தமிழகத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில், சொத்து பரிமாற்ற பத்திரப்பதிவு முடங்கி உள்ளதால், அரசின் திட்டங்களுக்கு நிதி கிடைப்பது சிக்கலாகி உள்ளது.
நேரடி வருவாய்:தமிழகத்தில், சொத்து பரி மாற்ற ஆவணங்களை பதிவு செய்ய, 8 சதவீதம் முத் திரைத் தீர்வை, ஒரு சதவீதம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
2011 நிலவரப்படி, ஆண்டுக்கு, 35 லட்சம் பத்தி ரங்கள் பதிவாகி, 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. மக்களிடம் இருந்து அரசுக்கு நேரடியாக கிடைக்கும் இந்த.
குறையத் துவங்கியது. இதனால், ஆண்டு தோறும் பட்ஜெட்டில், பத்திர பதிவு வருவாய் இலக்கை, அரசு குறைத்து வருகிறது. அத்துடன், மனை விற்பனை தொடர்பான, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல் படுத்துவதில் உள்ள குளறுபடி, ரூபாய் நோட்டு கட் டுப்பாடு போன்ற காரணங்களால், சொத்து பரிமாற்ற பத்திரங்கள் பதிவுக்கு வருவது, முற்றிலும் முடங்கி உள்ளது.
500 பத்திரங்கள்
இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரியல் எஸ்டேட் சந்தை நிலவரத்தில் ஏற்படும் மாற்றங்களால், பத்திரப்பதிவு வருவாய் மாறுவது இயல்பு தான்.ஆனால், சில ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், தற்போது பத்திரப்பதிவில் பெரிய
வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
தினமும், 200 பத்திரங்கள் பதிவாகும் சார்
பதிவாளர் அலுவலகங்களில், தற்போது,50 பத்திரங்கள் கூட வருவது இல்லை. சில மாதங்களாக, பதிவுத்துறை வருவாய், மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது.
திருமணம், நிறுவனங்கள், சங்கங்கள், கூட்டு
ஒப்பந்தங்கள், செட்டில்மென்ட் போன்ற பத்தி ரங்கள் மட்டுமே தற்போது பதிவாகின்றன. இதே நிலை தொடர்ந்தால், அரசு திட்டங்களுக் கான நிதி ஆதாரம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது.
இதை, பதிவுத்துறை சார்ந்த பிரச்னையாக பார்க்காமல், நிதித்துறை தலை யிட்டு சிக்கலை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (38)
Reply
Reply
Reply