மும்பை:'வங்கிகளில் போதிய பண இருப்பு உள்ளது; மக்கள் கவலைப்படத் தேவை யில்லை; அடிக்கடி ஏ.டி.எம்.,களுக்கு சென்று பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து, பழைய நோட்டுகளை மாற்ற வும், வேறு நோட்டுகளை பெறவும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களுக்கு, பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
பல சமயங்களில், ஏ.டி.எம்., களில் பணம் கிடைக்காததால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்று குருநானக் ஜெயந்தியையொட்டி வங்கிகள் செயல்படாது.
எனவே, பணத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் நேற்று, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று பணம் எடுத்தனர்.
இருப்பினும்,60 சதவீத ஏ.டி.எம்.,களில் மட்டுமே பணம் வைக்கப்பட்டுள்ளதால், மீத முள்ளவை செயல்படவில்லை. செயல்படாத, ஏ.டி.எம்.,
களுக்கு செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி, வேறு ஏ.டி.எம்.,களில் பணம் கிடைக் காதா என்ற ஆவலுடன் அலைந்து திரியும் நிலை காணப்படுகிறது.
ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பணம் தீர்ந்து விடுவதாக, பொது மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை விபரம்:
வங்கிகளில்
போதியளவு பணம் இருப்பு உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது
தொடர் பாக, மக்கள் கவலைப்பட தேவையில்லை. அடிக்கடி வங்கிகள் மற்றும்
ஏ.டி.எம்.,களுக்கு சென்று, பணத்தை சேர்த்து வைக்க வேண்டிய சூழ்நிலையும்
இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
புதிய சலுகை!
வங்கிகளில் பணம் பெறுவதற்கு, புதிய சலுகை களை, ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இதன்படி, வங்கிகளில், தினசரி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள விதிக்கப்பட்ட உச்ச வரம்பு, 4,000 ரூபாயிலிருந்து, 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்.,களில், தினசரி, எடுக்க அனுமதிக்கப்பட்ட தொகை, 2,000 ரூபாயிலிருந்து, 2,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளில், ஒரு வாரத் துக்கு பணம் எடுக்க, அனுமதிக்கப்படும் தொகை, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு, அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கி களில் பெற்றுக் கொள்ளலாம் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் நடமாடும், ஏ.டி.எம்., அமைக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
வங்கி மீது கல்வீச்சு
உ.பி.,யில், செல்லாதென அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் ஏற்பட்ட தகராறில், வங்கி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக் கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதையடுத்து, வங்கி மீது சிலர் கற்களை வீசியெறிந்தனர். இந்த சம்பவத்தில், ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். போலீசார் விரைந்து சென்று, அங்கு அமைதி ஏற்படுத்தினர்.
சாக்கு மூட்டைகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகள்
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டா வில், குப்பை கிடங்கில், 500 மற்றும் 1,000 ரூபாய்
நோட்டுகள், துண்டுகளாக கிழிக்கப்பட்டு சாக்கு மூட்டைகளில் போடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, அந்த மூட்டைகளை கைப் பற்றினர். அப்பகுதி யில் நிறுவப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக் கள் உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள், விவரிக்க முடியாத வகையில் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைகளுக்கு, தக்க தீர்வு காணப்படவில்லை. எந்த அரசும், இது போன்ற அலட்சியமான நடவடிக்கையை மேற் கொள்ளக் கூடாது. டிச.,30 வரை,பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த,மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்.கம்யூ.,
நடிகர்கள் வரவேற்பு
கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென மத்திய அரசு அறிவித்ததற்கு, பாலிவுட் நடிகர்கள் சாகித் கபூர், தீபிகா படுகோனே, கரீனா கபூர், டாப்ஸி ஆகியோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
சாகித் கபூர் கூறுகையில், ''ஊழலை ஒழிக்க வேண்டுமானால், கடினமான நடவடிக்கையை எடுப்பது அவசியம். சில நடைமுறை சிக்கல் களால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இருப்பினும், இதனால் ஊழல், கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டால், அது பெரியளவில் நன்மை அளிக்கும். அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (24)
Reply
Reply
Reply