புதுடில்லி:கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக,
500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என,
அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த அதிரடி, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை அளிக்க உள்ளது.
கறுப்புப் பணத்தை ஒடுக்கவும், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என, சமீபத்தில், பிரதமர் மோடி அறிவித்தார்.அதைத் தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு, வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.,களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; பல்வேறு
கட்டுப்பாடுகளால் மக்களும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், அரசுக்கு
எதிரான விமர்சனங்களை தவிடு பொடியாக்க வும், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகை யிலும், புதிய அறிவிப்பை பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களில்
அதாவது, கணக்கில் எந்த இருப்பும் இல்லாத, ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு துவங்கியுள்ளவர்களுக்கு, தலா 10 ஆயிரம்
ரூபாய் டிபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட் டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளது; அடுத்த சில நாட்களில், இதற்கான அறிவிப்பு வெளி யாகும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜன்தன் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு வங்கிக் கணக்கு துவக்கப்பட்டது. அவ்வாறு துவக் கப்பட்ட, 25 கோடி கணக்குகளில், 5.8 கோடி கணக் குகள், ஒரு ரூபாய் கூட கணக்கில் இருப்பில் இல்லாத கணக்குகளாக துவக்கப்பட்டன.
இந்த, 5.8 கோடி கணக்குகளில், தலா, 10 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்கும் வகையில், மத்திய அரசு டிபாசிட் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தற்போதைய அறிவிப்பால், நாட்டில் மக்களி டையே ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், எதிர்க்கட்சி களின் விமர்சனத்தையும் சமாளிக்க முடியும்.
காங்., விமர்சனம்
கடந்த லோக்சபா தேர்தலின் போது, வெளிநாடு
களில் உள்ள கறுப்புப் பணத்தை கொண்டு வந்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என, மோடி அறிவித் திருந்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. இந் நிலையில், கறுப்புபணத்தை ஒடுக்கும் நட வடிக்கை யாக, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஜன்தன் வங்கிகணக்கில், பணத்தை டிபாசிட் செய்வதன் மூலம், தன் தேர்தல் வாக்குறுதி களை, பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்பதை மக்களிடையே கொண்டு செல்ல முடியும்.
எப்படி சாத்தியம்?
ஜன்தன் வங்கி கணக்குகளில், தலா, 10 ஆயிரம்
ரூபாய் டிபாசிட் செய்யும் திட்டத்துக்கு, 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இருப்பி னும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், மூன்று லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளியே வரும் என, மத்திய அரசு எதிர்பார்க் கிறது. அதில் இருந்து, இந்த பணம் டிபாசிட் செய்யப்படலாம்.
இதன் மூலம், மேல்தட்டு மக்களுக்கான கட்சி என்பதில் இருந்து விலகி, சாமானிய, ஏழை, எளிய, விவசாயிகளுக்கான கட்சியாக, பா.ஜ., தன்னை முன்னிலைப்படுத்த முடியும்.
ஆனந்த அதிர்ச்சி
மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவும், தன் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடரவும், இந்த திட்டம் வெகுவாக உதவும் என, மோடி உறுதியாக நம்புகிறார்.
அதன்படி, ஜன்தன் வங்கிக் கணக்கில், தலா, 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என்ற ஆனந்த அதிர்ச்சி திட்டம் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (64)
Reply
Reply
Reply