கட்டடங்களுக்கு,
பிரிவினைவாத கும்பல் தீ வைத்துள்ளது. இந்நிலையில், அங்கு,
அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக, உயர் போலீஸ்அதிகாரி களுடன் முதல்வர் மெஹபூபா முப்தி, ஆலோசனை நடத்தினார்.
இதன் பின், அம்மாநில போலீஸ் டி.ஜி.பி., கே.ராஜேந்திரா கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தற்போது, 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இது மட்டு மின்றி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து, ஏராளமான பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர்.
இதனால், நிலைமை மோச மடைந்து வருகிறது. அவர்கள் கைது செய்யப்படுவர். இயல்பு
நிலைமை திரும்ப நடவடிக்கை எடுக்கப் படும்; அடுத்த மூன்று மாதங்களில், இந்த
இலக்கை எட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
பாக்., அத்துமீறல்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத் தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. உடனடியாக, நம் ராணுவமும் பதிலடி தாக்கு தல் நடத்தியது. இரு
தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், இரண்டு இந்திய வீரர்கள் இறந்தனர். எல்லையை தாண்டி ஊடுருவ முயன்ற, பாக்., ராணுவத்தின் முயற்சியை, நம் வீரர்கள் முறியடித்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (10)
Reply
Reply
Reply