"தண்ணியாக பணம் செலவாகுதே கண்ணீர் விடும் கரை வேட்டிகள்| Dinamalar

"தண்ணியாக பணம் செலவாகுதே' கண்ணீர் விடும் கரை வேட்டிகள்

Added : நவ 08, 2016
Share
""தீபாவளி வந்தாலே, போலீசாருக்கு திண் டாட்டமாயிடுது,''என்றபடி, வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே வந்தாள் சித்ரா.""தீபாவளியே முடிஞ்சிருச்சு. அவங்களுக்கு, இன்னும் என்ன திண்டாட்டம்?'' என்றாள் மித்ரா.""இந்த வருஷம் தீபாவளி நாள்லதான், இடுவம்பாளையத்தில, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செஞ்சுட்டு, நகை, பணம், "சிசி டிவி'யோட, ஹார்ட் டிஸ்க் எல்லாத்தையும் கொள்ளையடிச்சு
"தண்ணியாக பணம் செலவாகுதே' கண்ணீர் விடும் கரை வேட்டிகள்

""தீபாவளி வந்தாலே, போலீசாருக்கு திண் டாட்டமாயிடுது,''என்றபடி, வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே வந்தாள் சித்ரா.
""தீபாவளியே முடிஞ்சிருச்சு. அவங்களுக்கு, இன்னும் என்ன திண்டாட்டம்?'' என்றாள் மித்ரா.
""இந்த வருஷம் தீபாவளி நாள்லதான், இடுவம்பாளையத்தில, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செஞ்சுட்டு, நகை, பணம், "சிசி டிவி'யோட, ஹார்ட் டிஸ்க் எல்லாத்தையும் கொள்ளையடிச்சு போயிட்டாங்களே. அதில் இன்னும் ஒன்றும் புரியாம, போலீசார் திணறுறாங்க,''என்று, சித்ரா கூறினாள்.
""குற்றவாளிங்க, புத்திசாலித்தனமா, ஹார்ட் டிஸ்க்கையும் கழட்டிட்டு போயிட்டாங்களே,'' என்றாள் மித்ரா.
""ரொம்ப கரெக்ட். ஒரு திருட்டுல, ஈடுபட்ட நபரோட கேமரா பதிவை கொடுத்தும், போலீஸ் நடவடிக்கை எடுக்கல தெரியுமா,''என்று, சித்ரா சொல்ல, ""இந்த கூத்து எங்கே நடந்தது'' என்று, மித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""அவிநாசி பக்கத்துல கருவலூர்ல, ஸ்பின்னிங் மில் குவார்ட்டர்சில் நடந்த திருட்டுல, கேமரா பதிவு கெடச்சிருக்கு. புகாரோட, அதையும் போலீஸ் கிட்ட கொடுத்தா, "இன்று போய் நாளை வா' என, புகார் கொடுக்க வந்தவரை அலையவிட்டிருக்காங்க. அந்த நபர், உயரதிகாரியை பார்த்த பின்னால தான், விசாரணைய ஆரம்பிச்சிருக்காங்க,''என்று சித்ரா, சொன்னபோது, செல்போன் சிணுங்கியது. டிஸ்பிளேவில், ரஞ்சித் என்று எழுத்து ஒளிர, "இவர் வேற,' என சலித்துக்கொண்டே, ""அங்கிள், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அப்பா வந்ததும், உங்ககிட்ட பேச சொல்றேன்,'' என்றவாறு போனை ஆப் செய்தாள்.
""போலீஸ்காரங்க இப்படியிருந்தா எப்படி,'' என, மித்ரா நொந்து கொண்டாள்.
""பூ மார்க்கெட்டுல, மறுபடி ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுட்டாங்க,'' என்று, சித்ரா அடுத்த விஷயத்துக்கு வந்தாள்.
""முகூர்த்தம், விசேஷ நாள் ஆரம்பிச்சாலே, இந்த பிரச்னையும் வந்துருதே,'' என்றாள் மித்ரா.
