பிரகதிக்கு பிடிச்சது 'ஒசக்கா...ஒசக்கா...'

Updated : நவ 30, 2016 | Added : நவ 18, 2016 | |
Advertisement
'தேனி காத்தோட தேன தெளிச்சாளே' பாட்டால் தேளா மாறி கேட்போர் நெஞ்சை கொத்தியவர்; தேங்காய் நாறாக மனதை உறித்தவர்; இவர் பாடினால் இதயம்கூட காற்றாடியாக மாறி வானத்தில் பறக்கும், 'தெற்கா... மேற்கா... கிழக்கா... வடக்கா' எல்லா திசையிலும் இவர் பாட்டு றெக்கை கட்டி பறக்கும்... இப்படி இளம் வயதிலே மேடை ஏறி, சூப்பர் சிங்கர் மூலம் எல்லோர் மனதிலும் எளிதாக இடம் பிடித்த நம் வீட்டு பிள்ளை
பிரகதிக்கு பிடிச்சது 'ஒசக்கா...ஒசக்கா...'

'தேனி காத்தோட தேன தெளிச்சாளே' பாட்டால் தேளா மாறி கேட்போர் நெஞ்சை கொத்தியவர்; தேங்காய் நாறாக மனதை உறித்தவர்; இவர் பாடினால் இதயம்கூட காற்றாடியாக மாறி வானத்தில் பறக்கும், 'தெற்கா... மேற்கா... கிழக்கா... வடக்கா' எல்லா திசையிலும் இவர் பாட்டு றெக்கை கட்டி பறக்கும்... இப்படி இளம் வயதிலே மேடை ஏறி, சூப்பர் சிங்கர் மூலம் எல்லோர் மனதிலும் எளிதாக இடம் பிடித்த நம் வீட்டு பிள்ளை பிரகதி... தினமலர் வாசகர்களுக்காக பேசியது. இல்லை பாடியது..

* பிரகதி பற்றி...
பிறந்தது சிங்கப்பூர், வளர்ந்தது யு.எஸ்.ஏ.,ல படிச்சது பிளஸ்-2, சீக்கிரமே காலேஜ்ல சேரப்போறேன்.

* நாம பாடகர் ஆவோம்னு நினைச்சது உண்டா ?
சத்தியமா இல்லை. பாடகர் ஆனதை என்னாலயே நம்ப முடியலங்க.

* நீங்க பாடின பாடல்கள்
'பனித்துளி, பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும்' படங்கள்ல பாடியிருக்கேன். இப்போ 'ரம்' படத்தில் பாடியிருக்கேன். ரிலீஸாக போகுது.

* நீங்க பாடினதுல உங்களுக்கு பிடித்தது
வணக்கம் சென்னை படத்தில் வரும் 'ஒசக்கா... ஒசக்கா...' பாடல் தான், ரொம்ப பிடிக்கும்.

* உங்களுக்கு பிடித்த பாடகர்கள்
சங்கர் மகாதேவன், ஹரிஹரன் சார், அவங்க பாடின பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

* பிடித்தது வெளிநாடா? தமிழ்நாடா?..
வெளிநாட்டுல பொறந்திருந்தாலும், தமிழ்நாடு தான் பிடிக்கும். அதுலயும் சென்னை ரொம்பவே பிடிக்கும். இங்கதாங்க எனக்கு நிறைய பேன்ஸ்சும் இருக்காங்க.

* தமிழ்நாட்டில் பிடித்த உணவு...
எனக்கு ரொம்ப பிடிச்சது 'ரசம்' தாங்க. ரசம் இருந்தா சாப்பிட்டுட்டே இருப்பேன்.

* பாட்டு, படிப்பு எப்படி டைம்
படிப்பு, பாட்டுன்னு இருக்கும் போது கஷ்டமா இருந்துச்சு. இப்போ பழகிடுச்சு.

* பிரகதி வீட்ல எப்டி
சொல்றமாதிரி இல்லைங்க. பேசிக்கிட்டே இருப்பேன். கொஞ்சம் சுட்டி. இல்ல இன்னும் கொஞ்சம்..

* கடவுள் உங்க முன்னாடி வந்தா என்ன கேட்பீங்க
எப்பவுமே சந்தோசமா இருக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும்னு கேட்பேன். இது தவிர வேறென்னங்க வேணும்.

* ப்ரீ டைம்ல பிரகதி எப்படி...?
வெளில அவுட்டிங் போறது ரெம்ப பிடிக்கும். பிரெண்ஸோட ஜாலியா அப்டியே ரவுண்ட்ஸ் போவோம்.

* பாடகருக்கு முன்னால பிரகதி
டேபிள் டென்னிஸ்ல ஆர்வம் இருந்துச்சு. ப்ரீ டைம்ல விளையாடுவேன். இப்போ அதுக்கு டைம் இல்ல.

* பிரகதியோட ஆசை
ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல பாடணும். அந்த நாளுக்காக 'ஐ எம் வெயிட்டிங்...'

இவரை... twitter.com//pragathiguru.. என்ற முகவரியில் வாழ்த்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X