கடன் தள்ளுபடி| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

கடன் தள்ளுபடி

Added : நவ 20, 2016
Advertisement
 கடன் தள்ளுபடி

வங்கிகளில் திரும்பச் செலுத்தப்படாத கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்ததாக அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அது ஏன்? அப்படிச் செய்வதால், அந்த வங்கிகள் நட்டத்திற்குள்ளாகாதா? அந்த வங்கிகளின் இருப்பு குறைவதால் பங்கு மார்க்கெட்டில் அவற்றின் மதிப்பு குறையாதா? வங்கிகளில் தமது சிறு சிறு சேமிப்புகளைச் சேர்த்து வைக்கும் மத்திய வர்க்கத்தின் பணம்தானே பெரு முதலாளிகளுக்கு கடனாக தரப்படுகிறது? இந்த நிலையில், அக்கடன் தள்ளுபடி ஆவது என்பது, மத்திய வர்க்கத்தின் முதலீட்டை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது போன்றதாகாதா? ஏற்கனவே வங்கியில் பெற்ற கடனை அடைக்காதவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வருகிறது. பிறகு அதே நபருக்கு இத்தனை கோடி ரூபாய் கடன் அளித்திருக்கிறது என மறுபடி செய்தி வருகிறது. ஏற்கனவே கட்டிய கடனை அடைக்காத ஒருவருக்கு வங்கிகள் ஏன் மீண்டும் கடன் தருகின்றன? அப்படியான ஒன்றைச் செய்யும் வங்கிகளிடம் இனி மக்கள் எப்படி நம்பி தமது பணத்தைச் சேமிப்பார்கள்?” -போன்றவை பொது சனத்தின் கேள்விகள்.


வங்கிக்கடன்:

எளிய மொழியில் சொல்வதெனில், நீங்கள் தான் வங்கி. உங்களிடம் பலரும் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். அந்த பணத்திற்கு நீங்கள்(வங்கி) வட்டி வழங்குகிறீர்கள். அந்த வட்டி எங்கிருந்து வரும்? அந்தப் பணத்தை வங்கி வேறொரு நபருக்குக் கடனாக வழங்குகிறது. அந்த நபர், வங்கியில் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும். அந்த வட்டி, பணத்தை டெபாசிட் செய்தாருக்கு வங்கி தர வேண்டிய வட்டியை விட அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான், வங்கி செலவு போக, லாபம் போக டெபாசிட் செய்தவருக்கு வட்டி தர முடியும். (இன்னும் வேறு சில கடப்பாடுகளும் உண்டு. இது கடன் தள்ளுபடி என்பதைப் பற்றி நாம் சுலபமாக அறிய இதைப் பற்றி மட்டும் பேசுவோம்)நான் வங்கியிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்குகிறேன். அந்த பணத்திற்கு மாதா மாதம் வட்டி கட்டி வருகிறேன். வங்கி வருடா வருடம் தனது கணக்கு புத்தகத்தில் நான் செலுத்தும் வட்டியை வரவுக் கணக்கில் வைப்பது போலவே, நான் திருப்பிச் செலுத்த வேண்டிய, கடன் தொகை ஆயிரத்தை தமது 'சொத்து' எனக் குறிப்பிடும். அதாவது வங்கிக்கு நான் கட்ட வேண்டிய தொகை ஆயிரம் ரூபாய், வங்கியின் 'வருங்கால சொத்து”. இந்த நிலையில் வங்கி எனக்கு அளித்த அந்த ஆயிரம் ரூபாய் என்பது வெறும் முடக்கப்பட்ட பணம் அல்ல. அந்தப் பணம் மாதா மாதம் வட்டி பெற்றுத் தருவதால் அதை ”செயல்படும் சொத்து' எனக்குறிப்பிடுவோம்.


