தமிழ்நாடு

பேய் விரட்டுவதாக இளம் பெண்ணுக்கு சூடு: பாலியல் தொல்லை: மந்திரவாதி ஓட்டம்!

Updated : நவ 25, 2016 | Added : நவ 21, 2016
Advertisement
பேய் விரட்டுவதாக இளம் பெண்ணுக்கு சூடு: பாலியல் தொல்லை: மந்திரவாதி ஓட்டம்!

புழல்:பேய் விரட்டுவதாக கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பெண்ணின்உடலில் சூடு போட்ட,போலி மந்திரவாதி உட்படஇருவரை, போலீசார்தேடுகின்றனர்.

சென்னை, புழல் பகுதியைச்சேர்ந்தவர் விஜயகுமார், 36; தொழிலாளி. இவரது மனைவி, ராஜேஸ்வரி, 30. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர்.

சிறப்பு பூஜை:ராஜேஸ்வரி, மன அழுத்தம் காரணமாக, கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது என நினைத்த விஜயகுமார், அதே பகுதியைச் சேர்ந்த, மந்திரவாதி சந்திரன் என்பவனின் உதவியைநாடியுள்ளார்.அதற்கு அவர், '50 ஆயிரம் ரூபாய் செலவாகும். 48 நாட்களில் உன் மனைவி குணமாகிவிடுவார்' என, நம்பிக்கை அளித்திருக்கிறான். அதற்கு முன்பணமாக, 5,000 ரூபாயும் பெற்றுள்ளான். நேற்று முன்தினம், விஜயகுமார், தன் மனைவியை,சந்திரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். 'ராஜேஸ்வரியை பிடித்துள்ள பேயை விரட்ட, சிறப்பு பூஜை செய்ய போகிறேன்' எனக் கூறி, அப்பெண்ணை அழைத்துக்கொண்டு, சந்திரன் உள்ளேசென்றுள்ளார். அவனது உதவி யாளன் நவீன், வீட்டிற்குள் இருந்தான். விஜயகுமார், வீட்டின் வெளியே நின்றிருந்தார்.

அட்டகாசம்:இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போலி மந்திரவாதிசந்திரனும், நவீனும், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்று உள்ளனர். அதற்கு, ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும், ராஜேஸ்வரியின் உடலில் சூடு போட்டுள்ளனர். அலறி துடித்த அவர், வெளியில் ஓடி வந்து, கணவனிடம்,மந்திரவாதியின் அட்டகாசம் பற்றி கூறியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த விஜய குமார் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தோர், அவர்களை பிடிக்க முயன்ற போது, போலி மந்திரவாதியும், அவனது உதவியாளனும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து,புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X