புதுடில்லி:'புழக்கத்தில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவு, முன் கூட்டியே கசியவில்லை;நாட்டு நலன் கருதியே, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது' என, ராஜ்ய சபாவில், மத்திய அரசு தெளிவாக தெரிவித்தது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு களை தடுக்கவும், புழக்கத்தில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகள், விமர்சனங்களுக்கு பதில் அளித்து, மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:
எதிர்க்கட்சிகள் கூறுவது போல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிப்பது குறித்த தகவல் முன்கூட்டியே வெளியாக வில்லை; எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை. நாட்டின் நலன் கருதியே, இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது. இதில்,எந்த அரசியலும் கிடையாது. சில சிக்கல் கள், பிரச்னைகளை சந்தித்த போதும், பிரதமர் மோடி தலைமை யிலான அரசின் முடிவுக்கு, மக்கள் ஆதரவு தருகின்றனர்.
அனைத்து எதிர்க்கட்சிகளும், அது போன்ற ஆதரவை, ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
மக்களின் இந்த பேராதரவை பொறுக்க முடியாத வர்கள் தான், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அரசின் இந்த அறிவிப்பால்,நேர்மையானவர்கள் கவுரவிக்கப்பட்டு உள்ளனர்; நேர்மையற்றவர் கள் இழப்பை சந்தித்து உள்ளனர்.
அரசின் இந்த அறிவிப்பு, லஞ்சம், ஊழல், கறுப்பு பணம், பயங்கரவாதத்துக்கு எதிரான
போர்; இதனால்,நேர்மையானவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த
அறிவிப்பால், விலைவாசி குறைந் துள்ளது;வரி விகிதங்கள்குறையும் வாய்ப்பு
உள்ளது. இது போல, பல பலன்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சரத் யாதவ் கலகல
விவாதத்தின் போது, ஐக்கிய ஜனதா தளத் தலை வர் சரத் யாதவ்பேசியதாவது:சில நோட்டுகள் செல்லாது என்பது குறித்த முடிவு, ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்கிறீர்கள்.
நிச்சயம், நிதி யமைச்சர் அருண் ஜெட்லிக்கு அது தெரிந்திருக் காது.தெரிந்திருந்தால், முன்ன தாகவே எனக்கு ஒரு, குறிப்பு கொடுத்திருப்பார். இவ்வாறு சரத் யாதவ் கூறினார். அப்போது, சபை யில் இருந்த அருண் ஜெட்லி உட்பட, அனைவரிட மும் சிரிப் பொலி எழுந்தது.
மோடிக்கு எதிரி யார்?
ராஜ்யசபாவில், நேற்று நடந்த விவாதத்தின் போது, காங்கிரசின் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆனந்த் சர்மா பேசியதாவது:சமீபத்தில், கோவா வில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய,பிரதமர் நரேந்திர மோடி, சிலர் தன்னைக் கொல்ல சதி செய்துள்ள தாக கூறியுள்ளார்; இது, மிகவும் முக்கியமான பிரச்னை.
நாட்டின் பிரதமரை கொல்வதற்கு முயற்சிப்பது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே தகவல் இருந்தால், உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புழக்கத்தில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பாகவே, அது குறித்து, பா.ஜ.,வுக்கும், அதன் சில நண்பர்களுக்கும் ரகசிய மாக தெரிவிக்கப்பட்டு உள்ளது; அந்த பணம், தங்க மாகவும், வெளிநாட்டுகரன்சியாகவும் மாற்றப்பட்டு உள்ளது.
இந்தாண்டு ஏப்ரலில் இருந்து,
இதுவரை, அதிகள வில் தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட
வெளிநாட்டு கரன்சி வாங்கியவர்களின் பெயர்களை, மத்திய அரசு வெளியிட
வேண்டும். இது குறித்து, முழுமை யான விசாரணை நடத்த வேண்டும்.
விவாதத்தின் போது பேசிய பல்வேறுகட்சித் தலைவர்களும், இதை வலியுறுத்தினர். இவ்வாறு அவர் பேசினார்.
மோடி வர வேண்டும்
இதனிடையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ''இந்த பிரச்னை குறித்து பதிலளிக்க, பிரதமர் மோடி சபைக்கு வர வேண்டும்,'' என, ஆவேசமாக கூறினார். இதற்கு, காங்கிரசின் ராஜ்யசபா தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட் டோர் ஆதரவு தெரிவித்தனர்.ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ், மார்க்.கம்யூ., கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர், இந்த விவகாரம் குறித்து பேசினர்.
காசே தான் கடவுளடா...!
ராஜ்யசபாவில், அ.தி.மு.க., - எம்.பி., நவநீத கிருஷ்ணன் பேசியதாவது:நவீன உலகில், காசு தான் கடவுள்; காசு இல்லாமல் வாழவே முடியாது. 'அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' என, திருக்குறளே கூறுகிறது.
இதற்கான விளக்கத்தை, மூத்த சகோதரர் மைத்ரேயன் எழுதி தந்தார்; இதில், திருத்தம் இருந்தால், இல.கணேசன், சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் திருத்தலாம். என்னை விட தமிழ் தெரிந்த, நிர்மலா சீதாராமனும் திருத்தலாம்.
மத்திய அரசின் நடவடிக்கையால், சேமிப்பு பழக் கத்திற்கு ஆபத்து வந்துள்ளது.முன்னறிவிப் பின்றி எடுக்கப்பட்ட அரசின் முடிவு காரணமாக, ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (56)
Reply
Reply
Reply