பெங்களூரு : பராமரிப்பு பணிகள் காரணமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இரண்டரை மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.
தற்காலிக மூடல் :
கர்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அடுத்தாண்டு பிப்ரவரி, 19 முதல், ஏப்ரல், 30 வரை, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேவையை உயர்த்த திட்டம் :
பராமரிப்பு பணிகள் காலை, 10:30 முதல், மாலை, 5 வரை மட்டும் மேற்கொள்ளப்படும். மற்ற நேரங்களில் பொதுமக்கள் வசதிக்காக விமானங்கள் இயக்கப்படும். விமான பயண நேரங்கள் அனைத்தும், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்த பின் தெரிவிக்கப்படும்.தற்போது, ஒரு மணி நேரத்துக்கு, 38 வான்வழி போக்குவரத்து சேவையை, பெங்களூரு விமான நிலையம் வழங்கி வருகிறது. இதை, 48 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE