புதுடில்லி: 'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றும் விவகாரத்தில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம், இந்த மாத இறுதிக்குள் சீராகும்' என, மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
'பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வழங்க, மத்திய அரசு, சரியான முறையில் திட்டமிட வில்லை' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதையடுத்து, விரைவாக புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கவும், மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்தவும், மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பழைய ரூபாய்
நோட்டு களை மாற்றும் விஷயத்தில், மக்களுக்கு ஏற் பட்டுள்ள சிரமத்தை, மத்திய
அரசு கவனத்தில் வைத்துள்ளது. அதே சமயம், கறுப்புப் பணத்தை மாற்றுவோர்,
இந்த சூழ்நிலையை பயன்படுத்த, அரசுஅனுமதிக்காது.
புதிய, 500 ரூபாய் நோட்டை முதலில் புழக்கத்தில் விட்டால், கறுப்புப் பணம் மாற்றும் நபர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்; எனவே தான், 2,000 ரூபாய் நோட்டுகள் முதலில் அறிமுகம் செய்யப் பட்டன. தற்போது, புதிய, 500 ரூபாய் நோட்டுகளை, நாடு முழுவதும் அனுப்பி வைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஒருசில நாட்களில், நிலைமை சீராக துவங்கும்; இந்த மாத இறுதிக்குள், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் அளவிற்கு,நிலைமை சீரடையும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
படிப்படியாக நிறுத்தம்? :
மத்திய
அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பழைய, 500-- 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்று வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு, 4,500
ரூபாயாக
அறிவிக்கப்பட்டி ருந்தது. நேற்று முன்தினம் இந்த உச்சவரம்பு, 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.
இன்னும் சில நாட்களில், இந்த உச்சவரம்பு, படிப்படியாக குறைக்கப்பட்டு, பின் முழுவதும் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கு பின், 500 -- 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப் போர், வங்கிகளில் அவற்றை மாற்ற முடியாது; தங்கள் வங்கி கணக்கில் மட்டுமே, 'டிபாசிட்' செய்ய முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (20)
Reply
Reply
Reply