செயல்படா சொத்து:

இந்நிலையில், நான் பணத்தைத் திருப்பித் தராமல் இருக்கிறேன். வங்கி ஒரு மாதம் பொறுத்திருக்கும். இரண்டாம் மாதமும் பொறுத்திருக்கும். நான் தர வேண்டிய வட்டிப்பணம் வங்கிக்குத் தரப்படாத்தால், எனக்கு வங்கி அளித்த கடன் தொகை ரூபாய் ஆயிரம், எந்த வட்டியையும் ஈனவில்லை. எனவே, அந்த ஆயிரம் ரூபாய் என்பது எதையும் பெற்றுத் தரவில்லை. செயல்படவில்லை. இப்போது எனக்குத் தந்த ஆயிரம் ரூபாய் “செயல்படாத சொத்து”.இப்போது நான் வட்டியும் கட்டவில்லை. அசலையும் திருப்பவில்லை. இப்போது வங்கிக்கு என் மீது சந்தேகம் வந்துவிடும். இந்தத் தொகை வரலாம், வராமலும் இருக்கலாம். அந்தத் தொகை வந்தால் மட்டுமே அந்தத் தொகை வங்கியின் ”சொத்து” எனக் குறிப்பிட்டதில் பொருள் இருக்கிறது. வராவிட்டால்?நான் தர வேண்டிய ஆயிரம் ரூபாய் 'திருப்பப்படும்” எனும் நம்பிக்கையிலேயே அதனை வங்கி “சொத்து” எனக் குறிப்பிட்டது. அது சொத்து எனும் கணிப்பிலேயே அதன் பங்குகள் விற்கப்படுகின்றன. வாங்கப்படுகின்றன.இந்நிலையில் நான் தராவிட்டால்? வங்கியின் நட்டத்தை 'நட்டம்' எனக் குறிப்பிடாவிட்டால், பங்குதாரர்களிடம் நட்டத்தை சொத்து எனச் சொன்னதாக ஆகிவிடும் அல்லவா?ஏனெனில், அதைச் சொத்து என நம்பித்தானே அவர்கள்அந்தவங்கியின்பங்குகளைவாங்கிஇருக்கிறார்கள்?முதல் மாதம் நான் வட்டி மட்டும் கட்டவில்லை எனில் அந்த ஆயிரம் ரூபாய் என்பது 'செயல்படாத சொத்து”. நான் வட்டியும் கட்டாமல், முதலும் தராமல் இருந்தால், அந்த சொத்திற்கு, 'வருங்கால சொத்து' எனும் அந்தஸ்து கொடுக்க இயலாது.அது செயல்படாத சொத்து, வராததொகை.சரி இந்த நட்டத்தால், என்னென்ன இடையூறுகள் ஏற்படக்கூடும்?முதலில் வங்கியில் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு லாப வட்டியோ, ஏன் அவர்களின் முதல் தொகையினையோ கூட அளிக்க முடியாது.இந்த வராத தொகையைச் சமாளிப்பதற்காக, பணம் டெபாசிட் செய்தவர்களுக்குத் தருவதாகச் சொன்ன வட்டியைக் குறைக்கலாம், அல்லது குறிப்பிட்ட சர்வீஸ்களுக்கு அதிக தொகை/வட்டி வீதத்தை நிர்ணயிக்கலாம்.அந்த வங்கியின் பங்குகளை வாங்கி இருந்த பங்குதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.மோசமான நபரிடம் தன் பணத்தை இன்வெஸ்ட் செய்தமையால், ஒரு நல்ல திட்டம் நட்ட திட்டமாகிறது.வங்கிகள் தமது கடன் தொகையை அறிவித்த வட்டியுடன் திரும்பப் பெற முடியாவிட்டால், அது ரொக்க சந்தையையும் பாதிக்கும்.


