மதுரை: மதுரையில் உள்ள ஒரு மாலில் பெண்களுக்கு தனியாக பார் துவக்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலதளங்களி்ல் பரபரப்பாக பரவியது. ஆனால் இதை நிர்வாகம் மறுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள விஷால் டி மால் என்ற மாலில் 'Ladies Night' என்ற பெயரில் பெண்களுக்கான மதுபானக் கூடம் திறக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக, அந்த ரெஸ்ட்டாரண்டின் ஜெனரல் மேனேஜர் வீர ராஜேஷ் கூறியதாவது: இது தொடர்பாக, வெளியான விளம்பரத்தில் டிரிங்க்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரிங்க்சிற்கு ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. குடிப்பது அனைத்தும் டிரிங்க்ஸ்தான். மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே டிரிங்க்ஸ் வகையில்தான் வரும். குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் வந்தால் அவர்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளோம். பெண்கள் தனியா வரமாட்டார்கள். தங்களது குழந்தை, குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்து வரவே விருப்பப்படுவார்கள். இதனால் தான் அந்த விளம்பரம்.
கேடு விளைவிக்க மாட்டோம்:
மதுரையின் மானத்துக்கு ஒருபோதும் கேடு விளைவிக்க நாங்கள் நினைத்ததில்லை. எல்லா ஊரிலும் மால், ரெஸ்ட்டாரண்ட் என வளர்ந்துகொண்டிருக்கும்போது, மதுரையில் ஏன் வரக்கூடாது என்றுதான் விஷால் ஹோட்டல்ஸ் தொடங்கி நடத்திவருகிறோம். ஆனால் மதுரையின் கலாச்சாரத்துக்கு எந்தவிதத்திலும் பங்கம் வர எண்ணியதில்லை. இந்த சம்பவத்தால் மதுரை மக்களின் மனதை எந்தவிதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம். மதுரையின் மானத்துக்கு எங்களால் எந்தச் சூழ்நிலையிலும், எப்போதும் களங்கம் வராது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE