"மைக்' இல்லாமல் கிரைம் பார்ட்டி புலம்பல்! மைக் கிடைக்காமல் "மாஜி' புலம்பல்!

Added : நவ 29, 2016
Advertisement
""சோதனை மேல் சோதனை போதுமடா சாமிங்கிற சினிமா பாட்டில் வரும் வரிகள், எந்த காலத்துக்கும் பொருந்தும்,'' என்றபடி, சித்ரா உள்ளே நுழைந்தாள்.""வா சித்ரா. அப்படி யாருக்கு, இப்போது என்ன சோதனை வந்திருச்சு,'' என்று கேட்டபடி, காபி கலந்து வந்து கொடுத்தாள் மித்ரா.""நம்ம சிட்டி போலீசுக்கு தான், சோதனை மேல் சோதனை. சிட்டியில குற்றங்கள் அதிகமாக நடக்குது. விசாரணைகளும்
"மைக்' இல்லாமல் கிரைம் பார்ட்டி புலம்பல்! மைக் கிடைக்காமல் "மாஜி' புலம்பல்!

""சோதனை மேல் சோதனை போதுமடா சாமிங்கிற சினிமா பாட்டில் வரும் வரிகள், எந்த காலத்துக்கும் பொருந்தும்,'' என்றபடி, சித்ரா உள்ளே நுழைந்தாள்.
""வா சித்ரா. அப்படி யாருக்கு, இப்போது என்ன சோதனை வந்திருச்சு,'' என்று கேட்டபடி, காபி கலந்து வந்து கொடுத்தாள் மித்ரா.
""நம்ம சிட்டி போலீசுக்கு தான், சோதனை மேல் சோதனை. சிட்டியில குற்றங்கள் அதிகமாக நடக்குது. விசாரணைகளும் தேக்கமடைந்து கிடக்குது,'' என்றாள் சித்ரா.
""அதான் இப்போ நெறையா போலீஸ், புதுசா போட்டிருக்காங்களே. அப்புறமும் என்ன பிரச்னை,'' என்று, ஆச்சரியத்தோடு மித்ரா கேட்டாள்.
""குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது சட்டம் ஒழுங்கு போலீசாருரோட வேலை. குற்றங்கள் நடந்தா, அதை கண்டுபிடிச்சு, குற்றப்பிரிவு போலீசாரோட வேலை. சட்டம் ஒழுங்கு பிரிவில் போலீசார் இருந்தாலும், ரோந்து, கண்காணிப்பு வேலைங்க, ரொம்ப சுணக்கமாகவே இருக்கு. அசம்பாவிதம் நடந்தா, ஆள் மாத்தி ஆள், அடுத்தவர் மீது பழியைப் போட்டு தப்பிக்க பார்க்கறாங்க,''என்று சித்ரா கூறினாள்.
""சரி! குற்றப்பிரிவு போலீசாருங்தானே, குற்றச்சம்பவங்களை கண்டுபிடிக்கணும்,''என்று, மித்ரா கேட்டாள்.
""அவங்க மட்டும் எங்கே போய் கண்டுபிடிப்பாங்க? கிரைம் டீமுக்கு ஆள் கிடையாது. தனி இன்ஸ்பெக்டர் கிடையாது. அதைவிட கொடுமை, அவங்களுக்கு போலீஸ் "மைக்'கே கிடையாதுன்னா பார்த்துக்கோ. பிறகு எப்படி, அவங்க வேலை செய்ய முடியும்,'' என்றாள் சித்ரா.
""அது நியாயந்தானே. இதெல்லாம், அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன,'' என்று, மித்ரா கேட்டாள்.