""முன்னாடி கடைக்காரங்க, ரோட்டை பாதி வரை ஆக்கிரமிச்சிடுறாங்க. ஒரு சில கடைகள், மாநகராட்சியிடமும், இன்னும் சில கடைகள், ஈஸ்வரன் கோவில் கட்டுப்பாட்டிலும் இருக்காம். ரெண்டு நிர்வாகமும், இதை கண்டுக்கறதில்ல. பொதுமக்களுக்குத்தான் பிரச்னையே,'' என்றாள் சித்ரா.
""வியாபாரிங்க சங்கம் இருக்குமே. அவங்களாவது நடவடிக்கை எடுக்கலாமில்ல,'' என்று, மித்ரா அங்காலாய்த்தாள்.
""அந்த சங்கமும் செயல்பாட்டில் இல்லையாம். அதனால, ஆக்கிரமிப்பு கடைக்காரங்களை, யார் கட்டுப்படுத்தறதுன்னு, மத்த கடைக்காரங்களுக்கு குழப்பமா இருக்காம்,'' என்று, சித்ரா கூறினாள்.
""பைக்கை மடக்கிய போலீசை, ஒருவர் மடக்கின சம்பவம் தெரியுமா'' என்று, சஸ்பென்ட் வைத்தாள் மித்ரா.
""இந்த கூத்து எங்க நடந்தது'' என்றாள் சித்ரா.
""காலையில, 11:00 மணிக்கு தாராபுரம் ரோட்ல, டிராபிக் போலீஸ் நின்று, செக் பண்ணியிருக்காங்க. காக்கிச்சட்டை போட்ட சரக்கு ஆட்டோ டிரைவர் ஒருத்தர், அவசரமாக பைக்கில் போயிருக்கிறார். அவரை மடக்கின போலீஸ்காரங்க, சரக்கு போட்டிருக்கியான்னு கேட்டு, பிரத் அனலைசர் வெச்சு, ஊத சொல்லியிருக்காங்க.
"" அவர், சரக்கு அடிக்கலைன்னு தெரிஞ்சதும், ஒரு போலீஸ்காரர், "ஏன் சரக்கு போடாம போற'ன்னு நக்கலா கேட்டிருக்கார். அந்த டிரைவரோ, "நூறு ரூபாய் இருந்தா சரக்கு போடலாம். ஆனா, போலீசுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணுமே. வேணுமுன்னா, நீங்க நூறு கொடுக்கறீங்களா' என்று கேட்டு அதிர வெச்சாராம்.
"" போலீஸ்காரங்க, "முதலில் நீ கௌம்பு சாமி'ன்னு அனுப்பீட்டாங்களாம்,'' என்று மித்ரா பேசி முடிக்கவும், ""போலீஸ் கதை போதும். இதைக்கேளு,'' என்று சொன்ன சித்ரா, ""இப்படியொரு தேர்தல் செலவு வந்திடுச்சேன்னு, ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒரே மாதிரி "பீல்' பண்ணறாங்க,'' என்றாள்.
""எதுக்காக, பீல் பண்ணறாங்க,'' என்று, மித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""மூன்று தொகுதி, சட்டசபை இடைத்தேர்தல் பேர்ல, செலவு வெச்சுட்டாங்களேன்னுதான், வாயிலையும், வயித்திலயும் அடிச்சுக்கறாங்க. அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கியிருக்காங்க. தி.மு.க., நிர்வாகிகள், அரவக்குறிச்சி போயிருக்காங்க. சும்மா வேலை நடக்குமா? மொத்தமா, 100 பேருக்கு மேல போயிருக்காங்க. தங்கறது, சாப்பிடறதுன்னு, ஓட்டுக்கு பணமுன்னு, உள்ளாட்சியில "சீட்' வாங்கியிருந்தவங்க, செலவு செஞ்சுட்டு இருக்காங்களாம். ரொம்ப நாளா சம்பாதிச்ச பணம், தண்ணி மாதிரி கரைஞ்சிட்டே போகுதுன்னு கவலையில இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
""அது சரி. டெங்கு காய்ச்சல் நடவடிக்கை பத்தி, ஏதாவது நியூஸ் இருக்கா,'' என்றாள் மித்ரா.
