பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'மை' வைப்பதில் மாற்றம் இல்லை:
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

'வங்கிகளில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றுவோருக்கு, வலது ஆட்காட்டி விரலில் மை வைக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

'மை' வைப்பதில் மாற்றம் இல்லை:வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளுக்கும், இந்திய ரிசர்வ் வங்கி, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு, அழியாத அடையாள மையை, இந்திய வங்கி கள் அமைப்பு சப்ளை செய்யும். முதலில், சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில், இது
அறிமுகம் செய்யப்படும். பின், தேவைக்கேற்ப, மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

* ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும், ஐந்து லிட்டர் மை வழங்கப்படும். வங்கி காசாளர் அல்லது வங்கியால் நியமிக்கப்படும் அதிகாரி ஒருவர், பழைய நோட்டுகளை மாற்றுவோரின் கையில் மை வைக்கலாம்

* நோட்டுகளை மாற்றுவதற்கு முன், அந்நபரின் கை விரலில் மை வைக்க வேண்டும்.
இல்லையேல், மையை அழித்துவிட வாய்ப்பு உண்டு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


காத்திருக்காத வங்கிகள்!


மத்திய அரசு அறிவித்தபடி, வங்கி கிளைகளுக்கு, அடையாள மை வழங்குவது குறித்து, நேற்று முன்தினம் இரவு வரை, அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. அதனால், பஞ்சாப் நேஷனல் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி போன்றவை, கடைகளில் இருந்து அழியாத மையை வாங்கின; வாடிக்கை யாளர்கள் கைகளில், நேற்று வைக்க துவங்கின.

ரிசர்வ் வங்கி, வலது கையில் வைக்க வேண்டும் என கூறியிருந்தும், இடது ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியும்,பழைய நோட்டுகளை மாற்றித் தருவதால், அங்கு நோட்டு களை மாற்றியவர்கள் விரலில், அடையாள மை வைக்கப்பட்டது.

மை இல்லை!


பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தேசிய வங்கிகளுக்கு, நேற்று அழியாத மை வந்து சேரவில்லை. அதை எங்கு வாங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், அந்த வங்கிகள்வாங்க வில்லை. அதனால், அந்த வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றியவர்களுக்கு, நேற்று மை வைக்கவில்லை.

மைசூரில் தீவிரம்!


அடையாள மை தயாரிக்கும் பணி, கர்நாடக மாநிலம், மைசூரு பெயின்ட் நிறுவனத்தில் தீவிரமடைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அடையாள மை, மத்திய அரசின் தேசிய பரி சோதனை அபிவிருத்தி கழகம் மூலமாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப் படுகிறது;

Advertisement

தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப் படுகிறது.

சலவை மை!


மைசூரில் இருந்து, அழியாத மை வருவதற்கு தாமதம் ஆகும் என்பதால்,சலவை கூடங்க ளில், வெள்ளை வேட்டிக்கு வைக்கப்படும் மையை பயன்படுத்தும்படி, பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு, தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று, தேர்தல் துறை, வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அப்போது, தேர் தல் துறையிடமோ அல்லது மாநகராட்சி யிட மோ கைவசம் உள்ள மையை, வங்கி களுக்கு தருவது என, முடிவு செய்யப்பட்டது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veera - jamnagar,இந்தியா
17-நவ-201616:54:18 IST Report Abuse

veeraபொது மக்களை அவதிக்குள்ளாகி,மல்லய்யா போன்றோரின் பெரும் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்ய தானே இவர்களை நாம் தேர்தெடுத்தோம் ...விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள், படித்த மாணவர்கள் வேலையில்லாமல் அவலப்படுகிறார்கள் ... என்ன கொடும சரவணா ...

Rate this:
Roopa Malikasd - Trichy,இந்தியா
17-நவ-201614:28:15 IST Report Abuse

Roopa Malikasdஇது என்ன சர்வாதிகார போக்கு. நான் கஷ்டபட்டு சேமித்து வைத்த பணத்தை மாற்றுவதற்கு எதற்காக இன்னொருத்தன் எனக்கு மை வைக்க வேண்டும். நான் என்ன முறை தவறியா இந்த பணத்தை சம்பாதித்தேன். பிறகு எதற்காக என் போன்ற நேர்மையானவர்களுக்கு இந்த கதி.

Rate this:
17-நவ-201621:14:55 IST Report Abuse

G.Ravindhiranஉன்னோட காச மாத்தினா பரவாஇல்ல அடுத்தவன் காசுக்கு நீ ஏன்ப்பா கியூவுல நின்னு மாத்தி கொடுக்கறே, அவன் கொடுக்கற கமிசனுக்கு நாக்க தொங்கப் போடறத நிறுத்து ...

Rate this:
sardar papparayudu - nasik,இந்தியா
17-நவ-201612:24:08 IST Report Abuse

sardar papparayuduகையிக்கு மை அழகு , மையுக்கு ஒரு முறை பணம் தருவது அழகு . நேற்று பணம் மாற்றியவன் இன்று பாங்க் வராமல் இருப்பது அழகு . atm இல் நிற்பவன் ஒரு முறை கார்ட் தேய்ப்பது அழகு .மறுபடி மறுபடி பணம் மாற்றுபவன் பாங்கில் அக்கவுண்ட் ஓபன் பண்ணுவது மிக அழகு . . தமிழ் சினிமா ஒரு சார்பு கட்சி டைமண்ட் கவிஞர் பாட்டுக்கு எசப்பாட்டு இது . உடனே திரு .காசிமணி , திரு . நல்லவன் , திரு .சுகவனம் , திரு . தமிழ் வேல் திரு இடவை கண்ணன் , திரு விருமாண்டி , திரு தேச நேசன் , திரு அக்னி சிவா ஜி இவர்கள் எல்லாம் நீதானா அந்த குயில் என்று என்னை பார்த்து ........மிருதங்க சக்கரவர்த்தி சிவாஜி பைனல் போட்டி முகபாவனையில் ........ மாதிரி பாட ஆரம்பித்து விடாதீர்கள் .

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X