பொது செய்தி

இந்தியா

ஜாகிர் நாயக்கின் இணையதளங்களை முடக்கியது அரசு

Added : நவ 21, 2016 | கருத்துகள் (46)
Advertisement
ஜாகிர் நாயக், இணையதளங்கள், தேசிய புலனாய்வு குழு

புதுடில்லி : இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் அடங்கிய இணையதளங்கள், சமூக வலை தளங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.
மத போதகரான ஜாகிர் நாயக், மறைமுகமாக பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான மும்பையில் உள்ள 10 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத லட்சகணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ‛இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்' என, ஜாகிர் நாயக்கிற்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜாகிர் நாயக் பேசிய உரைகள் அடங்கிய இணையதளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கி உள்ளது. அவரது புகழை பரப்புவதற்காக துவங்கப்பட்ட பேஸ்புக் பக்கம், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக்கின் பேஸ்புக் பக்கத்தை முடக்குவது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தினரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahumathullah - Riyadh,சவுதி அரேபியா
21-நவ-201618:55:23 IST Report Abuse
Rahumathullah தினமலமே உன்னுடைய காவி சிந்தனையை இதன் மூலம் காட்டுகிறாயா.. என்றும் வெற்றி உண்மையாளர்களின் பக்கமே.. உங்களை போன்றோர் ஒரு முஸ்லிம்மை எதிர்கலாம், இஸ்லாத்ததை எதிர்க்க முடியாது. அவருடைய பேச்சில் ஒரு தவறான கருத்துக்கள் இருந்தாலும் நீ அதனை ஆதாரத்துடன் எடுத்துவை பாப்போம் உன்னால் முடியாது ( பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜாகிர் நாயக் பேசிய உரைகள் அடங்கிய இணையதளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கி உள்ளது ).
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
21-நவ-201618:39:16 IST Report Abuse
Chandramoulli காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட முடிவு . இருந்தாலும் நல்லதே .
Rate this:
Share this comment
Cancel
dharma - chennai,இந்தியா
21-நவ-201617:32:28 IST Report Abuse
dharma கிறித்தவ மத பிரசாரகர்கள் ரொம்ப யோக்கியமானவர்களா அவர்கள் நிறைய தப்பு செய்கிறார்கள். நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானவர்களை வசியம் செய்து மதம் மாற்றுகிறார்கள்.எனக்கு தெரிந்து நிறைய பேர் கிருதவத்திற்குத்தான் மாறுகின்றனர்.இது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அவர்களை விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் டார்கட் வைப்பது ஏன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X