""இல்லாமலா? "டெங்கு' அறிகுறி வார்டுகள்ல, மாநகராட்சி ஆளுங்க வேலை செய்யறாங்க. தலை இருக்கறப்ப, வால் ஆட முடியுமா? மாநகராட்சி வேலை யா இருந்தாலும், மாவட்ட நிர்வாகம், "செக்' வச்சுட்டாங்க,''என்றாள் சித்ரா.
""எல்லா பணிகளையும் கண்காணிக்கறது வழக்கம் தானே?'' என்றாள் மித்ரா.
""கண்காணிக்கறது வழக்கம்தான். துணை கலெக்டர்கள நியமிச்சு, ஆய்வு செய்யறது புதுசா இருக்கு. மாநகராட்சி "டெங்கு' ஒழிப்பு வேலை செஞ்சாலும், கலெக்டரும் பதில் சொல்லித்தானே ஆகணும்? ரெண்டு வார்டுக்கு ஒரு துணை கலெக்டர் வீதம், ஏழு பேரை நியமிச்சிருக்காங்க. அரசாங்கம் சொல்றத சரியா செய்யலைனா, உடனே கலெக்டருக்கு தகவல் கொடுக்கனும்னு <உத்தரவு போட்டதுதான், இதில ஹைலைட்டான விஷயம்,''என்று சித்ரா சொன்னாள்.
""மாநகராட்சியில, அதிகாரிங்க ராஜ்ஜியம் நடக்குது. "செக்' வெச்சதால, மாநகராட்சி வேலையும் வருவாய்த்துறை கண்காணிப்புக்கு வந்திருக்குனு சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.
""அட, மறந்தேபோச்சே. அதிகாரிகளுக்கு கொஞ்சம் ஈரம் இருக்குதுங்க,''என்ற சித்ரா குழப்ப, ""ஏய், என்ன சொல்ல வர்றே, தெளிவா சொல்லு,'' என்ற மித்ரா கொஞ்சம் கோபமாக கேட்டாள்.
""கரும்புக்கு காசு கிடைக்கலான, தற்கொலை செய்யற தவிர்த்து வேற வழியில்லைனு சொன்ன விவசாயிக்கு மட்டும், கரும்புக்கான பணம் மொத்தமா கொடுத்துட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""கரும்புங்கற, காசுங்கற ஒண்ணும் புரியலையே?'' என்றாள் மித்ரா.
""அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வளர்த்து கொடுத்தவங்களுக்கு, அறுவடை முடிஞ்சு, பல வாரமாகியும் பணம் கொடுக்கலை. போன தடவை நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில, பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்; பணம்கிடைக்கலைனா தற்கொலை செய்யற தவிர வேற வழியில்லைனு, விவசாயி ஒருத்தர் கண்ணீர் விட்டாரு.
""இப்ப, அந்த விவசாயிக்கு மட்டும், முழு தொகையையும் கொடுத்துட்டாங்க; கல்யாணமும் நடந்திருச்சு. மத்த விவசாயிகளுக்கு, தலா, 5,000 ரூபாய் மட்டும், பண்டிகை செலவுக்கு கொடுத்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""பி.ஆர்.ஓ.,க்கள் போட்டி போடறதால, கலெக்டர் மாநகராட்சி பகுதியில "விசிட்' அடிச்சா, பத்திரிகைக்காரங்களுக்கு முழு விவரம் தெரியவே மாட்டீங்குது. கலெக்டர் மாநகராட்சி பகுதிக்கு போனா, மாநகராட்சி பி.ஆர்.ஓ., காதுல போட்டுட்டு, மாவட்ட பி.ஆர்.ஓ., ஒதுக்கிக்கறாங்க; அவரும், எல்லா பத்திரிகைக்களுக்கும் தகவல் கொடுக்கறதில்லை.
ஆய்வு முடிஞ்சதும், செய்தியா அடிச்சு கொடுத்திடறாரு. அதனால, பல தடவ கலெக்டர் ஆய்வு செஞ்சும் கூட, அதன் விவரம் செய்தியா வர்றதே இல்லைனு, மாநகராட்சி அதிகாரிகள் கவலையோட சொல்றாங்கபா. சரிப்பா, நான் போய், மளிகை சாமான் வாங்கோணும்,'' என்றவாறே, மித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X