பொது செய்தி

இந்தியா

சிறையில் மின்வேலி; ம.பி., அரசு முடிவு

Updated : நவ 06, 2016 | Added : நவ 06, 2016 | கருத்துகள் (13)
Share
Advertisement
போபால் : மத்திய பிரதேச மாநிலம், போபால் சிறையில் இருந்து தப்பிய, 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள சிறைகளில் மின்வேலி அமைக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தப்பிய பயங்கரவாதிகள்:மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள, சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யின் போபால்
சிறையில் மின்வேலி ம.பி., அரசு முடிவு

போபால் : மத்திய பிரதேச மாநிலம், போபால் சிறையில் இருந்து தப்பிய, 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள சிறைகளில் மின்வேலி அமைக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.


தப்பிய பயங்கரவாதிகள்:

மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள, சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யின் போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சில நாட்களுக்கு முன், சிறை காவலர் ஒருவரை கொலை செய்த இந்த பயங்கரவாதிகள், பின் சிறையில் இருந்து தப்பிச் சென்றனர்.


நீதி விசாரணை :

போலீசார் நடத்திய என்கவுன்டரில், எட்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்தன; அம்மாநில ஐகோர்ட்டில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து, நீதி விசாரணை நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள சிறைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மின்வேலி :

இதுகுறித்து, ம.பி., மாநில சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி., சஞ்சய் சவுத்ரி கூறியதாவது: ம.பி.,யில் உள்ள, 122 சிறைகளில், பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக, ஆலோசனை நடத்தி வருகிறோம். சத்தீஸ்கர் சிறைகளை போல, இங்கும், சிறை வளாகத்தில் மின்வேலி அமைக்க முடிவு செய்துள்ளோம்; இதற்காக, அங்கு சென்று பார்வையிட்டு வர, போலீஸ் அதிகாரிகள் குழு, சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
07-நவ-201619:51:38 IST Report Abuse
Rajendra Bupathi இதுக்கு எவனாவது மனித நேயம், சமூக ஆர்வலர் அப்படி இப்படின்னு எவனாவது வாயை தொறந்தா போட்டு தள்ளவும் தயங்காதீங்க? இந்தியாவுக்கே ஒரு முன் மாதிரியான நடவடிக்கை சபாஷ்.
Rate this:
Cancel
$$$$ - $$$$,இந்தியா
07-நவ-201614:39:42 IST Report Abuse
$$$$ சுச்சி போர்டை கழட்டி ஒயரை கடிக்கிறமாதி ஒவ்வொரு செல்லிலேயும் வசதி பண்ணி குடுங்க......நல்லவன் சம்பாதிச்சு வரி கட்டி நார்ப்பயலுக ஏன் லெக் பீஸ் திங்கணும்...?
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-நவ-201612:36:49 IST Report Abuse
Pasupathi Subbian உள்ளே உள்ள ஓட்டையை முதலில் சீர் செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X