மும்பை: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புதிய தலைவராக இந்தியாவின் நரிந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (எப்.ஐ.எச்.,) தலைவராக ஸ்பெயினை சேர்ந்த முன்னாள் கோல்கீப்பர் லீன்டிரோ நீக்ரே இருந்தார். இவரது பதவி காலம் முடிந்ததை அடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதற்காக துபாயில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. மொத்தம் 118 வாக்குகள் பதிவாகின. இதில் 68 வாக்குகளை பெற்ற இந்தியாவின் நரிந்தர் பத்ரா,59, வெற்றி பெற்று புதிய தலைவராக தேர்வானார்.
எதிர்த்து போட்டியிட்டவர் : இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆஸ்திரேலியாவின் கென் ரீடு, அயர்லாந்தின் டேவிட் பால்பிர்னீ முறையே 30, 29 வாக்குகள் மட்டுமே பெற்றனர். இதன்மூலம் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பில் தலைவரான முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.