ஜாகிர் நாயக் மீதுஎன்.ஐ.ஏ., வழக்கு

Added : நவ 19, 2016 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு ஏஜென்சி, நேற்று சோதனை நடத்தியதுடன், அவர் மீது வழக்கும் பதிவு செய்துஉள்ளது. வங்கதேசத்தில், சில மாதங்களுக்கு முன் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 20 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மும்பையைச் சேர்ந்த முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின்
ஜாகிர் நாயக் மீதுஎன்.ஐ.ஏ., வழக்கு

புதுடில்லி: முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு ஏஜென்சி, நேற்று சோதனை நடத்தியதுடன், அவர் மீது வழக்கும் பதிவு செய்துஉள்ளது. வங்கதேசத்தில், சில மாதங்களுக்கு முன் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 20 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மும்பையைச் சேர்ந்த முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சில் ஈர்க்கப்பட்டதாக கூறினர். இதனையடுத்து ஜாகிர் நாயக் குறித்த சர்ச்சை எழுந்தது. அவரது, 'டிவி' மற்றும் பிரசாரங்களை வங்கதேச அரசு தடை செய்து உத்தரவிட்டது. அவரது நடவடிக்கை குறித்து மத்திய அரசும் விசாரணை நடத்தியது; கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, வெளிநாடு சென்ற ஜாகிர் நாயக், இந்தியா திரும்பவில்லை. அவரின், 'இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன்' என்ற தொண்டு நிறுவனத்திற்கு, சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து, நிதி வருவது தெரியவந்தது; பயங்கரவாதத்திற்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்ததும் உறுதியானது. இதையடுத்து, ஜாகிர் நாயக்கின் அமைப்பிற்கு, மத்திய அரசு, ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது. இந்நிலையில், மும்பையில், ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான, 10 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிரடி சோதனை நடத்தியது. இதைத்தொடர்ந்து, ஜாகிர் நாயக் மற்றும் சிலர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
20-நவ-201615:04:03 IST Report Abuse
Mohammed Abdul Kadar இது பிஜேபி க்கு புதிதல்ல ,, பிரச்சி , தொகாடியா முஸ்லிம்களுக்கு எதிராக பேசினால் இந்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ????
Rate this:
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
20-நவ-201619:39:48 IST Report Abuse
fire agniputhranதேவை இல்லாமல் பேசுவது யாராக இருந்தாலும் நடவடிக்கை தேவை தான்.....இஸ்லாமியர்களை நாட்டிற்கு எதிராக தூண்டி வரும் செயல் செய்து வருகிறார் என்பது இவரை பற்றிய தகவல்கள் .....வெப் சைட் ல் இவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்......வந்தே மாதரம் சொல்ல மாட்டேன்........ ஜெய் ஹிந்த் என்று முழங்க மாட்டேன் என்று சொல்லும் கும்பலை எவ்வளவு நாட்கள் தான் அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும் சகித்து கொள்ளும்......இந்தியாவை பற்றி மட்டமாக பேச யார் கொடுத்தது உங்களுக்கு சுதந்திரம்.... பேச்சுரிமை வேண்டியது தான்.....இதே போல் சிங்கப்பூர் ,மலேசியா, பிரான்ஸ் , மற்ற மேலை நாடுகளில் பேச முடியுமா???? தேவை வீண் விவாதம்.........உங்கள் தாயை பழிப்பவர்களை உங்களால் சகித்து கொள்ள முடியுமா???? ஜாஹிர் போன்ற தீவீரவாதத்தை ஆதரிக்கும் கும்பலை எப்படி அனுமதிக்க முடியும்.....தீவீர வாதம் .....அது ஓவாசியாக இருந்தாலும் சரி....தொகாடியாக இருந்தாலும் சரி அனுமதிக்க முடியாது.....நம்மிடம் உள்ள சகிப்பு தன்மை மென்மேலும் வளர வேண்டுமென்றால் ....இந்த மத அடிப்படையில் பிரச்சாரம் செய்து நாட்டை துண்டாட நினைக்கும் நபர்களை தயவு செய்து வளர்த்து விடாதீர்கள்...... துபையை பார்.....எகிப்து ஐ பார் ....சிரியாவை பார் என்று முழங்கும் கும்பல்களிடம் விலை போய் விடாதீர்கள். ஆழ்ந்த சிந்தையின் மூலம் ....அறிவுக்கண்ணை திறந்து பார்த்து முடிவெடுப்பது நல்லது.....எதிர்காலம் நல்ல முறையில் அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்........
Rate this:
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
20-நவ-201615:02:15 IST Report Abuse
Mohammed Abdul Kadar தாராளமாக ஆராயலாம் ... எதோ அரசு பழிவாங்குகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X