பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
5,451 அரசு வேலைக்கு 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்கள் 12.60 லட்சம் பேர்: ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,451 பணியிடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வில், 10ம் வகுப்பு முதல், இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை,12.60 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வின் முடிவுகள், ஆறு மாதங்களில் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

5,451 அரசு வேலைக்கு 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்கள் 12.60 லட்சம் பேர்: ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு

தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவி யாளர், தட்டச்சர், வரி வசூலிப்பாளர், நில அளவையாளர், வரைவாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட, ஏழு விதமான பணியிடங்க ளில், 5,451 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, குரூப் - 4 எழுத்துத் தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., ஆக., 9ல் அறிவித்தது.

தேர்வில் பங்கேற்பதற்கான அடிப்படை கல்வித் தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டோர்,தேர்வுக்கு,செப்., 9க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னையால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.

இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளி யானதும், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு,

செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்று காலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு முதல், பட்டப் படிப்பு, பிஎச்.டி., மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை, மொத்தம், 15.64 லட்சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்; அவர்களில், 80.5 சதவீதமாக, 12.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
* சென்னை உட்பட, 301தாலுகாக்களில், 5,296 தேர்வு அறைகளில் தேர்வு நடந்தது. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட ஆய்வு அதிகாரிகள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் என, மொத்தம், 88 ஆயிரத்து, 810 பேரும்; பறக் கும் படை அதிகாரிகள், 218 பேரும், தேர்வை நடத்தும் பணியில் ஈடுபட்டனர்
* தேர்வுக்கு வந்தவர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், கைப்பை உள்ளிட் டவை, தேர்வறையில் அனுமதிக்கப் படவில்லை.

'ரிசல்ட்' எப்போது?

சென்னையில் தேர்வு நடைபெற்ற மையங் களை,டி.என்.பி.எஸ்.சி.,தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகி யோர் பார்வையிட்டனர். பின், அருள்மொழி அளித்த பேட்டி:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஓராண்டில், 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வு களும் நடத்தப்பட்டு; 22 முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஜூன், 16 வரை நடந்த அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும்அறிவிக்கப்

Advertisement

பட்டு விட்டன. மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு, வரும் வாரத்தில் வெளியாகும்.
சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, உயர் பதவிகளில் காலியாக உள்ள, 85 பணிஇடங் களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு, வரும், 9ல், அறிவிக்கப்படும். தேர்வாணையத் தின் திருத்தப்பட்ட அறிவுரைகள், இன்று வெளியிடப்படும். இந்த விதிகள், அடுத்து வரும் தேர்வுகள் அனைத்துக்கும் பொருந்தும். 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், ஆறு மாதங்களுக் குள் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வில் புதுமண தம்பதி
தர்மபுரியைச் சேர்ந்த மணமக்கள் மணிமாறன் - சித்ரா ஆகியோர், நல்லம்பள்ளி அரசு பள்ளி மற்றும் தர்மபுரி குட்ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில், மணக்கோலத்தில் தேர்வு எழுதினர்.
மணமகன் மணிமாறன் கூறியதாவது:பி.இ., படித்த எனக்கும், எம்.எஸ்சி., - பி.எட்., படித்த சித்ராவுக்கும், திருமணம் நிச்சயம் செய்யும் முன்னரே, இருவரும், 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பித்துஇருந்தோம். தேர்வு நாளில், எங்கள் திருமணத்தை நடத்த, பெரியோர்கள் முடிவு செய்தனர். அதனால், அதிகாலை, 5:00 மணிக்கு திருமணம் முடிந்ததும்,இருவரும் அவரவர் தேர்வு மையத் தில், தேர்வில் பங்கேற்றோம்; தேர்ச்சி பெற்று, இருவரும் அரசு வேலையில் சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
07-நவ-201619:03:48 IST Report Abuse

RAMASWAMY SIN TAMIL NADU E BASED RESERVATION TO BE SCRAPPED. INCOME BASED RESERVATION TO BE IMPLEMENTED. THEN ONLY ALL E S INCLUDING FORWARD COMMUNITY CANDIDATES WILL GET CHANCE . UNLESS FORWARD COMMUNITY CANDIDATES POSITION IS PITYABLE. THEY SHOULD ALSO COME UP IN LIFE. THIS IS 100 PERCENT TRUE TRUE TRUE

Rate this:
P.Thanushkodi - srivilliputtur  ( Posted via: Dinamalar Windows App )
07-நவ-201612:29:06 IST Report Abuse

P.Thanushkodiபொறியல் துறை தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் போது மதிப்பெண்களுக்கு படிக்காமல் புரிந்து படித்தால் நல்லது திறமையான எலக்டிரிசியன்கள் ஆட்டோ மெக்கானிக் இருந்தால் நன்றாக வாழலாம் லாரி சங்கத் தலைவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது அரசு இளநிலை உதவியாளர் சம்பளத்தை விட எங்க டிரைவர் சம்பளம் அதிகம் ஏதாவது ஒரு கிராக்கியான தொழிலை கற்று கொண்டால் அரசு வேலையை நம்ப வேண்டியதில்லை

Rate this:
Balaji - Khaithan,குவைத்
07-நவ-201611:39:35 IST Report Abuse

Balajiவெறும் 5 ஆயிரத்தி சொச்சம் பணியிடங்களுக்கு 12.60 லட்சம் பேர் தேர்வெழுதும் அவலம் வேறெந்த மாநிலத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை..... இதை குறைக்க ஒவ்வொரு குருப் தேர்வு முறைக்கும் குறைந்த பட்ச கல்வித்தகுதியை போல அதிகபட்ச கல்வித்தகுதியையும் வைக்க வேண்டும்..... அப்படி செய்தால் இதில் முக்கால்வாசி குறைந்துவிடும்...... இன்னும் அரசு பணி என்றால் அதற்குரிய மதிப்பு இன்னும் குறையவில்லை என்பதையும் இந்த எண்ணிக்கை உணர்த்துகிறது...... ஆனால் எதற்காக அரசுப்பணிக்கு இவ்வளவு போட்டி என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை........

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X