இனி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: மோடி அதிரடி அறிவிப்பு

Updated : நவ 09, 2016 | Added : நவ 08, 2016 | கருத்துகள் (349)
Advertisement
500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது

புதுடில்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 9ம் தேதி முதல் செல்லாது எனவும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார் பிரதமர் மோடி. ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள் ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்.

எல்லையில் பாக். ராணுவம்,பயங்கரவாதிகளால் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். பின்னர் முப்படை தளபதிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நவம்பர் 8 ம்தேதி இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவரது உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:

* ஏழைகளின் நலனுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
* உலக பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கிறது என சர்வதேச நிதியகமான ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.
* ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழித்துக்கட்டுவதே எனது தலைமையிலான அரசின் நோக்கம்..
* இன்று நள்ளிரவு முதல் ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது.
* வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
* ஏ.டி.எம்.க்கள் நவ. 9 மற்றும் 10-ம் தேதிகளில் செயல்படாது.
* நவம்பர் 9ம் தேதி வங்கிகள் செயல்படாது.
* காசோலை, டி.டி. கிரிடிட், டெபிட் ,கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
* நவ. 11-ம் தேதி வரை விமான நிலையங்கள்,ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் பெட்ரோல் பங்க்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைபயன்படுத்தலாம்.
* மேலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
* தற்போதைய 500 ,1000 ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து வங்கிகள்,தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
* இனி புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுக்களை அரசு விநியோகிக்க உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்
* ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
* நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிரமத்திற்காக வருந்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (349)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sangeethag - Karaikal,இந்தியா
10-நவ-201612:25:21 IST Report Abuse
Sangeethag Super Modiji, You are a real Hero
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
09-நவ-201622:52:49 IST Report Abuse
X. Rosario Rajkumar இதைச்செய்தவர் பஸ் நிலையம், ரயில் நிலையம், மருத்துவ மனை போன்ற பொது இடங்களில் நூறுரூபாய் நோட்டு கிடைக்க வகை செய்திருந்தால் ,இன்று அவதிப்படும் பொதுமக்களுக்கு பேருதவியாய் இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
09-நவ-201619:51:29 IST Report Abuse
Sathish இப்படி அதிரடி முடிவுகள் தான் மாற்றத்தை கொடுக்கும். அனைத்து துறைகளிலும் மாற்றம் வேண்டும். குறிப்பாக சட்டதிட்டங்களில் மாற்றம்வேண்டும். சில மேல்மட்ட குள்ளநரிகள் தப்பான வழியில் சம்பாதித்து பதுக்கிய பணம் வீணாக போகின்ற ஆதங்கத்தில் பிரதமரை ஹிட்லர் என்றும் இந்த அறிவிப்பிற்கு எதிராக பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X