புதுடில்லி:'கறுப்புப் பணத்தை மாற்ற உதவு பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்புப் பணத்தை, தங்கள் வங்கி கணக்கில் செலுத்த அனுமதிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய்
நோட்டுகள் செல்லாதென, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டு களை வங்கிகளில் மாற்றுவதற்கு, டிசம்பர், 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கறுப்புப் பணம் வைத்துள்ள நபர்கள், இடைத்தரகர்கள் மூலம், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, வங்கிகளில் மாற்றத் ,துவங்கினர்.
இதையடுத்து, வங்கிகளில் பணம் மாற்றும்
நபர்களுக்கு, மை வைக்கும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தியது.
ஆனாலும் சாதாரண மக்களின் வங்கி கணக்கில், கறுப்புப் பணத்தை, 'டிபாசிட்' செய்து,
வெள்ளை யாக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இதனால், கறுப்புப் பணத்தை ஒழிக்கும்மத்திய அரசின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், வங்கி கணக்குகள் தொடர் பாக மத்திய நிதியமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்கி கணக்கு வைத்திருப்போர், தங்கள் கணக்கில் வேறொருவரின் கறுப்புப் பணத்தை செலுத்த அனுமதிப்பது சட்டவிரோத செயல்; அவர்கள் நடவடிக்கைக்கு ஆளாவர்.
குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகள், 'ஜன் தன்' வங்கி கணக்குகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்வது தெரிந்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, வருமான வரித்துறை விசாரணை நடத்தும்.
தவறு செய்தோருக்கு, கடுமையான அபராத மும் விதிக்கப்படும். தவறான வழிகளில்
பணத்தை மாற்ற முயற்சிக்கும் நபர்கள் குறித்து, வரு மான வரித்துறைக்கு, மக்கள் தகவல் தர வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கறுப்புப் பணத்தை மாற்ற முயற்சி நடக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்த, மத்திய அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கண்காணிப்பு வளையம்
அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு, 'ஜன் தன்' திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலம், 23 கோடி, ஜன் தன் வங்கி கணக்குகள் துவக்கப் பட்டன. இவற்றில், பெரும்பாலானவை செயல் பாட்டில் இல்லாமல் இருந்தன.
பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்ட பின், ஜன் தன் வங்கி கணக்கில் ஏராளமான பணம், 'டிபாசிட்' செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஜன் தன் வங்கி கணக்குகள், வருமான வரித்துறையின் கண் காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப் படுகின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (77)
Reply
Reply
Reply