கோபே:''கறுப்புப் பணம் பதுக்கி வைப்போருக்கு எதிராக, டிசம்பர், 30க்கு பின், மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்;
நாட்டு நலனில் அக்கறை வைத்து, வங்கிகளில் பணம் மாற்ற வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா திரும்பும் முன், கோபே நகரில், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி யில் பங்கேற்றார்; அப்போது, அவர் பேசியதாவது:
கறுப்புப் பணத்தை மீட்க, அரசு மேலும் பல நட வடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணம் வைத்தி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் பழைய ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்; இதற்கு தேவை யான ஆட்களை பணியமர்த்துவோம்.
நியாயமாக
சம்பாதித்து, வரி கட்டும் மக்களுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது.
அதேசமயம், கறுப்புப் பணம் பதுக்குவோரை, அரசு சும்மா விடாது.என்னை பற்றி
தெரிந்து வைத்துள் ளோர், புத்திசாலிகளாகவும் இருப்பர்;
அவர்கள், ரூபாய்
நோட்டுகளை வங்கிகளில் செலுத்து வதை விட, கங்கையில் வீசுவதே பரவா யில்லை என நினைக்கின்றனர்; அதனால் தான், கங்கை நதியில் ரூபாய் நோட்டுகள் மிதப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் மாற்ற, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அதன் பின், கறுப்புப் பணம் பதுக்குவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை கள் எடுக்கப்படும்.
தங்கள் குற்றங்களுக்கு அவர்கள் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அரசு
அறிவித்ததற்கு, மக்கள்
வரவேற்பு அளித்துள்ளனர்.
பல்வேறு சிரமங் கள் ஏற்பட்டாலும், இந்த நட வடிக்கையை
வரவேற்கும் மக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.ஆறு மணி நேரம், வங்கியில் வரிசையில் காத்திருந்தாலும், நாட்டு நலன் கருதி, இத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த திட்டம் குறித்து, நீண்ட நாளாக யோசித் தேன்;
மக்கள் எதிர்கொள்ளக்கூடிய சிரமங் களையும் யோசித்தேன்.திட்டம் தொடர்பான தகவல்களை ரகசியம் காக்க வேண்டிய கடமையும் இருந் தது. திடீரென, இதை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு, மக்கள் மத்தியில் இந்தளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர் பார்க்கவில்லை.இவ்வாறு மோடி பேசினார்.
'ரூபாய் அச்சடிக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது'
செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு களுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை அச்சடிக் கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:
ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் பணிகளை தொடர்ந்து வருகின் றன. வங்கிகளின் பணிச் சுமையை குறைக்கும் வகையில், பொதுமக்கள், 'டெபிட்' மற்றும் 'கிரெடிட்' கார்டுகளை பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும், 4,000 இடங்களில், போதிய ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப் பட்டுள் ளன. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (131)
Reply
Reply
Reply