”சொத்து”க் கணக்கு, “பொறுப்பு”க் கணக்காக மாறுதல்:

சரி ஒரு மாதம், இரு மாதம் என வங்கி காத்திருக்கும். அப்படி எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? என்பதை நிர்ணயம் செய்யவியலாது. அதற்கு எந்த வரையைறையுன் அன்று இல்லாதிருந்த்து.அப்படி கட்டப்படாத தொகைக்காக இத்தனை மாதம் வங்கிகள் காத்திருக்கலாம். அதன் பின்னும் தொகை வராவிட்டால், அந்தத் தொகை “சொத்து”எனும் குறிப்பில் இருந்து, வங்கியின் “பொறுப்பு” எனும் குறிப்பில் இடப்படும். இந்தத் தகவல் நேர்மையாக பங்குதாரர்களுக்குச் சொல்லப்பட வேண்டும். ஏனெனில், சொத்து என இருந்தால் அந்த வங்கியின் பங்குகளுக்கு டிமாண்ட் இருக்கும். ஆனால் இப்போது அது வங்கியின் “பொறுப்பு”.”அப்படி செயல்படாத சொத்தை,”சொத்து” எனும் குறிப்பிலிருந்து நீக்கி, வங்கியின் ”பொறுப்பு” ஆக அந்த ஆயிரம் ரூபாய் கணக்கெழுதப்படுவதே ரைட்-ஆஃப். ரைட்-ஆஃப் என்பது தள்ளுபடி அல்ல. அதாவது கடன் என்பது கடன் இல்லாமல் ஆக்கப்பட்டது என்று அதற்கு அர்த்தமல்ல. அதாவது செயல்படும் சொத்துக்கள் என்பதிலிருந்து செயல்படாத சொத்து என்பதாக வங்கி இருப்பு நிலைக்குறிப்பில் மாற்றப்படுகிறது.அதுவரை சொத்தாக இருந்த்து, இனி பொறுப்பாக மாறி இருக்கிறது.இப்படிச் செய்வதே, கடன் தள்ளுபடி என சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.” இப்படியாகஒருவிளக்கத்தை, சமீபத்தில், அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 78 கோடி கடன்கள் பற்றி பேச்சு எழுகையில், write-off என்பது செயல்படும் சொத்துக்கள் என்பது செயல்படாத சொத்துக்களாக (Non-performing asset) மாற்றப்படுவதாக விளக்கம் சொல்லப்பட்ட்து..


கடன் வசூல்:

இந்த ஆயிரம் ரூபாய் பொறுப்பை வங்கி எப்படி சமாளிக்கும்? அல்லது சமாளிக்கக்கூடும்?எந்த நபர் தர வேண்டிய ஆயிரம் ரூபாய் அப்படி ரைட் ஆஃப் செய்ய வேண்டி வந்ததோ, அந்த நபர் மீது வழக்கிட்டு அந்தத் தொகையை நீதிமன்றம் மூலம், அவரது சொத்துக்களை முடக்குவதன் மூலம் திரும்பப்பெறலாம். (சமீபத்தில் மல்லையா அவர்களின் 9000 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்குவதாக அமலாக்கத்துறை அறிவிதத்தை நினைவில் கொள்ளலாம்.)இப்படிச் செய்வதால், அந்த வங்கியின் பங்குதாரர்களின் பங்கு மதிப்பு குறைவதில்லை.


மறுபடி கடன்? நடப்பது என்ன?

