புதுடில்லி: 'கொலிஜியம்' தேர்வு செய்த ஐகோர்ட் நீதிபதிகள் பரிந்துரை பட்டியலை,சுப்ரீம் கோர்ட், மீண்டும், மத்திய அரசின் பரிசீலனைக் காக திருப்பி அனுப்பியது.
பல்வேறு ஐகோர்ட்டுகளில், நீதிபதிகள் பணி யிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை நிரப்புவதற் காக, 77 நீதிபதிகளின் பெயர்களை, சுப்ரீம் கோர்ட்டின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய தேர்வுக் குழுவான, 'கொலிஜியம்' மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
இதில், 34 பேரை ஏற்ற மத்திய அரசு, 43 இடங் களுக்கு புதிய நபர்களை பரிந்துரைக்கும் படி, சுப்ரீம் கோர்ட்டுக்கு, அந்த பட்டியலை
திருப்பி அனுப்பியது.இந்நிலையில், ஐகோர்ட் நீதிபதி கள் நியமனம் தொடர்பான, பொதுநல வழக்கு, நேற்று, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக் குர் தலைமையிலான அமர்வு முன்விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
பல்வேறு ஐகோர்ட்டுகளில் காலியாகவுள்ள இடங் களுக்கு, நீதிபதிகளை நியமிப்பதில், மத்திய அரசு தேவையற்ற தாமதம் செய்கிறது; இதை ஏற்க முடி யாது.
சுப்ரீம் கோர்ட், கொலிஜியம் அனுப்பிய, 77 நீதிபதி களின் பட்டியலில், 43 இடங்களுக்கு, புதிய நபர்களை பரிந்துரைக்கும்படி கூறுவது பொருத்த மானதல்ல; எனவே, அந்த பட்டியலை, மீண்டும் மத்திய அரசின் பரிசீலனைக்கே திருப்பிஅனுப்பு கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
ஓய்வு வயது உயர்த்தப்படாது :
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய சட்டத் துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி, எழுத்து மூலம் தெரிவித்த தாவது: தற்போதைய
நடைமுறைகளின் படி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 65 வயதிலும், ஐகோர்ட் நீதிபதிகள், 62 வயதிலும் ஓய்வு பெறு கின்றனர்; அவர்களின் ஓய்வு வயதை உயர்த் தும் எண்ணம், அரசுக்கு இல்லை.
அதே போல், ஐகோர்ட் நீதிபதிகள் பணி நிய மனத்திற்கான குறைந்தபட்ச வயது வரம்பு, 45 என்பதை,42 ஆக குறைக்கும் எண்ணமும் இல்லை.
ஏழாவது சம்பளக்குழு பரிந்துரையின் படி, நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு அளிக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (11)
Reply
Reply
Reply