பலுசிஸ்தான்: பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷா நுாரானி எனப்படும் வழிப்பாட்டு தளம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.