வங்கிக்குக் கட்டாத பணத்தை ரைட்-ஆஃப் செய்து விட்டபின், அதே பெருமுதலாளிக்கு, அந்தக் கடனை வசூலிக்கும் முன், மறுபடி வங்கிகள் கடன் தருவதாகச் செய்திகள் வருகின்றனவே? அது எப்படி சரி? - இது அடுத்த கேள்வி.வங்கியிடம் கடன் வாங்கி அதை திருப்பிக் கட்டாத பெரு முதலாளி, தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதாலேயேஅவருக்கு மறுபடி கடன் அளிக்கப்படுகிறது என்றும், பெரும்முதலாளிகளுக்குமறுபடிகடன்அளித்தால்மட்டுமேமுந்தையகடனைஅவர் அடைக்க இயலும்என்பதும்அவருக்குமீண்டும்மீண்டும்கடன்தரகாரணமாகசொல்லப்பட்டாலும், வேறுஅரசியல்காரணங்களும்இருக்ககூடும்.அதிலும், அவருக்குமுன்பைவிட அதிக தொகை கடனாகத் தரப்படுகிறது. 1000 ரூபாய் கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்டாமல் அந்தப் பணம் செயல்படா சொத்தான பின், அவருக்கே 2000 ரூபாய் கடன் மறுபடியும் தரப்படுகிறது. புதுக் கடனாகிய 2000-த்தில், ஏற்கனவே அவர் தர வேண்டிய 1000 ரூபாய் பிடித்துக் கொள்ளப்படுகிறது. அதாவது அவர் முந்தைய கடனை கட்டிவிட்டார் என்று பொருள். இப்போது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் கடன் தொகை புதிதாக “செயல்படும் சொத்து” எனும் கணக்கிற்குள் வந்துவிடுகிறது. ஏனெனில், புது கடன் வாங்கியதில் இருந்து, “செயல்படா சொத்தாக” அறிவிக்கப்படும் கால அவகாசத்திற்குள்தான் அவரது புது கடன் இருக்கிறது. இப்படியே பழைய கடனைக் கட்டாமலேயே, புதுகடன் கிடைத்துக் கொண்டே இருப்பதாலும், செயல்படாத தொகை முழுவதுமே, வங்கியின் வருடாந்திர கணக்குப் புத்தகத்தில் இருந்து தள்ளப்படுவதாலும், ஏற்கனவே வாங்கிய வங்கிக் கடனை திருப்பக்கட்டும் எண்ணமும் கடனாளிக்கு வருவதில்லை. கணக்குப் புத்தகத்தில் இருந்து தள்ளப்ப்ட்டதாலேயே அந்த்த் தொகையை கண்டிப்பாக வசூலிக்கும் எண்ணமும் வங்கிகளுக்கு வருவதில்லை எனும் குற்றச்சாட்டு எழுகிறது.முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் கே.சி.சக்ரவர்த்தி சொல்லும்போது, ஆவணப்படி ரைட் ஆப் செய்யப்பட்ட கடனை, ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட கடனை வசூலித்தால் வங்கிக்கு இன்செண்டிவ் எதுவும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.மேலும்கடனைதிருப்பிச்செலுத்தாமைக்காக தண்டிக்கப்பட்டவர்கள்சுமார் 1.14 சதவீதம் மட்டுமே என்பதும் கவனத்திற்குரியது.நலிந்தவங்கிகளைநேர்செய்வதற்கான விதிகளை, ரிசர்வ் வங்கியின் கைட்லைன்ஸ் தெளிவாக விளக்குகிறது.இதுதொடர்பானமேல்தகவலுக்கு: ரிசர்வ் வங்கியின் Master Circular on Prudential Norms on Inome Recognition, Asset Classification and Provisioning-Pertainint to Advances” -ன் பிரிவுகள் 3.5 (Computation of Non-Performing Assets levels), 5.9 (Guidelines for Proisions under Spcial Circumstances)மற்றும் 5.10 பிரிவுகள். - ஹன்ஸா ஹன்ஸா (வழக்கறிஞர்)legally.hansa68@gmail.com

வாசகர் கருத்து

SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-ஜன-201920:18:05 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN வங்கி கடன் எதற்காக கொடுக்கிறதோ அச்செயல் அப்பணத்தை கொண்டு செய்யப்படுகிறதா. தவறாக பயன்படுத்தப்படுகிறதா என கண்காணித்தால் கடன் வாரா கடனாக நிலுவையாக இருக்க வாய்ப்பில்லை. பொய் ஆவணங்களை நம்பி (கமிஷன் பெற்றுக்கொண்டு )கடன் கொடுத்தால் இப்படித்தான் திரும்ப செலுத்தாமல் கடன் தள்ளுபடி என்ற செய்தியை எந்த அரசியல் கட்சி அறிவிக்குமோ என எதிர்பார்த்திருப்பர் கட்டாமல். அட்ஜஸ் கடனே அளிக்கக்கூடாதுங்க . அது ஏமாற்ற வழிகாட்டுவதாவும் உதவுவதாகவும் அமைந்திடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X