பதிவு செய்த நாள் :
வதந்தி!
வட மாநிலங்களில் உப்பு ரூ.200-க்கு விற்பனையாவதாக...:
பொய் தகவல் பரப்புவோருக்கு அரசு கடும் எச்சரிக்கை

புதுடில்லி:வட மாநிலங்களில், சமையல் உப்பு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 வட மாநிலங்களில் உப்பு 200 ரூபாய்க்கு விற்பனையாவதாக...வதந்தி!:பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை


''இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக, மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில், 'பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, பிரதமர் மோடி, சமீபத்தில் அறிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் இந்த பணத்தை வங்கிகளில், 'டிபாசிட்' செய்யவும், மாற்றிக் கொள்ளவும், ஏராளமானோர் திரள்கின்றனர். பணம் மாற்றிக் கொள்வதில் கட்டுப்பாடு விதிக்கப்படுவதால், நாடு முழுவதும், தற்காலிகமாக பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சமாஜ்வாதி யைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ள, உ.பி., யில், சமையல் உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதாக வும்; கிலோ, 14

ரூபாய்க்கு விற்கப்படும் உப்பு, 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், காட்டுத்தீ போல் வதந்தி பரவியது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

உப்பு தட்டுப்பாடு வதந்தி யை, உ.பி., மாநில நுகர் வோர் விவகார செயலர் ஹேம் பாண்டே மறுத்துள் ளார். அவர் கூறுகையில், ''உப்பு, 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வதந்தி கிளம்பியுள்ளது; இதில், துளியும் உண்மை இல்லை. உப்பு வினியோகம் மற்றும் விலையில், எவ்வித பிரச்னையும் கிடையாது,'' என்றார்.

துப்பாக்கிச் சூடு


டில்லி, தெலுங்கானாமாநிலங்களிலும், உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சாலை களில் திரண்டு கோஷமிட்டனர். சில இடங்க ளில், பஸ்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்கள் மீது, கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. டில்லி யில், ஒரு இடத்தில், வர்த்தகர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில், உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. 'இத்தகைய வதந்தி பரப்புவோருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஐதராபாத் மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரித்து உள்ளார்.உ.பி., மாநிலம் கான்பூரில், உப்பு வாங்கச் சென்ற, சவீதா, 52, என்றபெண், நெரிசலில் சிக்கி, கால்வாயில் விழுந்து பலியானார்.

அரசு மறுப்பு


உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்திக்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்து
உள்ளது. மத்திய உணவுத் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான

Advertisement

ராம்விலாஸ் பஸ்வான், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவலில், துளியும் உண்மை இல்லை; இது, வதந்தி. நாட்டில், உப்பு கிடைப்பதில் எந்தவித சிரமமும் இல்லை. கடந்தாண்டை போலவே, தற்போது, உப்பு, கிலோ, 14 அல்லது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உப்பு, 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கிளம்பி யுள்ள வதந்தியால், பொதுமக்கள் மத்தியில், தேவையற்ற பயம் ஏற்பட்டுள்ளது. 200 ரூபாய்க்கு யாராவது உப்பு விற்றிருந்தால், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். நாட்டின் எந்த மூலையில், இது போன்ற சம்பவம் நடந்தால், மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பஸ்வான் கூறினார்.

வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமனும், 'உப்புக்கு பற்றாக்குறை கிடையாது; உப்பு அதிக விலைக்கு விற்கப்படவில்லை' என, சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sen - London,யுனைடெட் கிங்டம்
13-நவ-201618:40:13 IST Report Abuse

senசும்மா எதாவது எழுதுனுமுன்னு எழுதாத சேகர்

Rate this:
sen - London,யுனைடெட் கிங்டம்
13-நவ-201618:38:53 IST Report Abuse

senயோவ் சேகர் நீ ஜால்ரா அடிக்க தான் லாயக்கு,

Rate this:
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
13-நவ-201618:04:01 IST Report Abuse

CHANDRA GUPTHANஎப்படியெல்லாம் மோடி அரசுக்கு தொந்தரவு தரமுடியுமோ கொடுங்கடா . பதுக்கி வெச்சி கொள்ளையடிக்கணும் என்று நினைத்திருந்தால் இந்த நடவடிக்கையே தேவையே இல்லையே . அரசு யந்திரம் நேரான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது . பல வழிகளில் வந்த பணம் அடைக்கப்பட்டது அதுவும் செல்லாது என்பதால் ஏற்பட்ட கடுப்பு . இப்ப இந்த நாய்கள் தெருவில் இறங்கி போராடவேண்டியது தானே . போராடுபவனுக்கு தைரியமிருக்கா தன் கை சுத்தமானது என்று சொல்ல . நான் கடன் வாங்கித்தான் இனிப்பு வாங்கினேன் , பால் வாங்கினேன் என்பவர்கள் எல்லோரும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாதவர்கள் தான் .

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X