சர்வதேச ஹாக்கி: நரிந்தர் புதிய தலைவர்

Added : நவ 12, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புதிய தலைவராக இந்தியாவின் நரிந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டார்.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (எப்.ஐ.எச்.,) தலைவராக ஸ்பெயினை சேர்ந்த முன்னாள் கோல்கீப்பர் லீன்டிரோ நீக்ரே இருந்தார். இவரது பதவி காலம் முடிந்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதற்காக துபாயில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. மொத்தம் 118 வாக்குகள் பதிவாகின.
சர்வதேச ஹாக்கி நரிந்தர் புதிய தலைவர்

மும்பை: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புதிய தலைவராக இந்தியாவின் நரிந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (எப்.ஐ.எச்.,) தலைவராக ஸ்பெயினை சேர்ந்த முன்னாள் கோல்கீப்பர் லீன்டிரோ நீக்ரே இருந்தார். இவரது பதவி காலம் முடிந்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதற்காக துபாயில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. மொத்தம் 118 வாக்குகள் பதிவாகின. இதில் 68 வாக்குகளை பெற்ற இந்தியாவின் நரிந்தர் பத்ரா,59, வெற்றி பெற்று புதிய தலைவராக தேர்வானார்.


எதிர்த்து போட்டியிட்டவர் : இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆஸ்திரேலியாவின் கென் ரீடு, அயர்லாந்தின் டேவிட் பால்பிர்னீ முறையே 30, 29 வாக்குகள் மட்டுமே பெற்றனர். இதன்மூலம் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பில் தலைவரான முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (1)

கணேஷ் - திண்டுக்கல்,இந்தியா
13-நவ-201609:16:17 IST Report Abuse
 கணேஷ் இன் வரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் தலைமை பொறுப்பு வரும்... நரிந்தர் பத்ரா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X