""சி.எம்., சிறையில் இருந்தப்போ, வேண்டுதல் மொட்டை எல்லாம் போட்டாங்களே சிட்டி மம்மி; இப்போது, அம்மா ஹாஸ்பிடலில் ரெண்டு மாசமா இருந்தும் கூட, எதையும் செய்யாம, எங்கும் நேர்ந்துக்காம இருக்காங்களே. என்னன்னு ஏதாவது தெரியுமா' என்று, சித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""உள்ளாட்சி பதவி முடிஞ்ச பிறகு, கட்சி நிகழ்ச்சிகளில கூட, அவங்க தலை காட்டலையே. கட்சிக்காரங்க நடத்தின வேண்டுதல் பூஜைகளில் கூட, கலந்துக்காம ஒதுங்கி நின்னாங்க. சி.எம்., குணமடைஞ்சு, அவரை சந்தித்த பிறகுதான், கட்சி பணிகளில் ஈடுபடறதுன்னு முடிவில இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
""ஆமா! மாவட்டத்தை எதிர்த்து பாலிடிக்ஸ் பண்ணுறதுன்னா, "பேஸ்மெண்ட்' வலுவா இருக்கணுமில்ல. பார்ப்போம், அடுத்த என்ன நடக்குதுன்னு பார்ப்போம்,'' என்றாள் சித்ரா.
""ரூபாய் நோட்டு மாத்தறதில், பலரும் பல விதமா லாபம் பார்த்தாங்களே; அந்த விஷயம் தெரியுமா,'' என்று மித்ரா அடுத்த விஷயத்துக்கு நுழைந்தாள்.
""அது தான் பரவலா நடந்து முடிஞ்சிருக்கே. புதுசா என்ன இப்ப இருக்கு,'' என்று, ஆர்வத்தோடு சித்ரா கேட்டாள்.
""உள்ளாட்சி அமைப்புகளிலே, நிலுவை வரி, மின்வாரியத்தில் மின் கட்டணம் வசூலிக்க, அரசு அனுமதி கொடுத்திருக்கில்ல. அதிலே, மீதி சில்லரை தராமல், வசூல் செய்த ஊழியர்கள், லம்பா ஒரு அமவுன்ட் பார்க்கறாங்களாம். உதாரணமா, 850 ரூபான்னா, ஆயிரம் ரூபாய்; 1300ன்னா, 1500 ரூபாயின்னு, ரவுண்ட் செஞ்சு வாங்கி, தங்களோட பையை நிரப்பிகிட்டாங்க. மீதி சில்லரை கேட்டா, "100 ரூபா நோட்டு கொண்டு வாங்க; எங்ககிட்ட சில்லரை இல்லை'ன்னு சொல்லி, திருப்பி அனுப்பறாங்களாம். பணம் கட்ட வந்தவங்க, வேற வழியில்லாம, தலைவிதின்னு நொந்துகிட்டு, சில்லரை கேட்காம போறாங்க,'' என்று மித்ரா கூறினாள்.
""குழந்தையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடமாதிரி செய்யறாங்க,'' என்று சித்ரா, அடுத்த விஷயத்துக்கு தாவினாள்.
""ஏதோ பெரிய மேட்டர் போலிருக்கு,'' என்று, ஆர்வமாக மித்ரா கேட்டாள்.
""அர்பன் பாங்க் கூட்டத்தை சொல்றேன். நகர வங்கிய பொறுத்த வரை, தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஏழாம் பொருத்தம் தான். ஆரம்பத்திலிருந்தே, இதே போராட்டம். எல்லாத்துக்கும் சேர்த்து, மகாசபை கூட்டத்துல, நிர்வாகிகள் வெளுத்து வாங்கறாங்க. தலைவர் எதுவும் பேசறதில்லை. அதுக்கு பதிலா, கம்யூ., கட்சிகளை சேர்ந்த இயக்குனர்கள், வங்கி அதிகாரிகள் செயல்பாடு பத்தி, நேரடியாக கண்டிச்சு பேசிடறாங்க. போன வாரம் நடந்த கூட்டத்துல கூட, கம்யூ., கட்சி இயக்குனருங்க, எம்.டி.,யை தாக்கி பேசினது பரபரப்பாகிடுச்சு. ஒரு கட்டத்துக்கு மேல, தலைவர் குறுக்கிட்டு சமாதானம் செஞ்சாரு,'' என்றாள் சித்ரா.
""இதைத்தான் அப்படி சொன்னீங்களா?. நான் கூட, ரூபாய் நோட்டு விவகாரத்தை சொல்றீங்கனு நினைச்சேன்'' என்றாள் மித்ரா.
""அது தான் எல்லாருக்கும் பழகிப்போச்சே?'' என்றாள் சித்ரா.
