பதிவு செய்த நாள் :
'3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!':
அருண் ஜெட்லி நம்பிக்கை

புதுடில்லி:பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்களை அனுபவித்து வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ''மூன்று வாரங்களில் பிரச்னைகள் அனைத்தும் சரியாகி விடும். இந்த திட்டத்தால் நாம் அடையப் போகும் லாபங்கள் ஏராளம்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

 '3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!':அருண் ஜெட்லி நம்பிக்கை

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
வங்கிகளில் பணம் மாற்றும் பொதுமக்களுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் தரப்படுவதால், ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்.

இருப்பினும், அரசின் இத்திட்டம் நீண்ட காலப் பயன்களை அளிக்க வல்லது. எனவே, பொது மக்கள் பொறுமையாக இருந்து அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். நாடு முழுவ தும் உள்ள, இரண்டு லட்சம், ஏ.டி.எம்., இயந்தி ரங்கள் வழக்கமான முறையில் செயல்பட, இன்னும், மூன்று வாரங்கள் ஆகலாம்.

மாற்றங்கள்


புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பவும், தற்போது புழக்கத்தில் உள்ள, மற்ற நோட்டுகளுக்கு ஏற்பவும், ஒவ்வொரு ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது.ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இருந்ததால், ஏ.டி.எம்.,களை முன்

கூட்டியே மாற்றியமைக்க முடியாமல் போனது. இவற்றை மாற்றியமைக்க, குறைந்தபட்சம், மூன்று வாரங்களாவது தேவை.

அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக,வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டு கள் போதிய அளவுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பிரம்மாண்டமான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை, அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க, வாரக் கடைசி நாட்களிலும் வங்கிகளை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கும், வங்கிகளுக்கும் புதிய நோட்டு கள் முழுமையாக சென்றடைந்த பின், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும். இதனால், நம் பொருளாதாரத்தில் பெரியளவில் மாற்றம் இருக்கும். அரசியல் கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்


சமூக வலைத் தளங்களி லும், இதுகுறித்து வதந்தி களை சிலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அச்சப்பட தேவையில்லை


''தங்கள் கையிருப்பில் உள்ளரொக்கத்தை, பொது மக்கள் தைரியமாக வங்கிகளில் வரவு வைக்கலாம். 2.5 லட்சம் வரையிலான தொகையை, 'டிபாசிட்' செய்யும் நபர்கள், வருமான வரி குறித்து அச்சப்படத் தேவையில்லை,''

நாட்டில், கறுப்பு பண பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவே, பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து, பொதுமக்கள்

Advertisement

பீதியடைய வேண்டாம். மக்கள், தங்கள் கைவசம் உள்ள அனைத்து நோட்டுகளையும், வங்கிக் கணக்கில் செலுத்தி வரவு வைத்துக் கொள்ளலாம்.

கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மட்டுமே இந்த அறிவிப்பால் பீதி அடைய வேண்டும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நேர்மையாக பணம் சம்பாதிப்போருக்கு, இது வரப்பிரசாதமே.

தவிர, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான டிபாசிட்டுகள் குறித்து, வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்கப்படாது. அதுகுறித்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தவும் மாட்டார்கள். உங்கள் பணம் உங்களுடையதே; பொதுமக்கள் அச்சப்பட தேவைஇல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு கண்காணிப்பு


'ஜன்தன்' திட்டம் மூலம் துவக்கப்பட்ட வங்கி கணக்குகளில், திடீரென ஏராளமான பணம், 'டிபாசிட்' செய்யப்படுவது குறித்து அரசு கண்காணித்து வருகிறது.

அருண் ஜெட்லி நிதியமைச்சர்



Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naguran G S - Tiruvarur  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201600:40:54 IST Report Abuse

Naguran G Sஒரு வார்த்தையில் சொன்னால், இந்த முயற்சியை குறை சொல்பவர்கள் ஊழல் அரசியல்வியாதிகள் மற்றும் அவர்கள் அடிவருடிகள் லஞ்ச பேர்வழிகள். தன்னிடம் பணிபுரிவோர் உழைப்பை சுரண்டி பணம் சேர்த்து அதற்கு வருமானவரியும் கட்டாத பேராசை பிசாசுகள். இவர்களுக்கு முதல் சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழு வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன். இதனால் நமக்கு என்ன கிடைக்கும் என்பது தெரிய என்னுடன் வாயை பிளந்து கொண்டு அடுத்த வருடம் ஆறு மாதம்லரை வாயை பொத்திக் கொண்டு காத்திருங்கள். இத்திட்டத்தினால் ஏற்பட்ட சிரமங்கள் இந்த வாரம் அனைத்து தட்டு மக்களுக்கும் ஒழுங்காக வரி கட்டியவர்களுக்கும் முடிந்துவிடும். ஏனையோர் மோடி காலை பிடித்து கெஞ்சுவதை தவிர வேறு வழியில்லை. வாழ்க தமிழ் வளர்க இந்தியா ஒழிக கள்ளபணநாயகம்

Rate this:
gmk1959 - chennai,இந்தியா
13-நவ-201618:58:02 IST Report Abuse

gmk1959அரசியல் வியாதிகளேபொதுமக்கள் பொதுமக்கள் பொதுமக்கள் பொதுமக்கள் யார் அந்த பொதுமக்கள் நம்மைப்போல வெட்டியாய் கருது சொல்லிக்கிட்டு இருக்கும் வெட்டிப்பய கூட்டமா என்ன ????? அவங்களுக்கு யார் சப்போர்ட்டும் வேண்டாம் ஆடு நனையுதே என்று ஓநாய் நீலி கண்ணீர் வடிக்கிறது அடுத்த அடி அவர்களுக்கு தான் ஒரு நல்ல குழந்தைக்காக ஒரு தாய் 10 மாதம் தவம் இருந்தும் அந்த குழந்தையை வளர்க்க பெற்றோர் எல்லா கஷ்டங்களையும் தாங்குவது போல எங்கள் தாய்நாட்டின் நலனுக்காக நங்கள் இந்த சிறிய கஷ்டத்தை தங்க தயார் உங்க வேலையே போய் பாருங்க

Rate this:
suresh kumar - singapore,சிங்கப்பூர்
13-நவ-201618:27:06 IST Report Abuse

suresh kumarசாமானியனுக்கு ஒரு நாள் என்பதே பெரும் சுமை..... இவர் என்னடா என்றால் இரண்டு மூன்று வாரம் ஆகும் என்கிறார்... விளங்கிடும்....

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X