ஆமதாபாத்:குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள கிராமத்தில், பிரதமர் நரேந்திர மோடி யின், 97 வயது தாயார் ஹிராபா,
பிற வாடிக்கை யாளர்களை போல், வங்கியில் வரிசையில் சென்று, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிச் சென்றார்.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், 500,
1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா, குஜராத் மாநிலம், காந்தி நகர் அருகேயுள்ள கிராமத் தில் உள்ள வங்கிக்கு, வீல் சேரில் சென்று, வரிசையில் இருந்து, 4,500
ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினார்.
பணம் மாற்ற, அவரது
உறவினர்கள் உதவி செய்த னர். பழைய நோட்டுகளுக்கு பதில், புதிய, 2,000
நோட்டுகளை பெற்ற ஹிராபா, அவற்றை,
அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு, உற்சாகத் துடன் காண்பித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (38)
Reply
Reply
Reply