சென்னை:''முதல்வர் ஜெயலலிதா குணமடை ந்து விட்டார். அவர், வழக்கமான பணிகளில் ஈடுபட, ஏழு வாரங்கள் ஆகலாம்,'' என, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர், பிரதாப் ரெட்டி கூறினார்.
அப்பல்லோ மருத்துவமனையின், 'பக்கவாத சிகிச்சை மைய துவக்க விழா' சென்னையில்,
நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர், பிரதாப் ரெட்டி
கூறியதாவது:
அப்பல்லோவின் மிகச்சிறந்த டாக்டர்கள், முதல்வர் ஜெயலலிதாவை, 24 மணி நேரமும்
கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது,
அவர் முழுமையாக குணமடைந்து விட் டார்.அவருக்கு, செயற்கை சுவாசமும்
அளிக்கப்படு கிறது. தினமும், 15 முதல், 20 நிமிடங்களுக்கு, செய ற்கை
சுவாசம் அளிப்பது, நுரையீரலின் வழக்கமான செயல்பாட்டுக்கு அவசியம்.
தொடர் சிகிச்சை காரணமாக, அவருக்கு எதிர்ப்பு
சக்தி குறைவாக உள்ளதால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவர், தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்.டாக்டர்கள் ஆலோசனை படி, சத்தான புரத உணவை உட்கொள்கிறார்.
அவரின் மனம்,
உடல் முழு ஆரோக்கியத்துடன் உள்ளது. நான், அவரை அடிக்கடி சந்திப்பதில்லை.
கடந்த முறை சந்தித்த போது, என்னுடன் நன்றாக உரையாடினார்.
அவரிடம், நீங்கள் வேலை செய்யுங்கள் என்றோ, வேலை செய்ய வேண்டாம் என்றோ, என்னால் கூற முடியாது. அவர் விரும்பும் போது வீடு திரும்பலாம்.
அவரின் அனைத்து உறுப்புகளும் நல்ல செயல்
பாட்டிற்கு வந்து, வழக்கமான பணிகளில் ஈடு பட, இன்னும் ஆறு முதல், ஏழு வாரங்கள் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (57)
Reply
Reply
Reply