அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இது எடைத்தேர்தல்:ஸ்டாலின் பிரசாரம்

தஞ்சாவூர்:''நான்கு தொகுதிகளிலும் நடப்பது, இடைத்தேர்தல் அல்ல; ஆட்சியை எடை போடும் எடைத்தேர்தல்,'' என, தஞ்சையில் நேற்று தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

 இது எடைத்தேர்தல்:ஸ்டாலின் பிரசாரம்

தி.மு.க., வேட்பாளர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து, அவர் பேசியதாவது: தஞ்சாவூரில், கடந்த பொது தேர்தலில், வேட் பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக, தி.மு.க., தொண்டர்கள் யாரும் சிக்கவில்லை. ஆளுங்கட்சியினர் தான் முழுமையாக, ஆறு கோடி ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்த தற்கான ஆதாரங்களை, தேர்தல் ஆணையம் தெளிவாக வெளியிட்டுள்ளது.

இதேபோல, அரவக்குறிச்சியிலும் அமைச்சர் கள், பினாமிகளிடம் இருந்து பணம் மற்றும் அவற்றை எண்ணும் இயந்திரங்கள் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தான், இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நிற்க காரணம்.

தற்போது, டெல்டா விவசாயிகள் பல கொடுமை களில் சிக்கி தவித்து வருகின்றனர். இதன் விளை வாக, ஒன்பது விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், இதுவரை அரசு, அந்த குடும்பங்களுக்கு ஆறுதலும், நிவாரணமும் வழங்கவில்லை.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரிநெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதி களிலும், தற்போது நடப்பது இடைதேர்தல் அல்ல; ஆட்சியை எடை போடும் எடைத்தேர்தலாக நடக்கிறது.மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தஞ்சையில் பிரசாரம்


தஞ்சாவூர்:-தஞ்சாவூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், நமக்கு நாமே பாணியில், காலையில் நடைபயிற்சியின் போது, மக்களை சந்தித்து பேசினார்.

மூன்று தொகுதிகளிலும், தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், தீவிரமான ஓட்டு சேகரிப்பில் ஈடு பட்டு வந்தார். வழக்கமான வேன் பிரசாரம் இல்லாமல், இடை இடையே, முக்கிய இடங்களில் பேசுவது என, இல்லாமல், டீ குடிப்பது, பொது மக்களிடம் குறைகளை கேட்பது,'செல்பி' எடுப்பது என, 'நமக்கு நாமே' ஸ்டைலில் மக்கள் சந்திப்பையும் நிகழ்த்தி வருகிறார்.

அப்படியாக, நேற்று, தஞ்சாவூர் வேட்பாளர் அஞ்சு கம் பூபதிக்காக பிரசாரம் செய்ய வந்த ஸ்டாலின், அன்னை சத்யா ஸ்டேடியத்தில், காலை, 6:00 மணிக்கு கட்சியினருடன், 'வாக் கிங்' சென்றார்.

Advertisement

அப்போது, வாக்கிங் வந்தவர்களுடன் பேசியபடி, கைகளை குலுக்கினார்.

அடுத்ததாக பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பழமை வாய்ந்த உணவு விடுதியில், தன்சகாக்களுடன் காபி குடித்தார். தொடர்ந்து, ஸ்டாலின் வந்த தகவலை அறிந்து கூட்டம் கூட, அவர்களிடம் கை குலுக்கி, செல்பிக்கு போஸ் கொடுத்தார்.

இறுதியில் அஞ்சுகம்பூபதிக்கு அனைவரும், ஓட்டளிக்க வேண்டுமென கேட்டு, உழவர் சந்தை, காமராஜ் மார்க்கெட்டிலும் காரை நிறுத்தி இறங்கி, மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

தற்போதும், ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் போல, அதே பாணியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது, கட்சியினர் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
18-நவ-201602:00:04 IST Report Abuse

Panneerselvam Chinnasamyஅரவக்குறிச்சி தி மு க வின் கோட்டை.தஞ்சாவூர் காவிரி பிரச்சினையால் தி மு க விற்கு கை கொடுக்கும். திருப்பரங்குன்றம் சென்ற முறை அ தி மு க வெற்றி பெற்ற தொகுதி. இப்போது தி மு க வெற்றி பெற்றால் உள்ள படியே மக்கள் மனதில் அ தி மு க MEETHU நம்பிக்கை இழந்து வருவதை அது உறுதி படுத்தி விடும். எல்லாம் இன்னும் ஐந்து நாளில் தெரிந்துவிடும்.

Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
17-நவ-201620:27:10 IST Report Abuse

Dr.C.S.Rangarajanஎடை தேர்தல் என்று குறிப்பிட்டது தங்கள் கட்சி தேர்தலில் எந்த அளவு செலவு செய்தால், வெற்றிபெறமுடியும் என்று எடைபார்த்து செலவு செய்ததை/ செய்யபோவதைத்தான் குறிப்பிட்டது போல்/ ஒரு கணிப்பு போல் தோன்றியது. சில பல கருத்துக்கள் அவர் தெரிவிக்கும்போது 'மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுமுனைவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார் என நினைக்க வைக்கிறார்.

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
18-நவ-201600:23:02 IST Report Abuse

ezhumalaiyaanதந்தை பாணி ...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
17-நவ-201619:58:35 IST Report Abuse

K.Sugavanamபூ னு இவரை ஊதி தள்ள குடும்பத்துக்குள்ளயே சதியாமே..அதுக்கு நைனாவும் நமட்டு சிரிப்போட பாக்காராமே.. இங்க எடையை பத்தி பேசிக்கிட்டு..இந்த மூணுலயும் பணாலானா அஞ்சா ஆட்சிக்கு வந்துடுவாராமே.. அவரு ஹெவி வெயிட்டு பார்ட்டி இல்லா..

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
18-நவ-201600:26:00 IST Report Abuse

ezhumalaiyaanஒரு வேளை மூன்றிலும் ஜெயித்தால்கூட என்ன?அந்தந்த தொகுதி பிரச்சினை,மற்றும் நிற்கக்கூடிய வேட்பாளரின் திறமை,மற்றும் குண நலன் பொருத்தும் , கடைசி நேரத்தில் மக்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அவர்களுக்குத்தான் ஒட்டு போடுவார்கள். ...

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X