'யார் சொன்னால் என்ன? தகவல் தானே முக்கியம்!'

Added : நவ 23, 2016 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பான அறிவிப்புகளை, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஏன் தெரிவிப்பதில்லை?' என்ற கேள்விக்கு, ''யார் சொன்னால் என்ன? தகவல் தானே முக்கியம்,'' என, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.செல்லாத ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, பிரதமர் அறிவிப்பு வெளியிட்டது முதல், அது தொடர்பான
'யார் சொன்னால் என்ன? தகவல் தானே முக்கியம்!'

புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பான அறிவிப்புகளை, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஏன் தெரிவிப்பதில்லை?' என்ற கேள்விக்கு, ''யார் சொன்னால் என்ன? தகவல் தானே முக்கியம்,'' என, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
செல்லாத ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, பிரதமர் அறிவிப்பு வெளியிட்டது முதல், அது தொடர்பான பல்வேறு முடிவுகளையும், அறிவிப்புகளையும், சக்திகாந்த தாஸ், தினமும் வெளியிட்டு வருகிறார்.
'ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஏன், இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடுவது இல்லை?' என, நிருபர்கள் கேட்டதற்கு, சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
இதில் எந்த குழப்பமும் இல்லை; ஏன் தேவையில்லாமல் நோண்டுகிறீர்கள்? மத்திய அரசின் சார்பில் தான், நான் அறிவிப்புகளை வெளியிடுகிறேன். மக்களுக்கான இந்த சலுகைகள் தான் முக்கியமே தவிர, அதை யார் தெரிவிக்கிறார் என்பதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maryjohnson - Chennai,இந்தியா
24-நவ-201610:58:07 IST Report Abuse
maryjohnson அன்புள்ள அய்யா, இவர் சொன்ன கருத்து தவறு. அவரவர்க்கென்று ஒரு பணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதலால் வங்கி கவர்னர் இதை சொல்லியிருக்க வேண்டும். பிரதமர் பணிகளில் ஒன்றினை கவர்னர் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருககுமா. அவரவர்க்கென்று பணிகள் வரையறுத்திருக்கும் போது அதன்படி செயல்பட்டால்தான் நல்லது. அதுவே நல்ல நாட்டின் சமாதானம் அமைதிக்கும்
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
24-நவ-201610:53:08 IST Report Abuse
ganapati sb சட்டப்படி 8 ம் தேதி பின் பழைய நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி 6 மணிக்கு செய்து 6.30 க்கு பிரதமருக்கு அனுப்பிவிட்டது. இது சமயம் முப்படை தளபதிகள் சந்திப்பு, அமைச்சரவை சந்திப்பு என நிகழ்த்திவிட்டு பிரதமர் 8 மணிக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் நிதியமைச்சர் பொருளாதார செயலாளர் முன்னிலையில் இதை நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கிறார் . கவர்னர் dec 30 க்குள் புதிய நோட்டு அச்சடிப்பது அதை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்புவது என busy ஆக உள்ளார் . நிதமைச்சரோ GST budget என busy ஆக உள்ளார். அவ்வப்போது நடைமுறைக்கேற்ப செய்யப்படும் மாற்றங்களை சக்திகாந்த அறிவிப்பதே நல்லது. இதில் குறையேதும் இல்லை . தொடரட்டும் இந்த குழப்பமில்லாத one point communication பாணி .
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
24-நவ-201610:02:09 IST Report Abuse
நக்கீரன் சரிதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X