""சரியா சொன்னீங்க. ஒரு வாரம் வரைக்கும், ஜனங்க வரிசையில நின்னு, பணத்தை மாத்தியிருக்காங்க. அப்புறம், கம்பெனி முதலாளிங்க கொடுத்த
பழைய ரூபாய் நோட்டை மாத்தினாங்க. கையிலே, அளவா காசு இருந்ததால, வழக்கம் போல ஆடம்பர செலவு எதுவும் பண்ண முடியல. இப்ப ஓட்டல்,
மளிகை கடை, பெட்ரோல் பங்க்னு எல்லா இடத்துலயும், மக்கள் டெபிட் கார்டை தேய்க்க பழகீட்டாங்க, 500 ரூபாய் நோட்டும் வர ஆரம்பிச்சுடுச்சு. அதனால, இந்த வாரத்திலே சகஜநிலை திரும்பிடுமுன்னு நினைக்கலாம்,'' என்றாள் மித்ரா.
""திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கற பெரிய கடைக்காரர் ஒருத்தரு, கோடிக்கணக்குல கறுப்பு பணம் வச்சிருந்தாராம். பணம் செல்லாதுனு அறிவிப்பு வந்ததுல இருந்து தூங்காம புலம்பிட்டே இருந்து, படுக்கையில விழுந்திட்டாராம். அதை பார்த்தாவது, மத்த "முதலை'களும் திருந்தணும். அதைத்தானே, பிரதமரும், நல்லவங்களும் விரும்பறாங்க,'' என, சித்ரா கூறினாள்.
""வி.ஏ.ஓ.,க்கள் "பார்ட்டைம்' வேலை மட்டுந்தான் பார்க்கறாங்கனு, கலெக்டர்கிட்ட விவசாயிங்க மனு கொடுத்திருக்காங்க. எப்ப போனாலும் தாலுகா ஆபீஸ் வேலைனு சொல்லிட்டு, பார்ட்டைம்' வேலை பார்க்கறங்கனு, தெற்கு தாலுகாவ சேர்ந்த விவசாயிகள், கலெக்டர் கிட்டயே புகார் பண்ணிட்டாங்க'' என்றாள் மித்ரா.
""புகார்னு சொன்னதும் ஞாபகம் வருது. நல்லூரை சேர்ந்த ஒருத்தரு, அம்மா திட்ட முகாம் தொடர்பா கலெக்டருகிட்ட புகார் செஞ்சிருக்கார். விசாரிச்சு பார்த்தப்ப, அவரோட கோரிக்கையை செஞ்சு கொடுக்காததால, பொய் புகார் கொடுத்தது தெரிஞ்சது. அப்புறமா, சம்பந்தப்பட்ட நபரே, "மேல் நடவடிக்கை தேவையில்லை'னு, தாலுகா ஆபீசுல போயி எழுதி கொடுத்துட்டு சமாதானம் ஆகிட்டாராம். பொய் புகார் கொடுக்கறவங்க மேல, உடனடியா நடவடிக்கை எடுக்கனும்னு, அலுவலர்கள் "கண்டிஷன்' போட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""மாநகர் மாவட்டத்துல எதுவும் இல்ல; புறநகர் மாவட்டத்துல மட்டும், வாரத்துக்கு மூணு அரசு விழா நடக்குதுனு, ஆளும்கட்சிக்காரங்களே மனசுக்குள்ள குமுறிட்டு இருக்காங்க. இப்ப புறநகர் மாவட்டத்தோட கை ஓங்கியிருக்கறதால, அமைச்சர் சொல்றபடி தானே விழா நடக்கும்? அதனாலதான், சின்ன
சின்ன நிகழ்ச்சியா இருந்தாலும், "மலை' தாலுகாவுல தானே நடக்குது? இதனால, மேடை கிடைக்காம, மைக் கிடைக்காம, மாஜி ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம். அதேமாதிரி காலை 8:00 மணிக்கு பொறப்பட்டாத்தான் அங்கபோய் சேர முடியுதுன்னு அதிகாரிகளும் பொலம்புறாங்க, என்றவாறு மார்க்கெட்டுக்கு கிளம்பினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X